Friday, July 11, 2025
Homeடெக் நியூஸ்வாடிக்கையாளர்கள வளச்சு போட சுஸுகி போட்ட திட்டம்! இந்த புதிய கலர் தேர்விற்காகவே மக்கள் கூட்டம்...

வாடிக்கையாளர்கள வளச்சு போட சுஸுகி போட்ட திட்டம்! இந்த புதிய கலர் தேர்விற்காகவே மக்கள் கூட்டம் கூட்டமாக போக போறாங்க!

Date:

- Advertisement -

முன்னணி 2 சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் சுஸுகி (Suzuki) நிறுவனமும் ஒன்றாகும். இந்த நிறுவனம் 2 சக்கர வாகன விரும்பிகளை தன் வசம் ஈர்க்கும் வகையில் தன்னுடைய புகழ்பெற்ற ஸ்கூட்டர் மாடல்களில் புதிய வண்ண தேர்வை அறிமுகம் செய்திருக்கின்றது. பர்க்மேன் ஸ்ட்ரீட் (Suzuki Burgman Street) மற்றும் அக்சஸ் 125 (Suzuki Access 125) ஆகியவற்றிலேயே அது புதிய நிற ஆப்ஷன்களை அறிமுகப்படுத்தி உள்ளது. வரும் பண்டிகை தினங்களை முன்னிட்டே புதிய வண்ண தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகின்றது.

பொதுவாக, பண்டிகை தினங்களின் நெருக்கத்திலே வாகன உற்பத்தியாளர்கள் இதுபோன்று புதிய நிறத்தையும், சிறப்பு பதிப்புகளையும் அறிமுகம் செய்வார்கள். ஆனால், பண்டிகை வர இன்னும் பல வாரங்கள் உள்ள நிலையில், இப்போதே சுஸுகி நிறுவனம் வாடிக்கையாளர்களை தன் வசம் ஈர்க்கும் முயற்சியில் களமிறங்கிவிட்டது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Suzuki plans to enrich customers!

Suzuki plans to enrich customers!
Suzuki plans to enrich customers!

இரண்டு நிறங்களால் அலங்கரிக்கப்பட்ட புதிய கலர் தேர்வையே பர்க்மேன் மேன் மற்றும் அக்செஸ் 125 ஸ்கூட்டர்களில் சுஸுகி அறிமுகம் செய்து இருக்கின்றது. அந்தவகையில், அக்செஸ் 125 இல் மெட்டாலிக் சோனோம ரெட் மற்றும் பியர் மிராஜ் ஒயிட் (Metallic Sonoma Red / Pearl Mirage White) வண்ணத்தால் அலங்கரிக்கப்பட்ட கலர் ஆப்ஷனையே அது புதிதாக அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய நிற தேர்விற்கு ரூ.90,500 என்கிற விலையை அது நிர்ணயம் செய்யப்பட்டிருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே. இதேபோல், பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டரில் புதிதாக மேட் பிளாக் நம்பர் 2 (Metallic Matte Black No. 2) எனும் கலர் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது.

இது மேட் பிளாக் மற்றும் மெரூன் போன்ற நிறங்களே உபயோகப்படுத்தப்பட்டு இருக்கும். இந்த வண்ண தேர்விற்கு ரூ. 98,299 விலை நிர்ணயம் செய்யப்பட்டுஇருக்கிறது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமாகும். அக்சஸ் 125 மற்றும் பர்க்மேன் ஸ்ட்ரீட் இந்த 2 மாறுபட்ட ஸ்டைலை உடையதாக இருந்தாலும், ஒரே பிளாட்பாரத்தில் இரண்டும் உருவாக்கப்பட்டது தான்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Read Also : வீட்டில் ஒரு முறை குடைமிளகாய் சென்னா மசாலாவை செய்து பாருங்கள் !

மேலும், இதில் 124 சிசி ஏர் கூல்டு சிங்கிள் சிலிண்டர் மோட்டார் உபயோகப்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 8.58 PHP பவரை 6,500 RPM மிலும், 10 என்எம் டார்க்கை 5,500 NM டார்க்கிலும் வெளியேற்றும். சிவிடி கியர்பாக்ஸ் இந்த எஞ்சினுடன் இணைக்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்க வேண்டியது. பர்க்மேன் மற்றும் அக்சஸ் 125 பிரீமியம் அம்சங்கள் கொண்ட ஸ்கூட்டர்கள் ஆகும். குறிப்பாக, இந்த ஸ்கூட்டர்களில் ப்ளூடூத் இணைப்பு வசதியுள்ள டிஜிட்டல் கன்சோல் கொடுக்கப்பட்டு இருக்கும். இதில் கூடுதல் சிறப்பு வசதியாக சுஸுகி ரைடு கனெக்ட் அம்சம் அளிக்கப்பட்டு இருக்கின்றது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இந்த அம்சத்தின் மூலமாக திருப்பத்திற்கு திருப்பம் வழி தடம் குறித்த தகவல், செல்போனுக்கு வரும் அழைப்புகள், வாட்ஸ்அப் நோடிஃபிகேஷன் மற்றும் எஸ்எம்எஸ்-கள் ஆகியவற்றை தெறிந்துக் கொள்ள முடியும். மேலும் மிகப் பெரிய ஸ்டோரேஜ், யுஎஸ்பி செல்போன் சார்ஜிங் போர்ட் உள்ளிட்ட அம்சங்களும் இந்த ஸ்கூட்டர்களில் அளிக்கப்பட்டு இருக்கும். இதுபோன்று அநேக அம்சங்களை உள்ளடக்கிய தயாரிப்பே சுஸுகியின் இந்த ஸ்கூட்டர் மாடல்கள் ஆகும்.

இதையும் படிங்க : ஹர்திக் பாண்டியா-நடாஷா விவாகரத்து போல சர்ச்சைக்குள்ளாகி விவாகரத்து பெற்ற இந்திய கிரிகெட் வீரர்கள்!

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

வி தமிழ் டிவி கருத்து: இந்தியாவில் 2 சக்கர வாகனங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது இந்த பட்டாளத்தை தன் வசம் வளைச்சுப் போடும் முயற்சியாகவே சுஸுகி நிறுவனம் அதன் 2 முன்னணி மாடல்களில் புதிய வண்ண தேர்வை அறிமுகம் செய்திருக்கின்றது. இதில் மட்டும் இல்லாமல் அவெனிஸ் ஸ்கூட்டர் மாடலிலும் புதிய நிற தேர்வு அது அறிமுகம் செய்திருக்கின்றது.

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories