Friday, July 11, 2025
Homeஆன்மீகம்தமிழகத்தில் அமைந்திருக்கும் அம்பிகையின் சக்தி பீட ஆலயங்கள்

தமிழகத்தில் அமைந்திருக்கும் அம்பிகையின் சக்தி பீட ஆலயங்கள்

Date:

- Advertisement -

சிவ பெருமானை அழைக்காமல், தட்சண் நடத்திய யாகத்தில் அவருக்கு கிடைக்க வேண்டிய அவில் பாகத்தை பெறுவதற்காக போன தாட்சாயணி, தட்சன் நடத்தும் யாகத்தை அழிப்பதற்காக யாக குண்டத்தில் பாய்ந்து உயிரை விடுகிறாள். அன்னையின் பிரிவினை தாங்க முடியாத சிவன், இறந்த உடலை சுமந்து கொண்டு ருத்ரதாண்டவம் ஆடுகிறார். இதனால் உலக உயிர்கள் பாதிக்கப்படும் என எல்லோரும் அஞ்சி நடுகினர்.ஈசனை சாந்தப்படுத்துவதற்காக, அம்பிகையின் உடலை தனது சுதர்சன சக்கரத்தால் பல துண்டுகளாக வெட்டினார்.

காஞ்சி காமாட்சி :

Tamil Nadu Sakthi Peetam Temples
Tamil Nadu Sakthi Peetam Temples

அன்னையின் தொப்புள் பகுதி விழுந்த இடம் தான் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் ஆகும். காமகோடி பீடம் என போற்றப்படுகின்றது. இந்த ஆலயம் நாபிஸ்தான ஒட்டியாண பீடம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆதிசங்கரரால் பட்டியலிடப்பட்ட 18 மகாபீடங்களில் இந்த ஆலயமும் ஒன்று.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

மதுரை மீனாட்சி :

Tamil Nadu Sakthi Peetam Temples

மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் 51 சக்தி பீடங்களில் மந்திரிணி பீடம் என போற்றப்படுகிறது. இங்கு கல்வி மற்றும் கலைகளின் அதிபதியான ராஜமாதங்கியின் வடிவம் கொண்டு அன்னை மீனாட்சி அருள் புரிகிறார்.

ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி :

ராமேஸ்வரத்தில் பர்வதவர்த்தினி என்று திருநாமத்துடன் குடி கொண்டுள்ள ராமநாத சுவாமி ஆலயம் சேது பீடம் என அழைக்கப்படுகிறது. இது திருமணத்தடைகள் நீக்கும் கோவிலாக இருக்கிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி :

Tamil Nadu Sakthi Peetam Temples

திருச்சி அருகில் இருக்கும் திருவானைக்காவலில் அருள்புரிகின்ற அகிலாண்டேஸ்வரி காதணியாக ஸ்ரீசக்கரத்தை அணிந்திருக்கிறாள். இங்கு உச்சிகால வேளையில் அன்னையே நேரில் வந்து சிவ பூஜை செய்கிறார் என்பது ஐதீகம். சக்தி பீடங்களில் இது ஞான பீடமாக போற்றப்படுகிறது.

​திருவண்ணாமலை அபீதகுஜாம்பாள் :

Tamil Nadu Sakthi Peetam Temples

திருவண்ணாமலையில் உள்ள அபிதகுஜாம்பாள் ஈசனின் இடப்பாகத்தில் இடம்பெற்றவள் ஆவாள். இது அருணை பீடம் என அழைக்கப்படுகிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதையும் படிங்க : தேங்காய், தக்காளி சேர்க்காமல் மதுரை நீர் சட்னி செய்வது எப்படி? 2 இட்லி கூடுதலாக சாப்பிடுவாங்க..!

திருவாரூர் கமலாம்பாள் :

Tamil Nadu Sakthi Peetam Temples

திருவாரூரில் கமலாம்பிகை என்னும் திருநாமத்துடன் வீற்றிருக்கும் அன்னை சந்திரனை தலையில் சூடி காட்சி கொடுக்கிறாள். இங்கு 4 திருக்கரங்களுடன் யோகாசனத்தில் அன்னை கமலாம்பிகை அருள் செய்கிறாள். இது கமலை பீடம் என்று போற்றப்படுகிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

​கன்னியாக்குமரி பகவதி :

Tamil Nadu Sakthi Peetam Temples

அம்பிகையின் முதுகெலும்பு விழுந்த இடமே கன்னியாக்குமரி பகவதி கோவிலுக்கு அருகில் இருக்கும் தியாக செளந்தரி என்ற பத்ரகாளி அம்மன் கோவிலாகும். குமரி பீடம் என போற்றப்படும் இத்தலமானது தேவியின் 24 வது சக்தி பீடமாகும். இந்த கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள பாறையின் மீது தான் சிவனை நோக்கி அம்பிகை தவமிருந்ததாக கூறப்படுகிறது. அதன் நினைவாக அந்த இடத்தில் ஸ்ரீ சக்தி பாதம் அமைக்கப்பட்டுள்ளது.

கும்பகோணம் மங்களாம்பிகை :

Tamil Nadu Sakthi Peetam Temples

கும்பகோணத்தில் அருள்புரிந்து வரும் மங்களாம்பிகை 72,000 கோடி மந்திர சக்திகளுக்கு அதிபதியாக விளங்கி கொண்டிருக்கிறாள். விஷ்ணு சக்தி பீடம் என்று அழைக்கப்படும் இத்தலத்தில் அன்னை அனைத்து தெய்வங்களின் சக்தியையும் கொண்டவளாக விளங்குகிறாள்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

திருக்கடையூர் அபிராமி :

Tamil Nadu Sakthi Peetam Temples

திருக்கடையூரில் அபிராமி என்ற திருநாமத்துடன் அருளும் அன்னையானவள் தன் பக்தனுக்காக அமாவாசையை பெளர்ணமியாக மாற்றினாள். அதன் பலனாக அபிராமி அந்தாதி பாடப்பட்ட திருத்தலம். காலனை சிவன் சம்ஹாரம் செய்த தலம் என்பதால் இது கால பீடம் என அழைக்கப்படுகிறது. இங்கு திருமாங்கல்ய காணிக்கை சிறப்பான வழிபாடாகும்.

திருவாலங்காடு மகாகாளி :

திருவள்ளூர் அருகில் இருக்கும் திருவாலங்காட்டில் அன்னை, இறைவனுடன் நடன போட்டியிட்ட ஆலயம். இந்த ஆலயத்தில் ரத்த பீஜனை போரிட்டு அழித்த தலம் இது தான் என்பதால் இது காளிசக்தி பீடம் என போற்றப்படுகிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

திருக்குற்றாலம் பராசக்தி :

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் அமைந்திருக்கும் இத்தலத்தில் அன்னை குழல்வாய் மொழி, பராசக்தி என்ற திருநாமத்துடன் போற்றப்படுகிறாள். இந்த தலமானது பராசக்தி பீடம் என்றும், தரணி பீடம் என்றும் அழைக்கப்படுகிறது. இது புண்ணிய தீர்த்த ஆலயமாகவும் கருதப்படுகிறது.

குளித்தலை லலிதா :

திருச்சி அருகில் ஈங்கோய்மலை பகுதியில் அமைந்து இருக்கும் இந்த ஆலயத்தில் அன்னை லலிதாம்பிகை என்றும், மரகதாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறாள். சிவ பெருமான், உமையம்மைக்கு தனது உடலில் சரிபாதியை தருவதாக வாக்குறுதி கொடுத்த தலம் இதுதான். இந்த தலம் சாயா பீடம் என அழைக்கப்படுகிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

​பாபநாசம் உலகநாயகி :

நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் அன்னை உலகநாயகி என்னும் திருபெயரில் அருள் செய்கிறாள். இசையில் புகழடைய வேண்டும் என்பவர்கள் இந்த கோவிலில் அன்னையை வழிபடலாம். அகத்தியருக்கு திருமணக்காட்சி அருள காரணமானவள் இந்த ஆலய அன்னையே. விமலை பீடம் என அழைக்கப்படும் இந்த தலம் நவகைலாய தலங்களில் ஒன்றாக திகழ்கிறது.

திருநெல்வேலி காந்திமதி :

திருநெல்வேலியில் காந்திமதி அம்மன் என்ற பெயரில் அன்னை காட்சி கொடுப்பதால் இது காந்தி பீடம் என போற்றப்படுகிறது. இங்கு மாலையில் அன்னை ஞானசரஸ்வதியாக காட்சி தருகிறாள். இந்த ஆலயத்தில் அன்னையே இறைவனுக்கு நைவேத்தியம் படைப்பதாக கருதப்படுகிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதையும் படிங்க : உங்களுக்கு முடி கொட்டுகிறதா? அப்படின்னா இந்த 3 பொருட்கள் பயன்படுத்தி பானத்தை குடிங்க.!

திருவெண்காடு பிரம்மவித்யா :

சீர்காழி அருகில் அமைந்துள்ள திருவெண்காட்டில் அன்னை பிரம்மவித்யாம்பிகை என்ற திருபெயருடன் காட்சி தருகிறாள். இந்த அன்னையை வணங்கி வந்தால் குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், கல்வி உயர்வு, நாவன்மை உள்ளிட்டவற்றை பெற முடியும். நரம்பு நோய்கள் அகலும். இந்த ஆலயம் புதனுக்குரிய பரிகார தலமாக விளங்குகிறது. இதை பிரணவ பீடம் என்றும் பக்தர்கள் போற்றுகிறார்கள்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

திருவையாறு தர்மசம்வர்த்தினி :

திருவையாற்றில் தர்மசம்வர்த்தினி என்ற பெயருடன் அன்னை திகழ்கிறாள். இந்த தலம் தர்ம பீடம் என்றும் போற்றப்படுகிறது. இந்த ஆலயத்தில் உலகிற்கே படியளக்கும் நாயகியாக அன்னை விளங்குகிறாள். இங்கு அன்னைக்கு அஷ்டமி திதியில் இரவு நேரத்தில் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

திருவொற்றியூர் திரிபுரசுந்தரி :

சென்னை திருவொற்றியூரில் வடிவாம்பாள், வடிவுடைநாயகி என்ற பெயரில் அன்னை அழைப்படுகிறாள். இங்கு ஞானசக்தியின் வடிவமாக அன்னை அருள் செய்கிறாள். இஷீபீடம் என சொல்லப்படும் இந்த ஆலயத்தில் நாள்தோறும் சுயம்வர புஷ்பாஞ்சல் நடைபெறுகிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

தேவிபட்டினம் மகிஷமர்த்தினி :

ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்து இருக்கும் தேவிப்பட்டினத்தில் உலக நாயகி அம்மனாக மகிஷாசுரமர்த்தினியாக அன்னை காட்சி கொடுக்கிறாள். இது வீரசக்தி பீடம் என அழைக்கப்படுகிறது.

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories