Friday, July 11, 2025
Homeபொழுதுபோக்குSaroja Devi & Shivaji : சிவாஜியை பல மணி வரை காக்க வைத்த சரோஜா...

Saroja Devi & Shivaji : சிவாஜியை பல மணி வரை காக்க வைத்த சரோஜா தேவி!. டிராப் ஆன திரைப்படம்!..

Date:

- Advertisement -

Saroja Devi & Shivaji : திரை உலகை பொறுத்தவரை பல காரணதினால் ஒரு படம் கைவிடப்படும். தயாரிப்பாளர் சம்மதம் சொல்லிய பிறகு ஒரு படம் துவங்கப்படும். படப்பிடிப்பில் இயக்குனர் எப்படி காட்சிகளை படம் பிடிக்கிறார் என்பதில் அதிருப்தி உண்டானால் படம் நிறுத்தப்படும். சில நேரங்களில் இயக்குனர் மாறுவார். சில நேரங்களில் படம் டிராப் ஆகிவிடும்.

சில படங்கள் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தாலும் தயாரிப்பாளரால் பணத்தை புரட்டமுடியாமல் படம் எடுப்பது நின்று விடும். சில சமயம் அந்த படத்தில் நடிக்காமல் ஹீரோ விலகி விடுவார். சில சமயம் கதாநாயகி நடிக்காமல் விலகி விடுவார். சில படங்களில் தயாரிப்பாளரிடம் சண்டை போட்டு கொண்டு இயக்குனர் அப்படத்திலிருந்து விலகிவிடுவார்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

saroja devi & Shivaji
saroja devi & Shivaji

Saroja Devi & Shivaji Movie Drop

இப்படி ஆரம்பித்த ஒரு திரைப்படம் நின்று போவதற்கு பல காரணங்களை சொல்லி கொண்டே போகலாம். சில சமயம் கதையிலேயே அப்படத்தின் தயாரிப்பாளருக்கு திருப்தி இல்லாமல் போகும். எனவே, அந்த படத்தை அப்படியே நிறுத்தி விட்டு வேறு கதையை படமாக எடுப்பார்கள். இது போல பலமுறை தமிழ் சினிமாவில் நடந்திருக்கிறது.

அதேபோல், கால்ஷீட் கொடுத்த நடிகரோ, நடிகையோ படப்பிடிப்புக்கு வராமல் போவது என்பது இப்போது இல்லை.. அந்த காலத்திலும் இருந்திருக்கிறது. அப்படி, ஒரு நடிகை படப்பிடிப்பு தளத்திற்கு பல மணி நேரம் வராததால் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திரைப்படம் ஒன்று டிராப் நின்று போனது அதை பற்றித்தான் இங்கே பார்க்கப்போகிறோம்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Read Also : விஜயகாந்த் நினைவிடத்தில் சரத்குமார் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

60 களில் சிறந்த கதாசிரியரான சாண்டில்யன் கதை எழுதி கே.சோமு என்பவர் இயக்கிய திரைப்படம் ஜீவ பூமி. ஒருநாள் அந்த படப்பிடிப்பில் சிவாஜி, சரோஜா தேவி நடிக்க ஒரு முக்கியமான காட்சி படமாக்க வேண்டியிருந்தது. சிவாஜி காலை 8 மணிக்கெல்லாம் மேக்கப்புடன் தயாராக இருந்தார். ஆனால் மதியம் 2 மணி வரை சரோஜா தேவி வரவில்லை.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இருந்தும் சிவாஜி கோபப்படவில்லை. ஆனால், இயக்குனர் சோமு படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு சிவாஜியை அனுப்பி வைத்தார். அதன்பின் தயாரிப்பாளரிடம் சென்று ‘சரோஜா தேவி படப்பிடிப்புக்கு வராமல் இருந்தால் இந்த படத்தை எப்படி இயக்க முடியும்?’ என சொல்லிவிட்டு சென்றுவிட்டார். அன்று சரோஜா தேவி அப்படி நடந்துகொண்ட காரணத்தால் ஜீவபூமி என்கிற திரைக்காவியத்தை ரசிகர்களால் ரசிக்க முடியாமல் போய்விட்டது என்றே சொல்ல வேண்டும்.

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories