Friday, July 11, 2025
Homeபொழுதுபோக்குபிரமாண்டமாக திருமணம் ஆன சில மாதங்கள் வரை தாக்கு பிடிக்கல… சங்கரின் மகள் 2 வது...

பிரமாண்டமாக திருமணம் ஆன சில மாதங்கள் வரை தாக்கு பிடிக்கல… சங்கரின் மகள் 2 வது திருமணம்..

Date:

- Advertisement -

Shankar’s daughter from 2nd marriage : இயக்குனர் சங்கருக்கு ஐஸ்வர்யா, அதிதி என்ற இரண்டு மகள்களும், அர்ஜித் என்ற ஒரு மகனும் உள்ளனர். இதில் ஷங்கரின் இரண்டு மகள்களும் மருத்துவம் படித்துள்ளனர். இளைய மகள் அதிதி படித்து முடித்தவுடன் சினிமாவுக்குள் நுழைந்துவிட்டார். இயக்குனர் சங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா சங்கருக்கு கடந்த 2021ஆண்டு தொழிலதிபர் தாமோதரனின் மகனான கிரிக்கெட் விளையாட்டு வீரர் ரோஹித் என்பவருடன் திருமணமானது.

Shankar's daughter from 2nd marriage
Shankar’s daughter from 2nd marriage

இந்த திருமணம் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் நடைபெற்றதால் வெகுவான பேரை அழைத்து, இவர்களுக்கு திருமணம் செய்ய முடியவில்லை. இருந்தாலும் ஐஸ்வர்யாவின் திருமணம் மிக பிரம்மாண்டமாகவே நடைபெற்றது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இந்த திருமணம் கொரோனா காலகட்டத்தில் நடைபெற்றதால், சங்கர் தனது மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு ஊரடங்கு முடிந்த பின் ரிசப்ஷன் வைக்க வேண்டும் என நினைத்தார். அதன்படி 2022ஆம் வருடம் மே 1 இவர்களது ரிசப்ஷன் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் எந்த காரணம் கூறாமல் இந்த ரிசப்ஷன் நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டது. ஐஸ்வர்யாவுக்கும், கிரிக்கெட் வீரரான ரோஹித்துக்கும் திருமணம் நடந்தது அதே வேகத்தில் பிரச்சனை ஏற்பட்டது. திருமணம் நடந்த சில மாதங்களிலேயே ஷங்கரின் மருமகன் ரோஹித், பாலியல் வழக்கு ஒன்றில் மாட்டிக்கொண்டார். அவர் நடத்திக்கொண்டுள்ள கிரிக்கெட் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற வந்த பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் கிளம்பியதை அடுத்து ரோஹித் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதையும் படிங்க : Razia Khanam Biography, Wiki, Age, Web Series, Pictures

இந்த புகாரில் சிக்கியதை அடுத்து கணவனை பிரிந்து தனிமையில் வாழ்ந்து வந்தார் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா. சட்டப்படி திருமணம் ஆகி 6 மாதம் முடிந்து தான் விவாகரத்து செய்ய முடியும் என்பதால் காத்திருந்த ஐஸ்வர்யாவிடம், குடும்பத்தார் எவ்வளவோ எடுத்துக்கூறியும் ஐஸ்வர்யா தன் கணவரை விவாகரத்து செய்வதற்கு உறுதியாக இருந்தவர், சத்தமே இல்லாமல் விவாகரத்தும் வாங்கி விட்டதாக தகவல் வெளியானது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Shankar’s daughter from 2nd marriage

இந்நிலையில் ஐஸ்வர்யா தனது தந்தையுடன் அவரது வீட்டில் வசித்து வந்தார், மேலும் கணவரை விட்டு பிரிந்து வந்த ஐஸ்வர்யா மருத்துவராகவும் பணிசெய்து வந்தார். இதையடுத்து தன் வீட்டிற்கு ரோஹித்தை பிரிந்து வந்த ஐஸ்வர்யாவுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்து தர முடிவெடுத்தார் ஷங்கர். இதையடுத்து முன்பின் தெரியாதவர் வேண்டாம் என தன்னிடம் உதவியாளராக உள்ள தருண் கார்த்திகேயனையே ஐஸ்வர்யாவுக்கு மாப்பிள்ளையாக்க முடிவெடுத்து நிச்சயதார்த்தமும் நடத்திவிட்டார்.

ஐஸ்வர்யாவின் தங்கை அதிதி ஷங்கர், நிச்சயதார்த்தத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டா ஸ்டோரீஸில் வெளியிட்டு வாழ்த்தினார். ஐஸ்வர்யா 2 திருமணம் செய்ய போகும் தருண் கார்த்திகேயன் உதவி இயக்குநர் மட்டும் அல்ல. அவர் ஒரு பாடகர், பாடலாசிரியரும் கூட. ஷங்கரிடம் உதவியாளராக இருந்து வருபவர்கள் கோலிவுட்டில் அசத்துகிறார்கள். அதனால் தருண் கார்த்திகேயன் இயக்குநராகும் போது தன் திறமையை பற்றி அனைவரையும் பேச வைப்பார் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார் சங்கர்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

தருண் கார்த்திகேயனுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் விரைவில் திருமணம் நடக்கும் என கூறப்படும் நிலையில், ஐஸ்வர்யா, தருண் கார்த்திகேயனின் நிச்சயதார்த்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்களோ, ஐஸ்வர்யாமுதல் திருமணத்தில் கஷ்டப்பட்டுவிட்டார். இரண்டாவது திருமணம் அவருக்கு மகிழ்ச்சியை கொடுக்கட்டும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர், நீங்களும் அவர்களே வாழ்தலாமே.

இதையும் படிங்க : 10 நிமிடத்தில் ருசியான ஓமப்பொடி செய்வது எப்படி..?

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories