நடிகை ஸ்ரீலீலா தெலுங்கில் முன்னணி நடிகையாக அதிகமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கன்னட நடிகையான இவர் அடுத்தடுத்து தெலுங்கு நடிகர்களுடன் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். மகேஷ் பாபுவுடன் அவர் சமீபத்தில் குண்டூர் காரம் படத்தில் இணையாக நடித்திருந்தார்.
இந்தப் படத்தின் மூலம் ஸ்ரீலீலா அதிகமான ரசிகர்களை சென்றடைந்துள்ளார். படம் களவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் படத்தில் குர்ச்சி மடத்தாபட்டி என்ற பாடல் தொடர்ந்து youtube-ல் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதையடுத்து ஸ்ரீலீலாவிற்கு தமிழ் மற்றும் பிற மொழிகளிலும் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்புகள் வந்துகொண்டிருகின்றன. ஆனாலும் அம்மணி நிதானமாகவே யோசித்து தன்னுடைய படங்களை தேர்வு செய்து ஒப்புதல் சொல்கிறாராம்.
அந்த வகையில் அடுத்ததாக அவர் தமிழில் எந்த ஹீரோவுடன் இணைய போகிறார் என்பது குறித்து அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. ஸ்ரீலீலாவை தமிழ் படங்களில் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
நடிகை ஸ்ரீலீலா ? Sreeleela Yes Ajith No Vijay
நடிகை ஸ்ரீலீலா கன்னடத்தில் தன்னுடைய முதல் பட என்ட்ரியை கொடுத்திருந்த போதிலும் தெலுங்கில் முன்னணி நடிகையாக மகேஷ்பாபு போன்ற முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். இளம் நடிகையான ஸ்ரீலீலா தொடர்ந்து இளம் நடிகர்களுடன் சேர்ந்து நடித்து வருகிறார்.

முன்னணி இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இவரை தமிழில் என்ட்ரி கொடுக்க மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் விரைவில் தமிழ் படத்தில் கமிட்டாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்ததாக அஜித் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாக போகும் குட் பேட் அக்லி படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்க போவதாக சொல்லப்பட்டுள்ளது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
அஜித்துடன் இணையும் ஸ்ரீலீலா?
இது தொடர்பான தகவல் குறித்து விரைவில் படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கலாம். படத்தில் அவர் அஜித்துடன் இணைவாரா என்பது குறித்து தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். அஜித் தன்னுடைய வயதிற்கு தகுந்த நடிகைகளை கடந்த சில வருடங்களாக தன்னுடைய படங்களில் இணைத்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் வித்யா பாலன், மஞ்சு வாரியர், திரிஷா ஆகியோர்களுடன் அவர் நடித்து வருகிறார். ஆனால் ஸ்ரீலீலாவிற்கு 22 வயது தான் ஆகிறது அதனால் அஜித் தன்னுடைய கொள்கையிலிருந்து விலகி ஸ்ரீலீலாவுடன் ஜோடி சேருவாரா என்பது குறித்து பொறுத்துதான் பார்க்க வேண்டும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதையும் படிங்க : முட்டை இல்லாமல் ஆம்லெட் செய்வது எப்படி?
விஜய்க்கு நோ சொன்ன ஸ்ரீலீலா?
ஆனால் குட் பேட் அக்லி படத்தில் ஸ்ரீலீலா முக்கியமான கேரக்டரில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுவதால் அவரது கேரக்டர் என்னவாக இருக்கும் என்பது குறித்து ரசிகர்கள் வினா எழுப்பி வருகின்றனர். இதனிடையே நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் பாடல் ஒன்றிற்கு ஸ்ரீலீலா இணைந்து ஆட்டம் போட இருப்பதாக கூறப்பட்டது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

முன்னதாக நடிகை திரிஷாவும் இந்த படத்தின் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டு இருப்பதாக கூறப்பட்ட சூழலில் ஸ்ரீலீலா GOAT படத்தின் ஐட்டம் பாடலிற்கு நடிக்க ஒப்புதல் கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் திரிஷா -விஜய் ஒரு சாங்கிற்கு ஆட்டம் போட்டுள்ளது ஏறக்குறைய உறுதியாகி இருக்கிறது.
இதையும் படிங்க : பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் அழகு குறிப்புகள் இருக்கிறது.. இதோ இதை முயற்சி செய்யுங்கள்..!
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
சிறப்பான டான்சர்
தமிழில் தன்னுடைய என்ட்ரி சிறப்பாக இருக்க வேண்டும் என்று ஸ்ரீலீலா நினைப்பதாகவும் அதனால் ஒரு சாங்கிற்கு ஆட்டம் போடுவதை தவிர்க்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஸ்ரீலீலா அடுத்ததாக அஜித்துடன் இணைத்து நடிக்க உள்ளார். இதனை தொடர்ந்து அடுத்தடுத்து இளம் நடிகர்களுடன் சேர்ந்து நடித்து தமிழில் ஒரு வலம் வருவார் என்று எதிர்பார்க்கலாம்.
இதனிடையே ஸ்ரீலீலா தன்னுடைய படங்களில் நடனத்தின் மூவ்மெண்ட்களுக்காக மிகச்சிறப்பான பாராட்டுக்களை பெற்று வருபவர். இவர் விஜய்யுடன் இணைந்து ஆடப்போகும் ஆட்டத்திற்காக ரசிகர்கள் காத்திருந்த சூழலில், இது இல்லை என்று தெரியவந்தும், ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதையும் படிங்க : இரட்டை வேடத்தில் த்ரிஷா .. மெகா ஸ்டாருடன்.. ரசிகர்களுக்கு செக்க விருந்து