Vadivelu Supports Mari Selvaraj : அண்மையில் மிக்ஜாம் புயல் சென்னையை புரட்டி போட்டது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்களுடைய இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்தது. மக்கள் இதிலிருந்து மீண்டுவருவதற்கு முன்பாகவே தென் தமிழகத்தில் அதீத கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அந்த பகுதியில் இருக்கிற குடிமக்கள் வசிக்கக்கூடிய இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது.
சென்ற 17, 18 தேதிகளில் தூத்துக்குடி, கன்னியாகுமாரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் மிகவும் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பகுதிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளானது. இதனை அடுத்து பேரிடர் மீட்புக்குழு, காவல்துறையினர், தீயணைப்பு துறையினர்கள் ஆகியோர்கள் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார்கள்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்த மக்கள் அனைவர்களையும் மீட்டு பாதுகாப்பான இடங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டார்கள். இதனிடையில் தனது சொந்த ஊருக்கு இயக்குனர் மாரி செல்வராஜ் சென்றார். அவரும் தனது ஊரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் மீட்பு பணியில் ஈடுபட்டார். அதனை தொடர்ந்து தனது வலைத்தளத்தில் உதவியினை கேட்டு பதிவிட்டார்.
இந்நிலையில் அரசு அதிகாரிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார். இதை பற்றி சோஷியல் மீடியாக்களில் இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியிட்டு அது தீயாய் பரவியது. இதனை அடுத்து இயக்குனருடன் அமைச்சருக்கு என்ன வேலை என்று விமர்சனம் செய்தனர். இதற்காக சிலர் பதலடியும் கொடுக்கிறார்கள்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Read Also : ரசிகர்களின் கேள்விக்கு சமந்தா சொன்ன ஷாக்கிங் பதில் ..!
Vadivelu Supports Mari Selvaraj
இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் மிக்ஜாம் புயலால் அடித்து செல்லபட்ட மரங்களுக்கு பதிலாக 500 மரங்கள் கொடுக்கிற விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலு கலந்து கொண்டார். அதில் கலந்து கலந்து கொண்ட வடிவேலு, இயக்குனர் மாரி செல்வராஜ் குறித்த விமசர்சனத்திற்கு பதிலடி கொடுக்கிற வகையில் பேசியுள்ளார்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
அதில், இன்றைக்கு அரசாங்கம் எவ்வளவோ கஷ்டங்களையும், துயரங்களையும் சந்திச்சிட்டு வருகிறது. சென்னையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பை அரசியல் ஆக்கிவிட்டார்கள். ஆனால் தென்தமிழகத்தில் வந்த வெள்ளை பாதிப்பை அரசிலாக முடியவில்லை. ஏனென்றால் அங்கே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால் அங்கு ஏன் டைரக்டர் போறாருன்னு கேட்கிறார்கள். அது அவருடைய ஊர். பள்ளமான பகுதி எங்கு இருக்கு மேடான பகுதி இருக்கின்னு அவருக்கு தான் தெரியும். என் ஊர்ல வெள்ளம் வந்தால் நான் போகாமல் அப்புறம் யார் போவாங்க.
இதுல இன்னொருத்தர் உதயநிதி எதுக்காக அங்க போறார் என்று சொல்கிறார். அவர் அந்த இடத்திற்கு போனதாலதான் அங்கு அடுத்தடுத்த வேலைகள் நடந்தது. இதில் அரசியல் கிடையாது. நான் அரசியல் பேச விரும்பவில்லை. இயக்குனர் மாரி செல்வராஜ் எதுக்கு வந்தார் என்று கேட்கிறார்கள். அவர் அமெரிக்காவிலிருந்தா வந்திருக்கிறார். அரசாங்கத்தை குறை சொல்பவர்கள் சொல்லிகிட்டே இருக்கட்டும். இவ்வாறு மாரி செல்வராஜ் பற்றிய விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கின்ற விதமாக வடிவேலு பேசியுள்ளார்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Watch Video : நான் எதுக்காக பேட்டி கொடுக்கணும்..தன் தனிமைக்கான காரணத்தை சொன்ன நடிகை கனகா!