இந்தியில் முன்னணி நடிகராக உள்ள ரன்பீர் கபூருடன் சாய் பல்லவி புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். ராமாயணத்தை கருவாக கொண்ட இந்த படத்தில் சீதா பாத்திரத்தில் சாய் பல்லவி இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தென்னிந்திய சினிமாவில் வெற்றிப் படங்களில் நடித்ததன் காரணமாக முன்னணி நடிகையாக சாய் பல்லவி மாறியிருக்கிறார்.

தமிழில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அமரன் என்ற படத்தில் சாய் பல்லவி நடித்து வருகிறார்.
மேலும் தெலுங்கில் இளம் நடிகர் நாகசைதன்யாவுடனும், இந்தியில் ஆமிர் கானின் மகனுடைய படத்திலும் நடித்து வருகிறார் சாய் பல்லவி.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதையும் படிங்க : Lemon Satham Easy | சுவையாக எலுமிச்சை சாதம் செய்வது எப்படி ?
Sai Pallavi is acting Ranbir Kapoor
சாய் பல்லவி நடிக்கும் படங்கள் தொடர்ந்து வெற்றி பெறுவதால் அவரை படத்தில் இடம்பெறுவதற்கு படக்குழுவினர் ஆர்வம் காட்டுகின்றனர்.இந்த நிலையில் ராமாயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்தி படம் ஒன்றில் சாய் பல்லவி இடம்பெற்றுள்ளார்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இந்த படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதாவாகவும் நடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது ரன்பீர் கபூர் மற்றும் சாய் பல்லவி இடம்பெற்றுள்ள போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
Read Also : திருவாவடுதுறை ஆதீனத்தில் புத்தக வெளியீட்டு விழா
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
