Samayal Kurippu Tips in Tamil : நல்ல உள்ளங்களுக்கு வணக்கம், இந்த பதிவில் பெண்கள் அனைவருக்கும் இது நல்ல உதவியாக இருக்கும் ஆகவே இங்கு சில சமையல் பற்றிய டிப்ஸ்களை படித்து தெரிந்து கொள்ளலாம். வீட்டில் இருக்கும் இடங்களில் முக்கியமான இடம் நமது வீட்டின் சமையலறை, வீட்டிலிருக்கும் பெண்களுக்கு பெருபாலான நேரம் சமையல் செய்வதிலே போய்விடும்.
சமயலறைகளில் செய்ய வேண்டிய வேலைகளை சுலபமாக செய்ய சில சுலபமான குறிப்புகளை தெரிந்து கொண்டாலே போதும். அந்த வகையில் இங்கு பெண்களின் வேலையை மிக எளிதாக செய்வதற்கு சில பயனுள்ள டிப்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Samayal Kurippu Tips in Tamil
1 . டிப்ஸ்
தேங்காய் ஓட்டிலிருந்து தேங்காயை தனியாக எடுப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். அதனால் தேங்காயை கேஸ் அடுப்பின் மேலே வைத்து குறைந்த Flame-ல் சூடாக்கவும். சூடாக்கும்போது இடுக்கியால் தேங்காயை திருப்பி விடவும்.
தேங்காய் முற்றிலும் சூடானதும் அடுப்பை அணைத்துவிட்டு தேங்காயை எடுத்து ஸ்பூனால் நெம்பினால் அது தனியாக வந்துவிடும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
2 . டிப்ஸ்
பாயாசம் செய்யும்போது பால் திரிந்து விட்டால், சமையல் சோடாவினை 2 சிட்டிகை போட்டால் திரிந்த பாலானது சரியாகிவிடும்.
3 . டிப்ஸ்
சாம்பார் செய்யும் போது புளிப்பு சுவை அதிகமாக இருந்தால் கொஞ்சம் நாட்டு சர்க்கரை சேர்த்து சர்க்கரை கரையும் வரை சாம்பாரை கொதிக்க வைக்கவும்.சாம்பாரில் உள்ள புளிப்பு சுவையானது குறைந்து போகும் சாம்பார் சுவையாக இருக்கும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
சாம்பாரை இறக்கும் போது ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றினால் சாம்பார் நல்ல சுவையாக இருக்கும்.
4 . டிப்ஸ்
பூண்டினுடைய தோலை உரிப்பதற்கு நிறைய நேரம் ஆகும். ஆகவே பூண்டு தோலை சீக்கிரமாக உரிப்பதற்கு பூண்டின் பற்களை ஒவ்வொன்றாக எடுத்து கொள்ளவும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
பிறகு ஒரு பாத்திரத்தில் சூடான நீரினை ஊற்றி, அதனுள் தனித்தனியாக எடுத்து வைத்துள்ள பூண்டு பற்களை போட்டு 3 நிமிடம் வரை ஊறவைக்கவும்,பின்னர் அதை எடுத்து உரித்தால் எளிமையாக உரித்து விடலாம்.
Samayal Kurippu Tips in Tamil
5 . டிப்ஸ்
2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் அரைத்த இட்லி மாவில் சேர்த்தால் இட்லி பொசுபொசு வென்று மிருதுவாக இருக்கும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Read Also : நாட்டுகோழி முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை!
6 . டிப்ஸ்
நாம் கடையில் குடிக்கும் சுவையான டீயை போல நம் வீட்டில் குடிப்பதற்கு, டீ தூளில் Instant Cofee தூளை கலந்து டீ போட்டு குடித்தால் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
7 . டிப்ஸ்
ஒரு பாட்டிலில் 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் 3 லவங்கம் சேர்த்து அதனுள் பிஸ்கட்டை போட்டு வைத்தால் பிஸ்கட் நமத்து போகாமல் இருக்கும்.
8 . டிப்ஸ்
உப்பு ஜாடிக்குள் எலுமிச்சை பழத்தை போட்டு வைத்தால் எலுமிச்சை பழம் அழுகி போகாமல் நீண்ட நாட்கள் இருக்கும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
9 . டிப்ஸ்
ரவாதோசை மாவில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவினை சேர்த்து தோசை செய்தால் நன்கு சிவந்து மொறுமொறுவென்று நன்றாக இருக்கும்.
10 . டிப்ஸ்
வெங்காய பக்கோடாவிற்கு மாவு பிசையும்போது அதில் வறுத்த நிலக்கடலையை பொடியாக்கி கலந்து பக்கோடா செய்தால் மொறுமொறுவென்று சாப்பிட நன்றாக இருக்கும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Read Also : சுவையான சைவ குருமா செய்வது எப்படி ?