மொபைல் யூசர்களுக்கு ட்ராய் (TRAI) ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. புதிய எண்ணில் இருந்து போன் செய்பவரின் பெயரை தெரிந்துகொள்ள சிறப்பு வசதி அறிமுகப்படுத்தப்பட்டு வருவதாக ட்ராய் கூறியுள்ளது.
ட்ரூ காலரைப் பயன்படுத்தாமல் அழைப்பவரின் பெயரை அறிந்துகொள்ளும் வசதியை டிராய் இன்னும் சில தினங்களில் அறிமுகப்படுத்தவுள்ளது. நம் போனில் மற்றவரின் எண்ணை சேவ் செய்யாவிட்டாலும், மற்றவரின் பெயரை நம் ஸ்கிரீனில் தோன்றும் வகையில் பெயர் விளக்கச் சேவையை டிராய் கொண்டு வருகிறது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
see the caller name without any app
நாடு முழுவதும் பெயர் விளக்கச் சேவையை TRAI இந்த மாதம் 15ஆம் தேதி தொடங்கவுள்ளது. சிம் கார்டு வாங்கும் போது கொடுக்கப்படும் தரவுகளை வைத்து அழைப்பாளர்களின் பெயர்கள் போன் ஸ்கிரீனில் தோன்றும் எனத் தெரிகிறது.

தகவல் பாதுகாப்பு பற்றிய கவலைகளை அடுத்து TRAI இந்த முடிவை எடுத்துள்ளது. தற்போது, தெரியாத நம்பர்களில் இருந்து அழைப்பவர்களின் பெயரை அறிய, ட்ரூ காலர் போன்ற ஆப்களை பல பேர் பயன்படுத்தி வருகின்றனர்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
டிராய் கொண்டு வந்துள்ள இந்த புதிய அம்சத்தின் வாயிலாக மற்றவரின் பெயர் எந்த ஆப்ஸ் உதவியும் இல்லாமல் ஸ்கிரீனில் வரும். ஷவ்மி போன்ற சில போன்களில் இந்த அம்சம் ஏற்கனவே இருக்கும் நிலையில், டிராய் இதை எல்லோருக்கும் கிடைக்கச் செய்ய உள்ளது.
பெண்கள் ஆண்களை விட சோம்பேறிகள்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்.. தீர்வு என்ன?
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇