Varalakshmi mother became an actress : நடிகர் சரத்குமாரின் முதல் மனைவி சாயாதேவி. நடிகை வரலட்சுமியின் அம்மா. அவர் தற்போது சினிமா நடிகை ஆகி உள்ளார். பாலா இயக்கும் ‘வணங்கான்’ படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்து வருகிறார். சாயாதேவி உயர் போலீஸ் அதிகாரியின் மகளான இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர்.

இவர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 2 பெண் குழந்தைகளுக்கு அம்மாவான பிறகு சரத்குமாரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். சாயாதேவி ‘மிஸ் பெங்களூரு’ பட்டம் வென்று சமூக ஆர்வலராக பணியாற்றி வருகிறார். தற்போது நடிகையாகி எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதையும் படிங்க : காலிஃபிளவர் ஊறுகாய் செய்வது எப்படி..?
நடிகை ஆனது பற்றி சாயாதேவி கூறும்போது : நான் தற்போது சேவ் சக்தி அறக்கட்டளை வாயிலாக பல சமூக சேவைகள் செய்து வருகிறேன். இந்த நிலையில்தான் எங்கள் நெருங்கிய குடும்ப நண்பர் பாலா இயக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. நீங்கள் தான் நடிக்க வேண்டும் என்று என்னை வற்புறுத்தி கேட்டார். அந்த கேரக்டரும் எனக்கு அதிகம் பிடித்திருந்தது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
ஆகவே அதில் நடிக்க ஒப்புக்கொண்டேன். என் குடும்பமே நடிப்புத் துறையில் இருந்தாலும், எனக்கு நடிப்பு புதுசு நான் நடிப்பதற்கு தயங்கினேன். என் மகள் வரலட்சுமி தான் தைரியம் தந்து நடிக்க வைத்தார். எனக்கு நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் தொடர்ந்து நடிப்பேன் என்றார்.
இதையும் படிங்க : GOAT VS விடாமுயற்சி ப்ரீ பிசினஸ்.. முந்துவது யார் ? அஜித்தா? விஜய்யா ? வெளியான தகவல்..!
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇