Friday, July 11, 2025
Homeஆன்மீகம்ஸ்ரீ ருக்மணி சத்யபாமா ஸ்ரீ செங்கமல நாயகி ஸ்ரீ ராஜகோபால பெருமாள் ஆலய வைகுண்ட ஏகாதசி...

ஸ்ரீ ருக்மணி சத்யபாமா ஸ்ரீ செங்கமல நாயகி ஸ்ரீ ராஜகோபால பெருமாள் ஆலய வைகுண்ட ஏகாதசி விழா

Date:

- Advertisement -

Sri Rajagopala Perumal : நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பகுதியில் உள்ள மேலதன்னிலப்பாடியில் பழமையானா ஸ்ரீ ருக்மணி சத்யபாமா ஸ்ரீ செங்கமல நாயகி ஸ்ரீ ராஜகோபால பெருமாள் கோயில் அமைந்துள்ளது. பழைமை வாய்ந்த இந்த கோயிலில் சென்ற 1968 ஆம் வருடம் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து 55 வருடங்களுக்கு கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.அதனை தொடர்ந்து 55 வருடங்களுக்கு பிறகு வைகுண்ட ஏகாதேசி திருவிழா கடந்த 21 ஆம் தேதி பந்தக்கால் முகூர்த்ததுடன் ஆரம்பமானது.ஒவ்வொருநாளும் ஸ்ரீ ருக்மணி சத்யபாமா ஸ்ரீ செங்கமல நாயகி ஸ்ரீ ராஜகோபால பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்த மக்களுக்கு காட்சி கொடுத்தார்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Sri Rajagopala Perumal
Sri Rajagopala Perumal

Sri Rajagopala Perumal

ஏகாதசியை முன்னிட்டு இரவு உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. முன்னதாக மஞ்சள் தூள், திரவிய பொடி, பால், தயிர், பஞ்சாமிர்தம், பன்னீர், இளநீர் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பல வண்ண பூக்களால் ஸ்ரீ ருக்மணி சத்யபாமா ஸ்ரீ செங்கமல நாயகி ஸ்ரீ ராஜகோபால பெருமாள் அலங்கரிக்கப்பட்டு மகா தீப ஆராதனை நடத்தப்பட்டது.

தொடர்ந்து காலையில் சுவாமி புறப்பாடு நடந்தது. கோயிலின் பின்புறம் அமைக்கப்பட்ட சொர்க்கவாசலுக்கு ஸ்ரீ ராஜகோபால பெருமாள் வந்தடைந்தார். அதனை தொடர்ந்து கோ பூஜையும் நடைபெற்று வேத மந்திரங்கள் பாட மங்கல வாத்தியங்கள் முழங்க பரம்பர வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பசு மாடு முன்னே வர அதை தொடர்ந்து ஸ்ரீ ருக்மணி சத்யபாமா ஸ்ரீ செங்கமல நாயகி ஸ்ரீ ராஜகோபால பெருமாள் வந்தார்கள். தொடர்ந்து பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று முழக்கமிட்டபடி சொர்க்கவாசலை கடந்து வந்தனர்

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Read more : ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் ஆலயத்தில் பெருமாள் சர்வ அலங்காரத்தில் வைகுண்ட ஏகாதசி

தொடர்ந்து பெருமாள் பிரகாரம் வலம் வந்து கோயிலை வந்தடைந்த பின்னர் மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. 55 வருடங்களுக்கு பிறகு நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் சுற்றியுள்ள கிராம பகுதியிலிருந்து திரளான மக்களும் பக்தர்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்;.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Watch Video: நான் எதுக்காக பேட்டி கொடுக்கணும்.. நடிகை கனகா !

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories