Friday, July 11, 2025
Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்'டீன்ஸ்' டிரெய்லர் மற்றும் இசை புதுமையான முறையில் வெளியீடு..

‘டீன்ஸ்’ டிரெய்லர் மற்றும் இசை புதுமையான முறையில் வெளியீடு..

Date:

- Advertisement -

திரையரங்கில் 4 காட்சிகளாக இசை வெளியிடப்பட்டு புதிய உலக சாதனை, இயக்குநர் மணிரத்னம் ‘டீன்ஸ்’ படத்தின் டிரெய்லரை வெளியிட்டார். பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 13 இளம் வயதினருக்கு பாராட்டு தெரிவித்த ‘டீன்ஸ்’ படக்குழு.

teenz music epic way launch

teenz music epic way launch

உலகிலேயே முதல் முறையாக திரையரங்குகளில் தணிக்கை சான்றிதழ் உடன் ட்ரைலர் வெளியிடப்பட்டு சாதனை படைத்த இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் முற்றிலும் மாறுபட்ட, குழந்தைகளை மையமாக வைத்து எடுத்த சாகச திரில்லரான ‘டீன்ஸ்’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை சென்னையில் சனிக்கிழமை அன்று வெளியிடப்பட்டது. ‘டீன்ஸ்’ படத்தின் டிரெய்லரை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்ட நிலையில், இந்த திரைப்படத்தின் இசை சென்னை கமலா திரையரங்கில் 4 காட்சிகளாக தொடர்ந்து வெளியிடப்பட்டு புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதனை தொடர்ந்து, ஒரே இடத்தில், ஒரே நாளில் அதிக இசை வெளியீட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட திரைப்படம் என்பதற்கான சான்றிதழ் ‘டீன்ஸ்’ற்கு உலக சாதனைகள் சங்கத்தால் கொடுக்கப்பட்டது.. 13 குழந்தைகளை மையமாகக் கொண்ட கதை என்பதால் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பதிமூன்று இளம் வயதினருக்கு சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘டீன்ஸ்’ படக்குழு நேரில் பாராட்டு தெரிவித்தது.

இந்த படத்தை டாக்டர் பாலசுவாமிநாதன், கால்டுவெல் வேள்நம்பி, ரஞ்சித் தண்டபாணி, இராதாகிருஷ்ணன் பார்த்திபன் மற்றும் டாக்டர் பின்ச்சி ஸ்ரீநிவாசன் உள்ளிடோர் தயாரித்துள்ளனர். ‘டீன்ஸ்’ படமானது பயாஸ்கோப் டிரீம்ஸ் எல் எல் பி, அகிரா ப்ரொடக்ஷன்ஸ் பேனரில் தயாராகியுள்ளது. இதன் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் கீர்த்தனா பார்த்திபன் அக்கினேனி ஆவார்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

teenz music epic way launch

விரைவில் ரிலீசாகவுள்ள ‘டீன்ஸ்’ திரைப்படத்தை தமிழகம் எங்கும் இருக்கும் திரையரங்குகளில் (கோயம்புத்தூர் நீங்கலாக) சக்திவேலனின் சக்தி பிலிம் பேக்டரி வெளியிடுகிறது, எல்மா பிக்சர்ஸ் என். எத்தில்ராஜ் கோயம்புத்தூர் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளார்.

இத்திரைப்படத்திற்காக முதல் முறையாக இராதாகிருஷ்ணன் பார்த்திபன், இசை அமைப்பாளர் D.இமான் மற்றும் ஒளிப்பதிவாளர் காவ்மிக் ஆரி ஆகியோருடன் இணைந்துள்ளார். ஆர்.சுதர்சன் எடிட்டிங்கை கையாண்டுள்ளார்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இசைக் கலைஞர் லிடியன் நாதஸ்வரம் கூறியது

எங்களை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து கௌரவ படுத்திய பார்த்திபன் அவர்களுக்கு மிக்க நன்றி. ‘டீன்ஸ்’ திரைப்படம் பற்றி சொல்ல வேண்டும் என்றால் இது பார்த்திபனுடைய கனவு. அவரும் இசையமைப்பாளர் டி இமான் அவர்களும் முதல் முறையாக சேர்ந்துள்ளார்கள் பாடல்களை கேட்டேன், மிகவும் அருமையாக இருக்கிறது. உங்கள் எல்லோரையும் போன்று நானும் இப்படத்தை திரையரங்குகளில் பார்க்க ஆவலாக இருக்கிறேன்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

நடிகை பூர்ணிமா பாக்யராஜ் கூறியது

அனைத்தையும் புதுமையாக செய்பவர் பார்த்திபன். ‘டீன்ஸ்’ படத்தையும் அவ்வாறே உருவாக்கி இருக்கிறார். எத்தனையோ புதிய திறமைகளை இத்திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளார். இதன் டிரெய்லர் மற்றும் பாடல்கள் மிகவும் சிறப்பாக இருக்கிறது. பார்த்திபனுக்கும் அவருடைய பட குழுவினருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

‘டீன்ஸ்’ தயாரிப்பாளர் குழுவில் ஒருவரான டாக்டர் பின்ச்சி ஸ்ரீநிவாசன் கூறியது

நான் ஒரு குழந்தைகள் மருத்துவர். குழந்தைகளை மையமாக வைத்து ‘டீன்ஸ்’ திரைப்படத்தின் கதையை பார்த்திபன் எங்களிடம் சொன்ன போதே 4 தயாரிப்பாளர்களுக்கும் அந்த கதை மிகவும் பிடித்திருந்தது. சொல்லப்போனால் பார்த்திபனும் ஒரு டீன் ஏஜர் தான். இத்திரைப்படத்தில் பதிமூன்று டீன் ஏஜர்கள் உடன் பணியாற்றியுள்ளார்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

அவர் இன்னும் இளமையாக, அவர்கள் எல்லோருடைய உற்சாகத்தையும் தன்னகத்தே கொண்டு திகழ்கிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் இமான் மிக அருமையான பாடல்களை தந்துள்ளார். சிறுவர்கள் மட்டுமில்லாது அனைத்து தரப்பினரும் கண்டு ரசிக்ககூடிய இப்படமானது எல்லோருடைய ஆதரவையும் பெற்று வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.

இதையும் படிங்க : படமே ஓடல சம்பளத்தை உயர்த்திய நயன்தாரா.. தயாரிப்பாளரிடம் பணம் பறிக்க இப்படி ஒரு தந்திரம்!

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

கவிஞர் மதன் கார்கி கூறியது

தமிழ் சினிமாவுக்கு ஒரு புதுமையான படைப்பாக ‘டீன்ஸ்’ அமையும். பார்த்திபன் சார் இந்த கதையை என்னிடம் விவரித்து சொன்ன போதே அவ்வளவு புதுமையாக இருந்தது. அதை திரையில் பார்க்க ஆவலாக இருக்கிறேன். இமான் ஒவ்வொரு பாடலையும் ஒவ்வொரு விதமாக இசையமைத்துள்ளார். ஒரு புது பட இசையமைப்பாளரின் படைப்புகள் போல பாடல்கள் அவ்வளவும் பிரஷ்ஷாக உள்ளன. இந்த படத்தில் பணி செய்த இளம் கலைஞர்களுக்கு வாழ்த்துகள்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் கூறியது.

புதுமை என்றாலே பார்த்திபன் தான். குழந்தைகளை வைத்து படம் எடுப்பது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் கிடையாது. ஆனால் பார்த்திபன் அதை சாதித்து காட்டி இருக்கிறார். கடின உழைப்பாளியும் இறைபக்தி அதிகம் கொண்ட இமான் இனிமையான பாடல்களை இப்படத்திற்கு வழங்கியிருக்கிறார்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இளம் நடிகர் விக்ரம் கூறியது…

சினிமா ஒரு ஆசிரியர் என்றால் அதனுடைய பேரன்பை பெற்ற மாணவர்களில் முதன்மையானவர் பார்த்திபன் சார். ‘டீன்ஸ்’ படத்திற்கு உங்கள் அனைவரின் ஆதரவையும் கொடுத்து மாபெரும் வெற்றி அடைய வைக்க வேண்டுகிறேன், நன்றி.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

நடிகை அக்ஷயா உதயகுமார் கூறியது.

தனது ஒவ்வொரு படத்தின் போதும் அவரது அடுத்த படம் என்னவாக இருக்கும் என்று எல்லாரோயும் யோசிக்க வைப்பவர் பார்த்திபன் சார். டீன்ஸ்’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் மிகவும் அருமையாக இருக்கிறது. இப்படம் நிச்சயம் வெற்றி அடையும் என்று நம்புகிறேன்.”

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

நடிகர் புகழ் கூறியது

குழந்தைகளை வைத்து திரைப்படம் எடுப்பது என்பது சவாலான விஷயம். பார்த்திபன் சார் அதை சாதித்து காட்டி இருக்கிறார். இப்படத்தின் டிரெய்லரை பார்த்ததும் படத்தை முழுமையாக பார்க்க வேண்டும் என்ற ஆசை வருகிறது. ‘டீன்ஸ்’ திரைப்படத்தின் 2 ஆம் பாகத்தில் ஒரு குழந்தையாக நான் நடிக்க ஆசைப்படுகிறேன், நன்றி.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

நடிகை வனிதா விஜயகுமார் கூறியது

என்னுடைய மகள் பார்த்திபன் சாரிடம் அசிஸ்டெண்டாக பணி செய்கிறார் என்பது மிகவும் பெருமையான விஷயம். இந்த படத்தின் டிரெய்லரை பார்த்ததும் திரையரங்குகளில் கட்டாயம் சென்று பார்த்து ரசிக்க வேண்டிய படம் என்பது புரிகிறது. இதில் நடித்திருக்கும் குழந்தைகள் உள்ளிட்ட எல்லா கலைஞர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இயக்குநர் கௌரவ் நாராயணன் கூறியது.

பார்த்திபன் சார் என்னுடைய மானசீக குருவாக ஏற்றுக் கொண்டிருக்கிறேன். சாதனைக்கு மேல் சாதனைகள் செய்து இளம் இயக்குநர்களுக்கு போட்டியாகவும், உற்சாகமாகவும் திகழ்கிறார். ‘அஞ்சலி’ படத்திற்கு பிறகு இத்தனை சிறுவர்கள் நடித்துள்ளது ‘டீன்ஸ்’ சினிமாவில் தான் என்று நினைக்கிறேன். டிரெய்லர் மிகவும் ரசிக்கும் வகையில் உள்ளது இப்படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன் படக்குழுவினர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் கூறியது.

பார்த்திபன் சார் எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர் மற்றும் நடிகர். நான் ஒரு டீனேஜராக இருந்தபோது அவருடைய ‘புதிய பாதை’ படத்தை பார்த்து ரசித்தேன். இப்போது அவருடைய ‘டீன்ஸ்’ படத்தை நான் வெளியிடுகிறேன். இந்த திரைப்படத்தில் நடித்துள்ள டீனேஜர்களுக்கு நாற்பது வயதாகும் போது அன்றைய டீனேஜர்கள் குறித்தும் பார்த்திபன் ஒரு படத்தை இயக்குவார் என்பது நிச்சயம். தன்னை அந்த அளவுக்கு இளமையாகவே வைத்துக் கொண்டுள்ளார்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

ஒரு திரைப்படத்தின் விநியோக உரிமையை நான் வாங்கும்போது அதை எவ்வாறு புரொமோஷன் செய்வது என்று யோசித்து திட்டமிடுவது வாடிக்கை. ஆனால் பார்த்திபன் சார் திரைப்படத்திற்கு திட்டமிட வேண்டிய அவசியம் தேவை இல்லை. அவர் எங்களை காட்டிலும் சிறப்பாக அனைத்து விதமான புரொமோஷன்களையும் செய்து கொண்டிருக்கிறார். இப்படம் நிச்சயமாக வெற்றி அடையும்.

நடிகர் விதார்த் கூறியது

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இப்படத்தின் டிரெய்லரும் பாடல்களும் அவ்வளவு அருமையாக இருக்கிறது.படத்தில் பணியாற்றிய எல்லோருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நிறைய பேசுகிறேன் நன்றி வணக்கம்.

இயக்குநர் பேரரசு கூறியது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இத்திரைப்படத்தில் அனைத்துமே நிறைவாக உள்ளன. ‘டீன்ஸ்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய வாழ்த்துகள். பார்த்திபன் சாரின் ‘புதிய பாதை’ படம் இன்னும் பழைய பாதையாகவில்லை, 33 ஆண்டுகளுக்கு பிறகும் இன்னும் புதுமையாகவே இருக்கிறது. ஆனால் அவர் இன்னும் பல புதிய பாதைகளை போட்டுக்கொண்டே செல்கிறார்.

இயக்குநர் சரண் கூறியது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

பார்த்திபன் சார் எப்போதும் உணர்ச்சி வசப்பட மாட்டார். அவரிடம் உணர்ச்சி தான் வசப்படும். ‘டீன்ஸ்’ படத்தின் மூலம் ஒரு ஹாலிவுட் திரைப்படத்தையே தமிழுக்கு அவர் கொடுத்திருக்கிறார். அவருக்கும் அவருடைய குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

நடிகர் ரோபோ சங்கர் கூறியது…

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

புதுமைகளின் பிறப்பிடம் பார்த்திபன் சார். அவர் என்ன செய்தாலும் வித்தியாசமாக தான் இருக்கும். அதிலும் ‘டீன்ஸ்’ திரைப்படம் மிகவும் புதிதாக இருக்கிறது. குழுவினர் எல்லோருக்கும் வாழ்த்துகள்.

நடிகர் யோகி பாபு கூறியது

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

பார்த்திபன் சார் உடன் பணியாற்ற வேண்டும் என்று பல நாட்களாக அவரிடம் கேட்டு வந்தேன். இறுதியாக ‘டீன்ஸ்’ படத்தின் மூலம் அந்த ஆசை நிறைவேறியது. அவருடன் இன்னும் பல திரைப்படங்களில் பணியாற்ற ஆவலாக உள்ளேன், நன்றி.

இயக்குனர் நடிகர் கே பாக்யராஜ் கூறியது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

நாளைய சூப்பர் ஸ்டார்களாக வளரப்போகும் ‘டீன்ஸ்’ படத்தில் நடித்திருக்கும் பதிமூன்று இளம் கலைஞர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் வாழ்த்துகள். உதவி இயக்குநராக என்னுடன் பணிசெய்த பார்த்திபன் இவ்வளவு பெரிய உயரத்தை தொட்டுள்ளது மிகவும் பெருமை. எப்போதுமே புதுமையாகவும் வித்தியாசமாகவும் சிந்திப்பவர் பார்த்திபன். அவரது இந்த ‘டீன்ஸ்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன், நன்றி.

நடிகர் தம்பி ராமையா கூறியது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

‘டீன்ஸ்’ திரைப்படத்தை பார்ப்பதற்கு நான் மிகவும் ஆவலாக காத்து கொண்டிருக்கிறேன். இயக்குநர் , நடிகர் என்பதையும் தாண்டி பார்த்திபன் சார் ஒரு சிறந்த கவிஞர் அவர். இந்த படத்தில் 7 பாடல்களையும் அவரே எழுதியுள்ளார். எதை செய்தாலும் புதுமையாக செய்யும் பார்த்திபன் சார் 13 முத்துக்களை இப்படத்திற்கு என்று தேர்ந்தெடுத்து நடிக்க வைத்திருக்கிறார். அவர்கள் எல்லோரும் நாளைய திரை வானில் சிறகடித்து பறக்க போவது உறுதி. இமானின் பாடல்கள் நன்றாக உள்ளன, கடின உழைப்புக்கு சொந்தக்காரர் அவர். இத்திரைப்படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.

இசையமைப்பாளர் D. இமான் பேசியதாவது…

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

“இப்படி ஒரு இசை வெளியீட்டு விழாவை இதுவரை நான் கண்டதில்லை. அதற்காவே பார்த்திபன் சாருக்கு நன்றி. இப்படத்தில் புதுமையான விஷயங்களை நிறைய முயற்சித்திருக்கிறோம். முதலில் ஒன்று அல்லது 2 பாடல்கள் போதும் என்று இருந்த நிலையில் தற்போது அது 7 பாடல்களாக வளர்ந்துள்ளது. நானும் பார்த்திபன் சாரும் எப்போதோ சேர்ந்து பணியாற்றி இருக்க வேண்டியது, அது இப்போதுதான் கைகூடி இருக்கிறது. அவருடன் பணியாற்றியது எனக்கு மிகச்சிறந்த அனுபவம், நன்றி.”

இதையும் படிங்க : வெத்தல வெத்தல பாடல் வரிகள் | Romeo Tamil Movie

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories