Thursday, July 10, 2025
Homeஆன்மீகம்ஆதினத்தின் ஸ்ரீ கோமுதீஸ்வரர் திருக்கோவிலில் தைரத சப்தமி பெருவிழா..!

ஆதினத்தின் ஸ்ரீ கோமுதீஸ்வரர் திருக்கோவிலில் தைரத சப்தமி பெருவிழா..!

Date:

- Advertisement -

Sri Gomudeeshwarar temple of Adinam : திருவாவடுதுறை ஆதினத்தின் ஸ்ரீ கோமுதீஸ்வரர் திருக்கோவிலில் தைரத சப்தமி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது, ஆதீன குருமகா சந்நிதானம் சிவிகை பல்லக்கில் எழுந்தருளும் பட்டணப் பிரவேசம் ஜனவரி 18-ஆம் தேதி நடைபெறுகிறது:-

Sri Gomudeeshwarar temple of Adinam
Sri Gomudeeshwarar temple of Adinam

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த திருவாவடுதுறையில் 14-ஆம் நூற்றாண்டை சேர்ந்த சைவ ஆதீன திருமடம் அமைந்திருக்கிறது. தமிழகத்தின் இரண்டு பெரும் ஆதீன மடங்களாக திருவாவடுதுறை மற்றும் தருமபுரம் ஆதீனங்களாக திகழ்ந்து வரும் நிலையில், திருவாவடுதுறை ஆதீனத்தின் குருமுதல்வர் நமச்சிவாய மூர்த்திகளின் ஆண்டு பெருவிழா மற்றும் ஆதினத்தின் ஸ்ரீ கோமுதீஸ்வரர் திருக்கோவிலில் தைரத சப்தமி பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது இதையொட்டி, திருவாவடுதுறை ஆதினத்தின் ஸ்ரீ அதுல்ய முதலாம்பிகை சமேத ஸ்ரீ கோமுதீஸ்வரர் திருக்கோவிலில் அமைந்துள்ள கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து ரிஷபக் கொடி ஏற்றப்பட்டது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Read Also : தர்பூசணி விதைகளின் ஆச்சரிய பட வைக்கும் நன்மைகள்!

இதில், திருவாவடுதுறை ஆதீன குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் கலந்துகொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினார். பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினந்தோறும் சமூக பணி, சைவப் பணி போன்றவற்றில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு, ரூ.5,000 பொற்கிழியுடன் சிறப்பு விருதுகளும் சைவ சமயம் சார்ந்த புத்தகங்கள் வெளியீடும் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து 16ம் தேதி திருத்தேர் உற்சவமும், 17ஆம் தேதி பஞ்ச மூர்த்திகள் வீதியுலா விழா நடைபெறும். இன்று நடைபெற்ற கொடியேற்றத்தில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories