Tomato Kurma : இன்றைய தினம் நம் வீட்டில் தக்காளி குருமா செய்வது எப்படி என்று இந்த பகுதியில் பார்ப்போம். நம் வீட்டிற்கு திடீரென்று விருந்தினர்கள் யாராவது வருகிறார்கள் என்ற நிலையில் அவசரமாக குழம்பு வைக்க வேண்டும்.

அந்தமாதிரியான சூழ்நிலையில் வெகு சீக்கிரமாக செய்யக்கூடியது இந்த தக்காளி குருமாதான், இந்த தக்காளி குருமாவை நீங்கள் சாதத்திலும், தோசை, இட்லி, பூரி இது போன்ற டிபன்களுக்கும் போட்டு நன்றாக சாப்பிடலாம்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இப்போது தக்காளி குருமா எப்படி செய்வது,அதை செய்வதற்கு என்னென்ன பொருட்கள் தேவை,அதை செய்யும் முறை எப்படி என்பதை பற்றி இந்த பகுதியில் பார்க்கலாம்.
Equipment – 1 பிரஷர் குக்கர்
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
தேவையான பொருள்கள் | Tomato Kurma
- ½ பெரிய வெங்கயம்
- 1 tbsp மிளகாய்த்தூள்
- 1 tbsp உப்பு
- 4 தக்காளி
- ½ பெரிய வெங்கயம்
- 1 பிரியாணி இலை
- ½ tbsp சோம்பு
- 2 பட்டை
- 1 tbsp எண்ணெய்
- கடற்பாசி சிறுதளவு
- ½ tbsp மல்லிதுள்
- 5 கருவப்பிலை
- அரைத்த தேங்காய் விழுது
- 2 பெரிய வெங்காயம்
- 4 பூண்டு
- 1 tbsp இஞ்சி
- 1 tbsp கசகசா
- 7 முந்தரிபருப்பு
- 1 tbsp சோம்பு
- 5 கிராம்பு
- 2 பட்டை
- 1 கப் தேங்காய் துருவியது
Must Watch : த்ரிஷாவின் டாப் பியூட்டி சீக்ரெட் இதுதான்..
செய்முறை | Tomato Kurma
முதலில் குக்கரை அடுப்பில் வைத்து தாளிக்க தேவையான எண்ணையை உற்றி கொள்ள வேண்டும். பிறகு 2 பீஸ் பட்டை, கொஞ்சம் கடற்பாசி, அரை ஸ்பூன் அளவு சோம்பு, ஒரு பிரியாணி இலை போட்டு தாளிக்கவும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
பிறகு ஒரு பெரிய வெங்காயத்தை பாதி அளவு பொடிப்பொடியாகநறுக்கி அதனுடன் 4 கருவேப்பிலை இலையை போட்டு வெங்காயம் பொன்னிறமாக வரும் வரையில் நன்றாக வதக்கவும்.
பிறகு 4 தக்காளிகளை சிறிய துண்டாக நறுக்கி அதில் போட்டு கொள்ளவும்.அதோடு 1/2 டீ ஸ்பூன் மல்லித்தூள், 1/8 மஞ்சள் தூள், 1 டீ ஸ்பூன் மிளகாய்தூள் 1 டீ ஸ்பூன் உப்பு போட்டு நன்றாக வதக்கவும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
தக்காளி பச்சை வாடை போகும் வரையில் வேகவைத்து,பிறகு தேங்காய் விழுது தயார் செய்ய ஆரம்பிக்க வேண்டும்.
ஒரு மிக்சி ஜாரில் 2 பெரிய வெங்காயம் சின்ன வெங்காயமாக எடுத்து போடவும், 1 டீ ஸ்பூன் இஞ்சி, 7 முந்திரி பருப்பு, 3 பல் பூண்டு, 1 டீ ஸ்பூன் கசகசா, 2 பீஸ் பட்டை,1 டீ ஸ்பூன் சோம்பு, 5 பீஸ் கிராம்பு, 1/2 கப் தேங்காய் துருவல் சேர்த்துகொஞ்சம் தண்ணீர் ஊற்றி மையமாக அரைத்து கொள்ளவும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Must Read : சுவையாக ரசம் செய்யக்கூடிய முறை!
இப்படி அரைத்து வைத்த தேங்காய் விழுதை வெந்து கொண்டுள்ள தக்காளியோடு போட்டு கிளறி விடவும்,தேங்காயில் உள்ள பச்சை வாசம் போகும் வரை வேக வைக்கவும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
அதன் பின்பு தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொண்டு குக்கரை மூடி விட வேண்டும்.பின்னர் ஒரு விசில் வரும் வரை காத்திருந்து அதன் பின் அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்,இப்பொழுது அருமையான,சுவையான தக்காளி குருமா ரெடி ஆகிவிட்டது.
ஊட்டச்சத்து (Nutrition)
Calories: 62kcal | Sodium: 20mg | Fat: 33g | Serving: 4g
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇