Semiya Payasam : நம் வீட்டில் நடக்கக்கூடிய அனைத்து சுபநிகழ்ச்சிகளுக்கும் சாப்பாடென்று எடுத்துக்கொண்டால் கண்டிப்பாக இனிப்புவகை இருக்கும். அதிலும் முக்கியமாக நாம் சேர்த்து கொள்ளும் இனிப்பு வகை என்றால் அது பாயசந்தான். பாயாசங்களை பலவகையில் செய்வார்கள். ஆனால் பாரம்பரிய காலத்திலிருந்து நமது உணவு சங்கிலியில் பாயாசத்திற்கென்று ஒரு முக்கியத்துவம் கொடுத்துவருகிறோம். ஆம், கல்யாண வீடுகளில் கட்டாயம் பாயசம் பரிமாறுவார்கள் சேமியா பாயசம் இல்லையென்றால் பருப்பு பாயசம் இதில் ஏதாவது ஒன்றை கட்டாயம் செய்வார்கள்.

ஆனால் நாமமும் பாயசத்தை வீடுகளில் செய்வது அரிதாகவே உள்ளது. முன்னராவது பண்டிகை காலங்களில் பலர் வீட்டில் பாயசம் செய்வார்கள். ஆனால் இப்போது அதுவும் குறைந்து விட்டது. பண்டிகை நாட்கள், கல்யாண வீடுகள், சுப நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களில் மட்டும் பாயசம் சாப்பிடலாம் என்று அவசியம் இல்லை. நீங்களும் உங்களுடைய வீட்டில் பாயாசம் செய்து உங்கள் ஆசைதீர சாப்பிடலாம். இப்போது சேமியா பாயாசம் செய்வது பற்றி, தேவையான பொருட்கள், செய்முறைகள் பற்றி அனைத்தையும் இந்த சமையல் குறித்து இப்போது பார்ப்போம்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Read More : உங்கள் உணவில் முருங்கை சேர்க்க 5 வகையான வழிகள்.!
Equipment : Semiya Payasam
- 1 கடாய்
- 2 பவுல்
தேவையான பொருட்கள்: Semiya Payasam
- 1/2 குழி கரண்டி நெய்
- 15 உலர் திராட்சி
- 10 முந்திரி பருப்பு
- 1/2 கப் சேமியா
- 1/2 கப் சர்க்கரை
- 2 கப் தண்ணீர்
- 1/2 கப் பால்
- 3 ஏலக்காய்
- 1 சிட்டிகை உப்பு
செய்முறை :
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேவையான அளவு நெய் ஊற்றி கொள்ளவும்.அந்த நெய் சூடேறியதும் முந்திரி பருப்பை சேர்த்து வறுத்துக்கொள்ளவும். முந்திரி பருப்பு பொன்னிறமாக வருமாறு அதை வறுத்து எடுக்கவும். முந்திரிப்பருப்பு பொன்னிறமானதும் அதில் உலர் திராட்சி போட்டு வதக்கவும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
பின்பு ஒரு பவுலில் வறுத்த பொருட்களை எடுத்து வைத்துக்கொள்ளவும். மீண்டும் அதே கடாயில் தீயை குறைத்து விட்டு சேமியாவை வறுத்து எடுத்துகொள்ளவும். பொன்னிறமாக சேமியா வரும் வரை வறுத்து எடுத்து கொள்ளவும். வறுத்து எடுத்த சேமியாவை ஒரு பவுலில் எடுத்து வைத்து கொள்ளவும்.
Read Also : தாய் ஐஸ் டீ யை எப்படி செய்வது?
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
பின்னர் தண்ணீரை கடாயில் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதித்ததும் அதில் வறுத்த சேமியா தேவையான அளவு உப்பையும் சேர்த்து கலக்கவும். சேமியா மென்மையாக வரும் வரை கொதிக்க வைக்கவும். பின்பு சேமியா மெண்மையாக வந்ததும் அதனுள் சக்கரை, மற்றும் ஏலக்காய் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.
பிறகு இதனுடன் பாலை சேர்த்து கொதிக்க விடவும் பால் நன்கு சூடேறி கொதித்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி கொள்ளவும். பின்னர் நாம் நெய்யில் வறுத்து வைத்துள்ள உலர் திராட்சை மற்றும் முந்திரி பருப்பு இவற்றை இதனுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.நமக்கு சுவையான சேமியா பாயாசம் ரெடியாகிவிட்டது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Nutrition :
Serving: 6Person | Protein: 7.7g | Calories: 373kcal | Fiber: 0.1g | Carbohydrates: 36.5g