மயிலாடுதுறை அருகே பல்லவராயன் பேட்டையில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு இன்று ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் ஆலயத்தில் பெருமாள் சர்வ அலங்காரத்தில் பரமபத வாசல் வழியாக எழுந்தருளினார்.
Vaikuntha Ekadashi – ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள்
இன்று வைகுண்ட ஏகாதசி கடைபிடிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு புகழ் பெற்ற பெருமாள் கோயில்களில் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று மயிலாடுதுறை அருகே உள்ள பல்லவராயன் பேட்டை ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் வாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதனை முன்னிட்டு சிறப்பு அலங்காரம் ஸ்ரீநிவாச பெருமாளுக்கு செய்யப்பட்டு சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஸ்ரீனிவாசப்பெருமாள் உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளினார்.பக்தர்கள் அனைவரும் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் சாமி தரிசனம் செய்து வழிபட்டார்கள்.
Read Also : 2024 ஆம் ஆண்டில் 30 ஆண்டுகளுக்கு பின் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம்..
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Watch Video : நீங்கள் மறுபடியும் திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இருக்கா?