Thursday, July 10, 2025
Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்இரட்டை வேடத்தில் த்ரிஷா .. மெகா ஸ்டாருடன்.. ரசிகர்களுக்கு செக்க விருந்து

இரட்டை வேடத்தில் த்ரிஷா .. மெகா ஸ்டாருடன்.. ரசிகர்களுக்கு செக்க விருந்து

Date:

- Advertisement -

ஒரு படத்தில் முதன் முதலாக நடிகை த்ரிஷா இரட்டை வேடத்தில் நடித்து வருவதாகவும் அந்த படம் திரை உலகின் உச்சத்திற்கே அவரை கொண்டு செல்லும் என்று பேசப்படுகிறது.

தமிழ் சினிமாவில் கடந்த இருபது ஆண்டுக்கு மேலாக நாயகியாக நடித்து கொண்டுள்ள த்ரிஷா ’பொன்னியின் செல்வன்’ சினிமாவிற்கு பிறகு அவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக விஜய்யுடன் ’லியோ’ படத்தில் நடித்தார், அஜித் உடன் ’விடாமுயற்சி’ படத்திலும் நடித்து வருகிறார்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Trisha in double role
Trisha in double role

அது மட்டுமில்லாமல் கமல்ஹாசன் உடன் ’தக்லைஃப்’,சிரஞ்சியுடன் ’விசுவாம்பரா’ மோகன்லால் உடன் ’ராம்’ மற்றும் நிவின் பாலி உடன் ’ஐடென்டிட்டி’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் சிரஞ்சீவியின் ’விசுவாம்பரா’ படப்பிடிப்பில் சேர்ந்த த்ரிஷாவுக்கு, இயக்குனர் இன்ப அதிர்ச்சியாக அவர் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறியவுடன் அவர் ஆச்சரியம் அடைந்ததாகவும் அதே சமயம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க : சுவையாக ரசம் செய்யக்கூடிய முறை!

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Trisha in double role
Trisha in double role

சிரஞ்சீவி தான் இந்த படத்தின் கதாநாயகனாக இருந்தாலும் த்ரிஷாவின் இரட்டை வேடங்கள் தான் படத்தின் திருப்புமுனையை உண்டாக்கும் கேரக்டர் என்றும் நிச்சயம் த்ரிஷா இந்த பாத்திரத்தின் மூலம் பான் இந்திய நடிகையாக மாறுவார் என்றும் பேசப்படுகிறது. மொத்தத்தில் த்ரிஷாவுடன் நடித்த நடிகைகள் அம்மா, அக்கா, அண்ணி வேடங்களில் நடித்துக் கொண்டுள்ள நிலையில் நயன்தாரா மட்டுமே ஓரளவுக்கு தாக்குப் பிடித்து த்ரிஷாவுக்கு ஈடாக வந்து கொண்டிருக்கிறார்.

ஆனாலும் த்ரிஷா திரையுலகின் உச்சத்தை நோக்கி சென்று கொண்டுள்ள நிலையில் நயன்தாராவும், த்ரிஷாவை எட்டிப் பிடிக்க முடியாது என்று தான் கூறுகிறார்கள்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதையும் படிங்க : 15 வயது மகனின் தந்தைக்கு 2 வது மனைவியாகும் வரலட்சுமி சரத்குமார்!

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories