சீரியல் நடிகை தீபா, 5 வயது மகனுடன் யாருடைய ஆதரவும் இல்லாமல் நடு ரோட்டில் நின்றேன் என்று பேட்டி ஒன்றில் கண்ணீரோடு தெரிவித்துள்ளார்.அந்த சூழ்நிலையில் பெண்ணாக எப்படி வாழப்போகிறோம் என்கிற பயம் வந்தது. ஆனால், அதைகாட்டிலும் எனக்கு தைரியம் வந்தது அந்த தைரியம் தான் இதுவரையில் என்னை வாழ வைத்துக்கொண்டு உள்ளது என்றார்.

அன்பே சிவம், அத்திப்பூக்கள், நாம் இருவர் நமக்கு இருவர், பிரியமான தோழி ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தீபா. இவருக்கு கடந்த வருடம் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி தொடர்களில் தயாரிப்பு மேலாளராக வேலை பார்த்த சாய் கணேஷ் பாபுவுடன் திருமணம் நடைபெற்றது. முதல் கணவரை பிரிந்து வாழும் தீபா, 15 வயதில் மகன் இருக்கும் போது 2 ஆவது கல்யாணம் செய்து கொண்டது பெரிய பேச்சிற்கு ஆளானது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதையும் படிங்க : Deepika Damu Biography, Wiki, Age, Serials, Images
Serial actress Deepa tears
இந்நிலையில் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த தீபா, எனக்கு பதினேழு வயதில் திருமணம் ஆனது, திருமணம் நடந்த அடுத்த ஆண்டே எனக்கு குழந்தை பிறந்து விட்டது. மேலும் என் திருமண வாழ்க்கை நான் நினைத்தது போல இல்லை. என்னுடைய 23 வது வயதிலேயே எனது திருமண வாழ்க்கை முடிந்துவிட்டது. அப்போ என் பையனுக்கு 5 வயசு தான்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

அவன் கையை பிடித்துக்கொண்டு எங்கே போவது என்று தெரியாமல் அனாதையாக நடுத்தெருவில் நின்றேன். அந்த நேரத்தில் எதுக்குடா வாழனும் என்ற எண்ணம் தோன்றியது. என்னை சுற்றி இருந்தவர்கள் எல்லோரும் தப்பானவர்களாக இருந்தார்கள். அனைத்துமே தப்பா இருந்ததால், எனக்கு அந்த நினைப்பு வந்தது. ஆனால், அந்த சமயத்தில் எனக்கு தைரியம் சொன்னது என் பையன், நான் இப்போ வரைக்கும் அவனுக்காகத்தான் ஓடிக்கொண்டு இருக்கிறேன்.
சினிமாவிற்கு வந்து 18 வருஷம் முடிந்து விட்டது, இப்பொழுது தான் நல்ல கதாபாத்திரம் கிடைக்கிறது. இந்த இடத்தை பெறுவதற்கு நான் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன். ஆனால், வெளியில் இருந்து கொண்டு பார்ப்பவர்களுக்கு அந்த வலி தெரியவில்லை. ஒரு பெண்ணாக நான் தனியாக இருந்து பல பிரச்சனைகளை சந்தித்தேன். நான் யாரிடம் உதவி கேட்டாலும், அவர்கள் பார்வை தவறாகத்தான் இருக்கிறது. அந்த நேரத்தில் இருந்து இப்போது வரை அந்த பிரச்சனையை சமாளித்துக்கொண்டு தான் வருக்கிறேன்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதையும் படிங்க : நயன்தாரா, விக்னேஷ் சிவன் குறித்து ஜோதிடர் சொல்லியது நடந்துடுமோ? : சினிமா ரசிகர்கள்
நான் 2 ஆம் திருமணம் செய்து கொண்ட போது, இவ்வளவு பெரிய மகன் இருக்கிறான்,உனக்கு 2 ஆவது திருமணம் தேவையா என பலர் சொன்னார்கள். என் அப்பாவும், என் மகனும் தான் 2 ஆவது கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்பினார்கள். ஆனால், அந்த கல்யாணமும் ஏன் செய்தோம் என்று பல முறை நினைத்து வருத்தமடைந்துளேன். எனக்கு எல்லாம் என் மகன் தான் அவனுக்காக, நான் இன்னும் ஓடிக்கொண்டே இருப்பேன். என் மகனை நன்றாக படிக்க வைத்தால் போதும் எனக்கு.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇