Friday, July 11, 2025
Homeஆன்மீகம்அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு பால்குட விழா

அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு பால்குட விழா

Date:

- Advertisement -

Sametha Amrithakateswarar Temple : தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் பிரசித்தி பெற்ற அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு பால்குட விழா. 1000 ம் பேர்க்கு மேல் பால்குடம் எடுத்து வழிபாடு.தருமபுரம் ஆதீனம் சக்தி கரகத்திற்கு தீபாராதனை வழிபாடு

Sametha Amrithakateswarar Temple
Sametha Amrithakateswarar Temple

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீஅபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயம் உள்ளது. ஆண்டு தோறும் தை அமாவாசை அன்று பால்குட திருவிழா மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். 9/02/2024 லில் தை அம்மாவாசையை முன்னிட்டு 17ஆம் ஆண்டாக அபிராமி அம்மன் பால்குட திருவிழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதையும் படிங்க : சுரைக்காயில் உள்ள மருத்துவ பயன்கள்..!

இந்த விழாவை முன்னிட்டு பொது மக்கள் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் மஞ்சள் உடை உடுத்தி ஆணைகுளக்கரையில் அமைந்துள்ள எதிர்காலேஸ்வரர் ஆலயத்திலிருந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். கோயில் வாசலில் தருமபுரம் ஆதீனம் 27 வது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சக்தி கரகத்திற்கு தீபாராதனை காண்பித்தும், வரவேற்றும் வழிபாடு செய்தார். தொடர்ந்து பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள் ஆலயத்தை சுற்றி வந்து அபிராமி அம்மன் சன்னதியில் பால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதையும் படிங்க : சங்கி என்பதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories