Friday, July 11, 2025
Homeபொழுதுபோக்குஒரு ஃபோன் கால் வந்துச்சு.. அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கு அழைத்தார்கள்.. ஷாக் அளித்த காஜல்

ஒரு ஃபோன் கால் வந்துச்சு.. அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கு அழைத்தார்கள்.. ஷாக் அளித்த காஜல்

Date:

- Advertisement -

சென்னை: நடிகை காஜல் பசுபதி சின்னத்திரையில் அறிமுகமானார். அதன் பிறகு சில படங்களில் நடித்தார். கோ போன்ற படங்களில் நடித்த அவர் டான்ஸ் கோரியோகிராபர் சாண்டியின் முன்னாள் காதலி ஆவார். இவர்கள் இருவரும் இப்போது பிரிந்துவிட்டார்கள். சாண்டியை பிரிந்த காஜல் அடுத்ததாக இன்னொரு நபருடன் லிவிங் டூ கெதரில் இருந்தார். அந்த உறவும் பாதியிலேயே முடிவடைந்துவிட்டது. இந்தச் சூழலில் தனது வாழ்க்கையில் நடந்த மோசமான அனுபவங்களை ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார் காஜல் பசுபதி.

சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் ஜொலித்தவர்கள் நிறைய பேர்கள் இருக்கிறார்கள். இப்போது முன்னணி கதாநாயகனாக இருக்கும் சிவகார்த்திகேயன், முன்னணி நடிகையாக உள்ள ப்ரியா பவானி சங்கர், கதாநாயகன் ப்ளஸ் காமெடியனாக கலக்கிவரும் சந்தானம், யோகிபாபு உள்ளிட்ட அனைவரும் சின்னத்திரையில்தான் தங்களது வாழ்க்கையை ஆரம்பித்தார்கள். இப்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆளுமை உள்ளவர்களாக அவர்கள் வலம் வந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

They called for adjustment Kajal 1
They called for adjustment Kajal

காஜல் பசுபதி: அவர்களைப் போலவே நடிகை காஜல் பசுபதியும் சின்னத்திரையில் அறிமுகமானார். ஒரு தனியார் சேனலில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் புகழ் ஆன அவருக்கு சினிமாவில் நடிக்கவும் வாய்ப்புகள் வந்தன. அதன்படி கோ போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கிறார். இதற்கிடையே இப்போது படு புகழுடன் இருக்கும் நடன அமைப்பாளர் சாண்டியை காதலித்தார் காஜல் பசுபதி.

2 பிரிவுகள்: ஆனால் சாண்டியுடன் உண்டான காஜலின் காதல் பாதியில் முடிந்தது. சாண்டியை பிரிந்த காஜல் கொஞ்ச காலம் தனிமை ஆளாக இருந்துவிட்டு இன்னொரு நபருடன் லிவிங் டூ கெதரில் இருந்தார். அந்த உறவும் அதிகம் நீடிக்கவில்லை. நிலைமை இப்படி இருக்க இடையில் சிறிது காலம் அமைதியாக இருந்தவர் இப்போது பேட்டி அளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் தனக்கு ஏற்பட்ட அட்ஜஸ்ட்மெண்ட் தொல்லை பற்றி பேசியிருக்கிறார்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதையும் படிங்க : ரஜினி ஸ்ரீதேவி நடித்த இந்த சிறுவன் யார்… இப்போது இவர் ஒரு பாலிவுட் பிரபலம்!

காஜல் பசுபதி பேட்டி: அவர் அளித்த பேட்டியில், “ஒரு பெண் சிங்கிளா இருக்கிறாரா இல்லை ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறாரா என்பதை எல்லாம் பார்க்கமாட்டார்கள் அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கு அழைப்பவர்கள். எப்போதும் அவர்கள் அட்ஜஸ்ட்மெண்ட் பற்றியே தான் பேசுவார்கள். நாமாக சென்று வாய்ப்பு கேட்டால் அது போல நடக்கும். அவங்களாகவே தொடர்புகொண்டு வாய்ப்பு குறித்து பேசும்போது இந்த அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனை குறைவாகத்தான் இருக்கும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

எனக்கு வந்த ஃபோன்: சன் மியூசிக்கில் வேலை செய்த சமயத்தில் நான் நடிக்க ஆரம்பித்தேன். அப்போது எனக்கு ஒரு ஃபோன் கால் வந்தது. அதில், ‘நீ அட்ஜஸ்ட்மெண்ட் செய்தால் தான் இந்தப் படத்தில் உனக்கு வாய்ப்பு’ என்று பேசியவர்களும் இருக்கிறார்கள். நான் உடனே, அதை போல இருக்க வேற ஆள் இருக்கிறார்கள். அவங்களை வெச்சுக்கோங்க என்று நான் கூறிவிட்டேன்.இது போல என்னிடம் கேட்டு வரும்போது, க்ளீன் ப்ராஜெக்ட்டாக இருந்தால் சொல்லவும்; பேமெண்ட்டில் அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்ளலாம். மற்ற விஷயங்களுக்கு நோ என்று தெளிவாக பதில் சொல்லிவிடுவேன்.

இதையும் படிங்க : வீட்டுல பட்டாணியும் உருளைக்கிழங்கும் இருக்கா? அதுல குருமா செய்யுங்க…

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

முதலில் ஆரம்பிப்பது: நாமாக வாய்ப்பு தேடி போனால் இயக்குநரிடம் நேரடியாக சென்று பேசப்போவது கிடையாது. அவர்களுக்கு மேனேஜர் என ஒருவர் இருப்பார். அவர்தான் இதை பற்றி முதலில் ஆரம்பிப்பார். நீங்க நேரில் வாங்க பார்த்துகொள்ளலாம் என்று எவர் ஒருவர் சொல்கிறாரோ அவர் கண்டிப்பாக அட்ஜஸ்ட்மெண்ட் செய்வதற்காகத்தான் வர சொல்வார். நேரில் பார்த்தால்தான் ப்ராஜெக்ட் கொடுப்பேன் என்று சொல்கிறவர்கள் ஏமாற்ற கூடியவர்களாகத்தான் இருப்பார்கள்” என்றார்.

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories