Semiya Sweet Recipe in Tamil : அன்பான நண்பர்களே… இன்று நம் பதிவில் அனைவருக்கும் பிடித்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய ஒரு அருமையான சுவையுள்ள ஸ்வீட் செய்வது எப்படி என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். நீங்கள் ஒரு முறை இந்த ஸ்வீட் மட்டும் செய்து சாப்பிட்டால் போதும் தினமும் சாப்பிட வேண்டும் என்று நினைப்பீர்கள். அவ்வளவு ருசியாக இருக்கும் இந்த சேமியா ஜாமுன் ஸ்வீட். இந்த சேமியா ஜாமுன் ஸ்வீட்டை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு மாலை வேளையில் செய்து கொடுத்து அசத்தலாம்.

நம் பதிவில் இன்று அனைவருக்கும் மிகவும் பிடித்த சேமியா ஜாமுன் ஸ்வீட் செய்வது எப்படி என்பதை இப் பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். வாங்க நண்பர்களே எப்படி சேமியா ஜாமுன் ஸ்வீட் செய்வது என்பதை பார்ப்போம்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
தேவையான பொருட்கள்: Semiya Sweet Recipe in Tamil
- 2 டீ ஸ்பூன் – சோளமாவு
- 1 கப் – பால்
- 4 டீ ஸ்பூன் – சர்க்கரை
- 2 டீ ஸ்பூன் – நெய்
- 100 கிராம் – சேமியா
- ஏலக்காய் – (தேவையான அளவு )
செய்முறை: Semiya Sweet Recipe in Tamil
ஒரு கடாயில் இரண்டு டீ ஸ்பூன் சோள மாவை போட வேண்டும். பின் அதனுடன் 4 டீ ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கொள்ள வேண்டும்.
பின் அதனுடன் ஒரு கப் பால் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். நன்கு கலந்த பிறகு அதை அடுப்பில் வைக்க வேண்டும். பின் அதை அடி பிடிக்காமல் நன்றாக கலக்க வேண்டும். இந்த பாலானது கெட்டியாக வரும் வரை நன்கு கிண்ட வேண்டும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இது கெட்டியாக வந்ததும் அதில் 2 டீ ஸ்பூன் நெய் சேர்த்து கொள்ள வேண்டும். பின் வாசனைக்காக அதனுடன் சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்து கொள்ள வேண்டும்.
பின் ஒரு பாத்திரத்தில் சூடான தண்ணீர் ஊற்றி அதில் அந்த 100 கிராம் சேமியாவை கொட்டி 1 நிமிடம் ஊறவைக்க வேண்டும். 1 நிமிடம் கழித்து சேமியாவை தண்ணீர் இல்லாமல் நன்கு வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
பின்பு ஊறவைத்த சேமியாவுடன் 2 டீ ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக்கொள்ள வேண்டும். அதனுடன் 2 டீ ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க : முட்டை இல்லாமல் ஆம்லெட் செய்வது எப்படி?
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
பின் ஒரு குழிப்பணியார கல்லை எடுத்து கொள்ள வேண்டும். அதில் கொஞ்சம் நெய் தடவி கொள்ள வேண்டும்.
பின் நாம் கலந்து வைத்துள்ள சேமியாவை அனைத்து குழிகளிலும் கொஞ்சமாக வைக்க வேண்டும். பின் அதை நன்கு குழி போல செய்து கொள்ள வேண்டும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
பின்னர் நாம் செய்து வைத்திருக்கும் சோள மாவை குழி பணியாரத்தில் வைக்க வேண்டும். பின் மீதமிருக்கும் சேமியாவை இதன் மேல் வைத்து பணியாரம் போன்று செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் இதை அடுப்பில் வைத்து மூடி பத்து நிமிடம் நன்றாக வேகவைக்க வேண்டும். பிறகு அதை திருப்பி கொள்ள வேண்டும். அதையும் பத்து நிமிடம் நன்றாக வேக வைத்து பொன்னிறமாக வந்தபிறகு இறக்க வேண்டும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதையும் படிங்க : உங்கள் உணவில் முருங்கை சேர்க்க 5 வகையான வழிகள்.!