Friday, July 11, 2025
Homeபொழுதுபோக்குகட்சிக்கு இந்தப்பெயர் வைப்பதற்கு காரணம்? நடிகர் விஜய் பிப்ரவரி 2ம் தேதியை தேர்வு செய்யக் காரணம்?

கட்சிக்கு இந்தப்பெயர் வைப்பதற்கு காரணம்? நடிகர் விஜய் பிப்ரவரி 2ம் தேதியை தேர்வு செய்யக் காரணம்?

Date:

- Advertisement -

tamilaga vetri kalagam : கட்சிக்கு இந்தப் பெயர் வைப்பதற்கு காரணம் என்ன..? நடிகர் விஜய் பிப்ரவரி 2 ம் தேதியை தேர்வு செய்யக் காரணம் தெரியுமா..?

tamilaga vetri kalagam
tamilaga vetri kalagam

நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சியை தொடங்கிய நிலையில், இதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

அரசியலில் என்ட்ரி கொடுப்பதற்காக இத்தனை நாட்கள் காத்திருந்த நடிகர் விஜய், 2/02/2024 லில் ‘தமிழக வெற்றிக் கழகம்’ எனும் கட்சியை இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார். இது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் இனிப்புகளை வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.

மேலும், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வில்லை, யாருக்கும் ஆதரவும் இல்லை என்று அறிவித்துள்ள அவர், 2026 ல் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே இலக்கு என்று கூறியுள்ளார். மேலும், படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டு முழுமையாக மக்கள் சேவையில் ஈடுபடப் போவதாக கூறியுள்ள நடிகர் விஜய், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைத்த பின் கட்சியின் கொள்கை, கோட்பாடு, கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

tamilaga vetri kalagam
tamilaga vetri kalagam

மேலும், நிர்வாக சீர்கேடு, ஊழல் மலிந்த அரசியல் கலாசாரம் நிலவுவதாகவும், மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்துக்கு வழிவகுப்பது தான் இலக்கு என்றும் நடிகர் விஜய் கூறியுள்ளார். அரசியல் என்பது பொழுதுபோக்கு அல்ல, அது எனது ஆழமான வேட்கை எனவும், அரசியலின் உயரம் மட்டும் அல்ல, அதன் நீள அகலத்தையும் தெரிந்து கொள்ள பலரிடம் இருந்து பாடம் படித்து தயார்படுத்திக் கொண்டதாகக் கூறிய விஜய், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவ கொள்கை பற்று உடையதாக கட்சி இருக்கும், என தெரிவித்துள்ளார் விஜய்.

Read Also : வீட்டில் வெற்றிலை வளர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா..!

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இந்த நிலையில், நடிகர் விஜய் தனது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என்று பெயர்வைப்பதற்கு காரணம் என்ன என்றும், கட்சி தொடர்பான அறிவிப்பை பிப்ரவரி 2 ஆம் தேதி அவர் வெளியிட்டதன் பின்னணிக்கான காரணம் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, தமிழக வெற்றி கழகம் என்ற கட்சி பெயரில் இருக்கும் ‘வெற்றி’ என்ற வார்த்தை நடிகர் விஜய்யை குறிக்கும் வகையில் சேர்க்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. திராவிட சித்தாத்தங்களை பின் தொடர விரும்புவதால் கழகம் என்று கட்சி பெயரில் இணைக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. தமிழக வெற்றி கழகத்தை விஜய் தரப்பினர் சுருக்கமாக TVK என அழைக்கவும் முடிவு செய்துள்ளனர்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

அதேபோல, நடிகர் விஜய் ஜாதகத்தின்படியே, கட்சி பெயர் மற்றும் அறிவிப்பு முடிவு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories