நடிகர் சரத்குமாரின் மகள் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவருக்கு சமீபத்தில் மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான நிக்கோலோ சச்தேவ் உடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. மேலும் தற்போது இவர்களின் நிச்சயதார்த்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது . சுப்ரீம் ஸ்டார் சரத்குமாருக்கு மருமகனாகவும் வரலட்சுமிக்கு கணவனாகவும் வந்துள்ள புது மாப்பிள்ளை யார்?

அவரது பின்னணி என்ன என்பதை பற்றிய பல கேள்விகள் ரசிகர்கள் மனதில் எழுந்திருக்கும். இப்படிபட்ட நிலையில் வரலட்சுமி சரத்குமாரின் வருங்கால கணவர் நிக்கோலை சச்சதேவ் பற்றிய பல்வேறு தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.தமிழ் சினிமா துறையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி படத்தில் அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். நடிப்பில் கலக்கும் வரலட்சுமிக்கு ஹீரோயின் பாத்திரம் பலனாகாததால், சர்க்கார், சண்டக்கோழி 2 ஆகிய படங்களில் மிரட்டலான வில்லி கேரக்டரில் நடித்து கலக்கிக் கொண்டிருந்தார்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இவ்வாறு தனக்கு கிடைத்த ஓரிரு பட வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருந்தார், ஆனால் அவருக்கு சமீபகாலமாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்து வந்தார். இப்படிபட்ட நிலையில், “பட வாய்ப்புகள் தான் கிடைக்கவில்லை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆக வேண்டியது தான்” என்று தான் பல நாட்களாக காதலித்து வந்தவரை கல்யாணம் செய்ய முடிவெடுத்திருக்கிறார் வரலட்சுமி.

இதையும் படிங்க : ஜப்பான் கனவு நிறைவேறியதால் ராஷ்மிகா மகிழ்ச்சி
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
மேலும் மகளின் விருப்பத்தின்படியே சரத்குமாரும் இருவருக்கும் நெருங்கிய உறவுகளின் மத்தியில் சிறப்பாக நிச்சயதார்த்தம் நடத்தியுள்ளார். இந்த நிச்சயதார்த்தத்தில் சரத்குமார் ராதிகாவிற்கு நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர். வரலட்சுமி நிச்சயதார்த்தத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ராதிகா மகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.
இதைத்தொடர்ந்து வரலட்சுமி நிச்சயதார்த்த புகைப்படங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்தது. இந்நிலையில் வரலட்சுமி திருமணம் செய்துக்கொள்ள போகும் மாப்பிள்ளை பற்றிய பல தகவல்கள் வெளியாகி இருக்கிறது. வரலட்சுமியின் மாப்பிள்ளை மும்பையில் art gallery நடத்தி வரும் பிசினஸ்மேன் என்று கூறப்படுகிறது.பெரிய தொழிலதிபர் என்றாலும் இவருக்கு ஏற்கனவே கவிதா என்பவருடன் திருமணம் நடந்து 15 வயதில் மகள் ஒருவர் இருக்கிறார் என்று சொல்கிறார்கள்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதையும் படிங்க : ஆர்டிக்கிள் 370 அவர்னஸ் படம் : பிரியாமணி
ஆனால் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டு தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.இது போன்ற நிலையில் வரலட்சுமி சரத்குமாருடன் திடீரென நிக்கோலோ சச்தேவ்க்கு காதல் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துப் போனது. இந்த காதலை வரலட்சுமி சரத்குமார் பெற்றோரிடம் கூறியுள்ளார். மேலும் அவர்கள் சம்பந்தத்துடன் மாப்பிள்ளையை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇