ஒருவருடைய வாழ்க்கையில் இருக்கும் முக்கால்வாசி பிரச்சினைக்கு காரணமாக விளங்குவது பணம் மட்டுமே. பணம் நம்மிடம் எவ்வளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு நமக்கு மதிப்பும் மரியாதையும் மேலோங்கும். சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தையும் நம்மால் அடைய முடியும். வீட்டிலும் சரி சமுதாயத்திலும் சரி எந்த ஒரு நல்ல விஷயத்தை செய்வதாக இருந்தாலும் அந்த விஷயத்தை செய்வதற்கு நம்முடைய மனம் எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அளவிற்கு நம்முடைய பையில் இருக்க்கும் பணமும் முக்கியமானதாக திகழ்கிறது. அப்படிப்பட்ட பணத்தை தடையின்றி நம்மிடம் வர வைக்கவும் குறையாத செல்வத்தை அடையவும் செய்ய வேண்டிய சுலபமான தாந்திர பரிகாரத்தை குறித்து தான் இந்த ஆன்மீகம் பற்றிய பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
குறையாத செல்வத்தை அடைய பரிகாரம் பொதுவாக பணவரவு அதிகமாக வர வேண்டும் என்றால் அதற்கு மகாலட்சுமியின் அருள் கிடைக்க வேண்டும் என்று எல்லோருக்கும் தெரியும். அப்படி மகாலட்சுமியின் அருளை அடைவதற்கு என்று சில பொருட்கள் உள்ளன. அந்த பொருட்களை நம்முடன் வைத்திருந்தாலே நமக்கு மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். அதன் மூலம் பண வரவும் உண்டாகும். இப்படி பல பொருட்கள் உள்ளன. நம்மில் பலரும் இந்த பொருட்களை பயன்படுத்தி செல்வ வளத்தை மேம்படுத்தியும் இருப்பார்கள். அந்த வகையில் இன்றைய தினம் நாம் சில பொருட்களை குறித்து தான் பார்க்கப் போகிறோம்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
vatratha selvam pera
ஒரு சின்ன துணிப்பையை எடுத்துக் கொள்ளுங்கள். அன்றைய காலத்தில் நமது முன்னோர்கள் சுருக்குப்பை ஒன்றை வைத்திருப்பார்கள் பார்த்திருக்கிறீர்களா? அந்த பை போலவே ஒரு பையை எடுத்து அதற்குள் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு, 4,5 மிளகு, பச்சை கற்பூரம், துளசி இலை மற்றும் மஞ்சள் பொடி இவை எல்லாவற்றையும் அதனுள் போட்டு அந்த துணி பையை தைத்து விடுங்கள். நாம் நம்முடைய வீட்டில் எந்த இடத்தில் எல்லாம் பணம் புழக்கம் இருக்கிறதோ அந்த இடத்தில் எல்லாம் இந்த துணிப்பையை வைக்க வேண்டும். அதற்கேற்றது போல எத்தனை வேண்டுமோ அந்த எண்ணிக்கையில் இதை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிங்க : கஷ்டங்கள் அடியோடு விலகி போக ஆடி ஞாயிற்றுக்கிழமை வழிபாடு
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இந்த பொருட்களை சமையல் அறையிலோ அல்லது வீட்டில் பூஜை அறையிலோ வைக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் சிறிய மண்பானையை அதாவது சிறிய மண் குடுவை வாங்கி அதில் வைத்து கொள்ளலாம். அது இன்னும் அதிக பலனை கொடுக்கும். இந்த மண்பானையில் இருக்கும் பொருட்களை யாரும் பார்க்கக்கூடாது என்று நினைத்தால் அதன் மீது செயற்கை மலர்களை வைத்து ஒரு பூத்தொட்டி போல் செய்து வைத்து கொள்ளலாம். இதில் இருக்கக்கூடிய இந்த பொருட்கள் எல்லாமே மகாலட்சுமியின் அம்சம் கொண்ட பொருட்களாக திகழ்கிறது. இந்த பொருட்கள் அனைத்தும் 6 மாதம் வரை பலன் அளிக்கும். 6 மாதத்திற்கு ஒருமுறை இந்த பொருட்கள் எல்லாவற்றையும் ஓடுகின்ற தண்ணீரில் போட்டுவிட்டு புதிதாக வேறு பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க : Iniya Name Meaning in Tamil | இனியா பெயருக்கான விளக்கம்
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
நம்மை சுற்றி இருக்கக்கூடிய எதிர்மறை சக்திகளை நீக்கி நேர்மறை சக்திகளை அதிகரிக்கவும், மகாலட்சுமி அன்னையின் அருளை பரிபூரணமாக பெறவும், பணவரவில் இருக்கும் தடைகளை நீக்கவும்,குறையாத செல்வத்தை பெறவும் இந்த சுலபமான தாந்திரீக பரிகாரம் பயன்படும் என்ற தகவலை சொல்லி இந்த பதிவினை நிறைவு செய்து கொண்டு அடுத்த ஆன்மீக தகவலில் பார்ப்போம்.