உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் தயாராகி வரும் ’தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், இந்த படத்தில் சிம்பு இணைந்து நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் இது குறித்து அறிவிப்பானது விரைவில் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.

’தக்லைஃப்’ படத்தில் ஒரு முக்கியபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடிக்க இருந்த நிலையில் அவர் திடீரென இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் துல்கர் சல்மான் நடிக்கவுள்ள கேரக்டரில் யாரை நடிக்க வைக்கலாம் என மணிரத்ணம் ஆலோசனையில் ஈடுபட்டிருந்த நிலையில் நானி நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதையும் படிங்க : வீட்டிலேயே எளிமையாக ருசியான அத்திப்பழம் கீர் செய்யலாம்!
Simbu to act in Thug Life
ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி சிம்பு இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் சிம்புவிடம் 15 நாள் கால் சீட் வாங்கினால் இந்த படத்தில் அவருக்கான கேரக்டரை முடித்து விடலாம் என்றும் ஆலோசனை நடந்து வருகிறது. சிம்புவிடம் இது குறித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் ’எஸ்டிஆர் 48’ படத்தை தொடங்குவதற்கு முன்பே இந்த படத்தில் நடித்து முடித்து விடலாம் என்று சொல்லப்படுவதாகவும் தெரிகிறது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
கமல்ஹாசனும் நேரடியாகவே சிம்புவிடம் இது குறித்து பேச்சு வார்த்தை நடத்த போவதாகவும் சிம்பு இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வார் என்றே கூறப்படுகிறது.
ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் தயாரான ’செக்கச்சிவந்த வானம்’ என்ற படத்தில் சிம்பு ஒரு கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் அந்த கேரக்டர் சிம்புவிற்கு மிகப் பெரிய அளவில் பெயரையும் புகழையும் பெற்று தந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மீண்டும் மணிரத்னம் இயக்கும் ’தக்லைஃப்’ படத்தில் சிம்பு இணைந்து நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதையும் படிங்க : ஜோதிகாவின் இளமையின் ரகசியம்…வெறித்தனமான மிரட்டல் வொர்க் அவுட் ரகசியம் இதுதானா.!