samayal tips in tamil
கோதுமை மாவில் தேவையான அளவு உப்பு போட்டு மிதமான வெண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து இதனுடன் துருவிய கேரட் காலிஃப்ளவர், பீட்ருட், வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி அடை செய்தால் சத்தான ருசியுள்ள அடை தயார்
தானியம் பயிறு வகைகளை 8 மணி நேரம் ஊறவிட்டு ஹாட் பேக்கில் மூடி அடுத்த நாள் திறந்து பார்த்தால் முளை கட்டிய தானியம் ரெடி.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

உருளை கிழங்கு போண்டா செய்வது போல்,எல்லா காய்கறிகளையும் சேர்த்து வதக்கி உருட்டி கடலை மாவில் தோய்த்து எண்ணெய்யில் போட்டு பொரித்தால் வெஜிடபிள் போண்டா தயார்.
மழை காலத்தில் உப்பில் நீர் சேர்ந்திருக்கும்.அப்போது உப்பு ஜாடியில் 4 அல்லது 5 அரிசி போட்டு வைத்தால் தண்ணீர் படியாது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
உளுந்து கொஞ்சம் குறைவாய் போட்டு கெட்டியாக அரைத்து இட்லி செய்யும் போது அதில் ஒரு கிண்ணம் நல்லெண்ணெய் செய்து கலக்கி இட்லி வார்த்தால் மிருதுவாக வரும். 2 தினங்கள் கெட்டுப்போகாது. வெளியில் சென்றால் இதுபோல் செய்யலாம்.
எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம் செய்யும் போது வறுத்த பொட்டுக்கடலை கலந்தால் சுவையாக இருக்கும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதையும் படிங்க : சுவையான தக்காளி குருமாவை செய்வது எப்படி?
இடியப்பம் செய்து மீந்து விட்டால் அதை புளித்த தயிரில் ஒரு நாள் ஊற வைத்து நிழலில் காயவைத்து வற்றாலானது சேமித்துக்கொண்டு தேவையான போது வறுத்து சப்பிடலாம். நல்லெண்ணெயில் பொரித்தால் ருசியாக இருக்கும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
பிரடின் பழுப்பு நிற பகுதியை எடுத்து மிக்சியில் அரைத்து அதனுடன் பாதி அளவு அரிசி, கடலை மாவு கலந்து பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து அப்பம் செய்தால் ருசியாக இருக்கும்.
காய்கறிகளில் சாலட் செய்தால் நறுக்கியவுடன் எலுமிச்சை சாறு, உப்பு சேர்க்காமல் சாப்பிடும்போது சேர்த்து சாப்பிடவேண்டும். முன்பே சேர்த்தால் சாலட்டில் தண்ணீர் விட்டுகொள்ளும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதையும் படிங்க : தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் மானசா சவுத்ரி…