Friday, July 11, 2025
Homeபொழுதுபோக்கு2023 னின் தெற்காசிய பிரபலங்கள்…விஜய், ஏஆர் ரகுமான் மாஸ்… தலைவர் க்ளோஸ் !

2023 னின் தெற்காசிய பிரபலங்கள்…விஜய், ஏஆர் ரகுமான் மாஸ்… தலைவர் க்ளோஸ் !

Date:

- Advertisement -

South Asia Celebrities 2023: 2023 ஆம் வருடம் தெற்கு ஆசியாவிற்கான பிரபலமான நட்சத்திரங்களின் பட்டியல் வெளியானது. இதில் தளபதி விஜய், கமல்ஹாசன், ஏஆர் ரஹ்மான் ஆகியவர்கள் கோலிவுட்டில் இருந்து இடம் பெற்ற பிரபலங்களில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர்.

2023 ஆம் வருடம் பிரபலமான தெற்காசிய பட்டியல் வெளியாகி இருக்கிறது. இதில் முதலிடத்தில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் இடம் பிடித்துள்ளார். இந்த வருடம் மட்டும் ஜவான், பதான் என மெகா ஹிட் படங்களை ஷாருக்கான் கொடுத்துள்ளார். இந்த இரண்டு படங்களும் 1,000 கோடிகளுக்கும் மேல் அதிகமாக வசூலித்தன. இதனை தொடர்ந்து ஷாருக்கானின் டுங்கி திரைப்படம் வரும் 22 ம் தேதி வெளியாகிறது. இதனால் முதல் இடத்தை ஷாருக்கான் பிடித்துள்ளார்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

South Asia Celebrities 2023

ஷாருக்கானை தொடர்ந்து ஆலியா பட் இரண்டாவது இடத்தையும், பிரியங்கா சோப்ரா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். அதே போல் ரன்பீர் ஆறாவது இடத்தை பித்துள்ளார். சல்மான்கான் உட்பட பாலிவுட் பிரபலங்களுக்கு மத்தியில் ஆலியா பட், பிரியங்கா சோப்ரா இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்துள்ளனர் ஏழாவது இடத்தை பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கோலிவுட்டில் இருந்து விஜய் மட்டும் முதல் பத்து இடத்திற்குள் வந்திருக்கிறார்.அதன்படி எட்டாவது இடம் விஜய்க்கு கிடைத்துள்ளது. உலகநாயகன் கமல்ஹாசன்,சூப்பர் ஸ்டார் ரஜினி, அஜித், டோலிவுட் பிரபலம் ராம் சரண், பிரபாஸ், கேஜிஎஃப் பிரபலம் யாஷ், அகியோரைவிட விஜய் முன்னிலையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் நடிப்பில் இந்த வருடம் லியோ, வாரிசு படங்கள் வெளியாகின. இந்த இரண்டு படங்களும் சேர்த்து பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

South Asia Celebrities 2023
South Asia Celebrities 2023

கோலிவுட்டில் இருந்து விஜய்க்கு பின்னர் ஏஆர் ரகுமான் 21 வது இடத்தை பிடித்துள்ளார். பத்துதல, பொன்னியின் செல்வன் 2, மாமன்னன், இந்தியில் மைதான், பிப்பா ஆகிய படங்கள் வெளியாகின. ஏஆர் ரகுமானை தொடர்ந்து உலக நாயகன் இந்த பட்டியலில் 23 வது இடத்தில உள்ளார். கமல்ஹாசன் நடிப்பில் கடந்த வருடம் வெளியான விக்ரம் திரைப்படம் இண்டஸ்ட்ரி ஹிட் அடித்திருந்தது.தற்போது அவர் கல்கி, இந்தியன் 2, தக் லைஃப் ஆகிய படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

2023 ஆம் வருடத்திய தெற்காசிய பிரபலங்கள் பட்டியலில் இந்தி பாடகர் 13 வது இடத்திலும் தீபிகா படுகோன் 19 வது இடத்திலும் உள்ளார்கள். டோலிவுட் ஹீரோ ஜூனியர் என் டி ஆர் 25 இடமும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழில் இருந்து விஜய் மட்டுந்தான் முதல் 10 இடங்களில் ஒருவராக, அதாவது 8 வது இடம் பிடித்துள்ளார். அதே போல் கமல்ஹாசன், ஏ ஆர் ரகுமான், விஜய் ஆகியோர்கள் 25 இடங்களுக்குள் தேர்வாகியுள்ளனர்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories