Friday, July 11, 2025
Homeஆன்மீகம்Thaipusam 2024 tamil date : தைப்பூசம் 2024 தமிழ் தேதி ஜனவரி 25 or...

Thaipusam 2024 tamil date : தைப்பூசம் 2024 தமிழ் தேதி ஜனவரி 25 or 26? | Thaipusam Tamil Date 2024

Date:

- Advertisement -

Thaipusam 2024 tamil date : தைப்பூசம் 2024 எந்த தேதியில் வருகிறது தெரியுமா?

தைப்பூசம் என்பது தமிழ் கடவுளான முருக பெருமானுக்கு கொண்டாடப்படும் திருநாள் ஆகும். இந்த தினத்தில் உலகெங்கிலும் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள், காவடி போன்ற பல நிகழ்ச்சிகள் நடக்கும். தைப்பூசம் ஆண்டுதோறும் தை மாதம் பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வருகின்ற நன்நாளில் முருகனுக்கு நடத்தப்படும் விழாவாகும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Thaipusam 2024 tamil date
Thaipusam 2024 tamil date

சரி இந்த 2024-ம் ஆண்டு தைப்பூசம் விழா எப்பொழுது வருகிறது, அதன் சிறப்புகள் பற்றிய தகவல்களை இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்ள போகிறோம் வாங்க.

தைப்பூசம் 2024 தமிழ் தேதி: Thaipusam 2024 tamil date

தை மாதம் 11-ஆம் தேதி வியாழக்கிழமை, ஆங்கில தேதி 25.01.2024 அன்று கொண்டாடப்படுகிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

தைப்பூசம் சிறப்பு:

தைப்பூச நாளன்று முருகப்பெருமான் கோவில்களில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தும் மற்றும் அலகு குத்தியும் தைப்பூச திருவிழாவை கொண்டாடுவார்கள்.. தைப்பூசம் தினமானது சுபிட்சமான நாள் என்பது நம்பிக்கை. எனவே அன்று துவங்கும் நல்ல காரியங்கள் எதுவானாலும் நல்ல பலனைக் கொடுக்கும் என்பது காலங்காலமான நம்பிக்கை.

தைப்பூச திருநாளில் வேல் வழிபாடு செய்வது மிகுந்த நன்மைகளை தரும் என்பார்கள். வீட்டில் வேல் வைத்து பூஜை வழிபாடு செய்பவர்கள் பூச தினத்தில் மகா ருத்ர அபிஷேகம் செய்வது சிறந்தது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இந்த தைப்பூசத் திருவிழா தமிழகத்தைப் போலவே மலேசியாவிலும் தைப்பூசத் திருவிழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தைப்பூசநாளில் பத்து மலை முருகன் வெள்ளி ரதத்தில் கோலாகலமாக பவனி வருவார். உலக நாடுகளில் தைப்பூசம் கொண்டாடுவதற்கு அரசு விடுமுறை விடப் படுவது மலேசியாவில் மட்டுமே. இது மட்டும் இன்றி இலங்கை, சிங்கப்பூர், மொரிசியஸ், சுமத்திரா போன்ற தென் கிழக்கு ஆசியப் பகுதிகள், ஆஸ்திரேலியா, பிஜி, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் வெகு விமர்சையாகக் கொண்டாடுகிற முக்கிய விழா இந்த தைப்பூசம்.

தமிழக்தில் தைப்பூசம் நாளில் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, திருத்தணி, சுவாமிமலை, பழமுதிர்ச்சோலை என முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் பக்தர்கள் ஏராளமானவர்கள் வந்து நேர்த்திக்கடன் செய்து வழிபடுவார்கள். தைப்பூசத்தன்று முருகனைநினைத்து விரதம் எடுத்தால், குடும்பத்தில் செல்வம் பெருகும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமையும், பாசமும் உண்டாகும்.உடலில் நோய்கள் ஏதேனும் இருந்தால் விலகி விடும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Read Also : இனிய தைப்பூசம் நல்வாழ்த்துக்கள்

தைப்பூச விழா:

வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஒரு தை மாத வெள்ளிக்கிழமை புனர்பூசம் நட்சத்திரம் அன்றுதான் ஒளியானார். இதனைக் குறிக்கும் வகையில் அவர் ஒளியான வடலூருக்கு அருகில் அமைத்துள்ள மேட்டுக்குப்பத்தில், தைப்பூசத்தினத்தன்று இலட்சக்கணக்கானோர் சென்று வள்ளலார் விழாவைக் கொண்டாடுகிறார்கள். சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, காட்சி கொடுத்த நாள் தைப்பூசம் என்பர்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

எப்படி தைப்பூசம் விரதம் இருப்பது ? | Thai Poosam Viratham

தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, திருநீறு, உருத்திராட்சம் அணிந்து கொண்டு சிவபெருமானை வழிபடுவர். தேவாரம், திருவாசகம் போன்ற நூலை பாராயணம் செய்வர். உணவு சாப்பிடாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். மாலையில் கோயிலுக்குச் சென்று சிவ பூஜையில் கலந்து கொண்டு சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்வர்.

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories