Saturn In Aquarius 2024: வேத சாஸ்திரங்களின்படி நவகிரகங்களில் சனிபகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். ஒரு ராசியில் 2 1/2 வருடங்கள் வரை சனிபகவான் அமர்ந்து இருப்பார். இப்படி 2 1/2 வருடங்கள் இருப்பதால், சனியின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே சற்று கூடுதலாகவே இருக்கும்.
அதுவும் ஏழரை சனி, அஷ்டம சனி மற்றும் அர்த்தாஷ்டம சனியால் அவதிப்பட்டவர்கள் இன்னும் மோசமான பலன்களை அனுபவிக்க நேரிடும். குறிப்பாக பொருளாதார நிலை, ஆரோக்கியம் இவைகளில் பிரச்சனைகள் வர நேரிடும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
அந்த வகையில் இன்னும் சில தினங்களில் 2024 ஆம் வருடத்தில் நுழைய போகிறோம். இந்த வருடம் முழுவதும் சனிபகவான் கும்பத்தில் பயணிக்க போகிறார். சொல்லப்போனால் 2025 ஆம் வருடம் வரை கும்பராசியில் தான் இருப்பார்.
கும்பராசியில் சனிபகவான் உள்ளதால், சில ராசிக்காரர்கள் 2024 ஆம் வருடத்தில் ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகளை சந்திக்க இருக்கிறார்கள். அதைப்பற்றி அந்த ராசி உள்ளவர்கள் யார் என்பதை பார்ப்போம்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இந்த 3 ராசிக்காரர்கள் கவனமாக இருங்க.. | Saturn In Aquarius 2024
மேஷம்
மேஷராசியின் 11 ஆவது வீடான லாபஸ்தானத்தில் சனிபகவான் இருக்கிறார். இதனால் 2024 ஆம் வருடத்தில் இந்த ராசிக்காரர்கள் அனைவரும் சற்று கவனமாக இருக்க வேண்டும்.முக்கியமாக உங்களுடைய ஆரோக்கியம் பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. நீங்கள் குழப்பமான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டிவரும்.
இந்த நிலையில் நீங்கள் கவனமாக இருக்கவேண்டும்.இந்த வருடம் பழைய நோய்கள் மீண்டும் வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. உங்களுடைய உடல் ஆரோக்கியம் நல்லமுறையில் இருக்க தியானம், யோகா,உடற்பயிற்சி போன்றவற்றில் தினந்தோறும் ஈடுபடுங்கள்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
விருச்சிகம்
2024 ஆம் வருடத்தில் விருச்சிக ராசியின் 4 வது வீட்டில் சனிபகவான் இருக்கிறார். அதனால் இந்த வருடம் சிறப்பாக இருக்காது. ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் வரக்கூடும். முக்கியமாக விருச்சிக ராசிக்காரர்கள் முதுகுவலி மற்றும் கால்வலியால் மிகவும் அவதிப்படுவீர்கள்.
தேவையற்ற செலவுகள் அதிகம் வரும். சாப்பிடும் உணவில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. அதோடு சுறுசுறுப்பாக இருப்பதற்கு முயற்சிக்க வேண்டும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
கும்பம்
கும்பராசியில் சனிபகவான் சஞ்சாரம் செய்கிறார். அதுவும் ஏழரைச்சனி நடந்து கொண்டிருக்கிறது. 2024 ஆம் வருடத்தில் உங்கள் ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். வசதி வாய்ப்புகள் சற்று குறையும்.தேவையற்ற செலவுகள் அதிகமாக வரும்.
மே மாதத்திற்கு பிறகு நிலைமை சற்று குறையலாம்.இருப்பினும் சில காரணங்களால் மனஅழுத்தம் உண்டாக நேரிடும். இந்த மனஅழுத்தம் வராமலிருக்க தியானம்,யோகா போன்றவற்றை செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
SUBSCRIBE V TAMIL LIFESTYLE OFFICIAL CHANNEL | CLICK HERE |
---|---|
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | வி தமிழ் செய்தி |
சமையல் குறிப்பு சம்மந்தமான அனைத்து பதிவுகளையும் இங்கு காணலாம் –> | ஆனந்தி சமையல் |