Thursday, July 10, 2025
Homeதெரிந்து கொள்வோம்ஸ்ரீபதி சாதிச்சுட்டாங்க .. நீதிபதியாகிய மலைவாழ் பெண்! பிரசவ நாளில் தேர்வு - சினிமாவை மிஞ்ஜிய...

ஸ்ரீபதி சாதிச்சுட்டாங்க .. நீதிபதியாகிய மலைவாழ் பெண்! பிரசவ நாளில் தேர்வு – சினிமாவை மிஞ்ஜிய பரபரப்பு

Date:

- Advertisement -

Sripathi has achieved : ஸ்ரீபதி 23 வயதில் நீதிபதியாகி இருக்கிறார் பழங்குடியினத்தை சேர்ந்தவர். எப்படி நீதிபதியானார்? யார் அவர்? என்பதை பற்றி விரிவாக பார்ப்போம்.

Sripathi has achieved
Sripathi has achieved

Sripathi has achieved

ஸ்ரீபதி திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை பகுதியை சேர்ந்தவர். பழங்குடியினத்தை சேர்ந்த இவர் 23 வயதிலேயே பழங்குடியினர் பிரிவில் முதல் பெண் சிவில் நீதிபதியாகி சாதித்திருக்கிறார். இவர் எப்படி நீதிபதியானார்? அவர் இதற்காக எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன என்பதை பழங்குடி மாணவர்களுக்கு கல்வி சேவையாற்றிவரும் ஆசிரியை மகாலட்சுமி நெகிழ்ச்சியோடு பதிவிட்டிருக்கிறார்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

அதில் அவர் குறிப்பிட்டு இருப்பது, “பழங்குடியினர் வகுப்பில் முதல் பெண் Civil judge ஸ்ரீபதி.ஜவ்வாதுமலையில் பிறந்து,ஏலகிரி மலையில் கல்வி கற்று, B.A.,B.L., சட்டப்படிப்பை முடித்து, படிப்பின் இடையில் திருமணமானாலும் இடைநின்று விடாமல் படித்து முடித்தவர். இன்று மலையும், மாவட்டமும் தெரிந்தவர்கள் எல்லோரும் ஸ்ரீபதியைப் பாராட்டி கொண்டாடி வருவதற்கு காரணம் அவருடைய இனமா, அவருடைய வயதா (23), அவர் வெற்றி அடைந்திருக்கும் துறையா? மூன்றுமே எனலாம் நீங்கள்.

ஆனால் இந்தத் தகவலைக் கேட்டபோது நான் உண்மையிலேயே அதிர்ச்சியில் மூர்ச்சையாயிருந்தேன். ஸ்ரீபதிக்குத் தேர்வு எழுதும் தேதியிலேயேதான் பிரசவ தேதியும் கொடுக்கப்பட்டிருந்தது. தேர்வு வரும் 2 நாட்கள் முன் குழந்தையும் பிறந்துவிட்டது. ஆனால் ஸ்ரீபதி தேர்வைக் கண்டிப்பாக எழுதவேண்டும் என்று தீவிரமாக இருந்தார்.” குழந்தை பிறந்த 2 வது நாள் என்றால் கொஞ்சம் கஷ்டம்தான். டாக்டரின் ஆலோசனைப்படி எவ்வாறு பாதுகாப்பாக போகமுடியும் என்று கேட்டுவிட்டு முடிவெடுக்குமாறு நம் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் பரமுவிடம் மட்டும் கூறியிருந்தேன்.”பரமு, ஸ்ரீபதி இருவரும் ஒரே ஊர் மற்றும் நண்பர்கள்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதையும் படிங்க : அறையபுரம் காவிரி படுகையில் புதிய பாலம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா

மற்றபடி அவர் சென்றாரா இல்லையா என்று கூட நான் கேட்கவில்லை. யார் வேண்டுமானாலும் ஆலோசனைவழங்கலாம். ஆனால் எடுத்து செயல்படுத்துவதில்தானே அனைத்துமே இருக்கிறது. கிட்டத்தட்ட, அதாவது ஒரு லட்ச ரூபாய் செலவு செய்து, வெறும் காரை, பாதுகாப்பான, சொகுசு காராக மாற்றி தேர்வு எழுத சென்னை செல்கிறார். ஸ்ரீபதி தேர்வு எழுதினார். இதோ அவர் எழுதிய தேர்விலும் வெற்றிவாகையும் சூடியிருக்கிறார். உண்மையாகவே இதை நினைத்துப்பார்த்தால் “ஏய் …எப்புட்றா?” என்று சொல்வதற்கு முன் தொண்டைக் குழிக்குள் திக் திக் என்று அடிக்கிறது. 

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

அதைகாட்டிலும் பெருமைப்படவும் பாராட்டப்படவும் வேண்டிய நபர் வெங்கட்ராமன், ஸ்ரீபதியின் கணவர். புள்ளதான் முக்கியம் என்று சொல்லி, தடைகல்லாக நிற்கும் ஆண்களுக்கு மத்தியில் அவருடைய கணவர் ஸ்ரீபதியின் இறக்கைகளில் பாராசூட் பொருத்திவிட்டவர் போன்று தெரிகிறார். Hats off you Venkat! அடுத்தது.. ஸ்ரீபதியின் தாய். கட்டிக்கொண்ட ஊரில் இருந்தால் பிழைக்க முடியாது என்றெண்ணி, தன் சொந்த ஊருக்கே சென்று, தன் மகளை அங்குள்ள பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்த அவரின் வைராக்கிய குணம்தான் ஸ்ரீபதிக்கு அப்படியே வந்துள்ளது.

திருமணம் முடிந்து ஸ்ரீபதி அந்த ஊரில் நடக்கும் ஒரு கிராமசபையில் பங்கேற்று,கிராம வளர்ச்சித் தொடர்பாக பல கேள்விகளை அடுக்கியுள்ளார். அனைவரையும் போல அரசியல் பெருமகனார்கள் “இதுக எல்லாம் படிச்சி என்னத்த கிழிக்கப் போவுதுங்கனு நாங்களும் பார்க்கிறோம்” என்று எகத்தாளமாக முதுகுக்குப் பின்னால் பேசியுள்ளனர். இதோ அவர் வெற்றியும் கண்டுள்ளார். இனி யாருக்குகெல்லாம் வயிற்றில் புளிக் கரைத்துக்கொண்டிருக்கிறது என்றுதான் தெரியவில்லை. யார் சொன்னால் எல்லோருக்கும் கேட்குமோ அந்த இடத்திற்கு எங்கள் வலியைத் தெரிந்த, உணர்ந்த, புரிந்த ஒருவர் சென்றிருப்பது அவ்வளவு நிம்மதியாகவும் பெருமையாகவும் உள்ளது. நன்றி நவிலல், தமிழ்வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை என்று எழுதிவைத்துச் சென்ற எங்கள் முதல்வர் முக ஸ்டாலினுக்கு!” என்று குறிப்பிட்டிருக்கிறார். Sripathi has achieved

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதையும் படிங்க : வாத்தி திரைப்பட நடிகை சம்யுக்தாவிற்கு கூடிய விரைவில் திருமணம்?

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories