RSVP Meaning in Tamil Wedding : நாம் எல்லோரும், பெரும்பாலான திருமண அழைப்பிதழ்களில் RSVP என்று குறிப்பிடப்பட்டுள்ளதை பார்த்திருப்போம். ஆனால், அதனை அர்த்தம் என்ன என்பது நம்மில் நிறைய பேருக்கு தெரிந்திருப்பதற்கு வாய்ப்பில்லை. எனவே, RSVP என்பதன் தமிழ் விளக்கத்தை இப்பதிவின் மூலம் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

கல்யாண பத்திரிக்கையில் RSVP என சுருக்கமாக எழுதப்பட்டிருக்கும். நம்மில் சிலர் RSVP என்றால் என்ன.? ஏன் இந்த வார்தையினை பெரும்பாலான பத்திரிக்கையில் குறிப்பிடுகிறார்கள் என சிந்தித்து இருப்போம். அப்படி சிந்தித்து இருக்கும் எல்லோருக்கும் இப்பதிவு பயனாக இருக்கும். அதாவது, திருமண பத்திரிகையில் இருக்கும் RSVP என்பதன் பொருள் என்ன என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
RSVP Meaning in Invitation Card:
RSVP என்னும் சுருக்கத்தின் விரிவாக்கம் “Répondez s’il vous plaît” என்பதாகும். இது ஒரு பிரெஞ்சு சொல் வார்த்தையாகும். இதற்கு ஆங்கிலத்தில் “Please Reply” என்று அர்த்தம். RSVP என்பதற்கு தமிழில் விளக்கம் ‘தயவு செய்து பதிலளிக்கவும்’ என்பது அர்த்தமாகும்.
Why a formal invitation letter needs an RSVP:
அதாவது, நாம் திருமணத்திற்கு அழைக்கும் நபர், திருமணத்திற்கு கட்டாயம் வருவாரா.? இல்லையா? என்பதைத் தெரியப்படுத்துவதை காரணமாக கொண்ட, கண்ணியமான கோரிக்கை சொல்லாக இது உள்ளது. ஆகவே தான், பெரும்பாலான பத்திரிக்கையில் RSVP என்ற சொல் இடப்பெற்றிருக்கும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இந்த சொல்லை குறிப்பாக விழாவை நடத்தும் நபரால் பயன்படுத்தப்படுகிறது. அப்போதுதான், அவர் விழாவிற்கு வரக்கூடிய விருந்தினர்களின் எண்ணிக்கையை பொறுத்து விழாவிற்கான பணியினை செய்ய முடியும்.
இதையும் படிங்க : Mother Maiden Name என்பதற்குண்டான தமிழ் அர்த்தம்..!
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இக்காலத்தில், ஒரு கல்யாணத்தை நடத்துவது என்பது மிகப்பெரிய விஷயமாக உள்ளது. கல்யாணத்துக்கு மண்டபம், போக்குவரத்து வசதி, விருந்து செலவு என பெரிய வேலைகள் இருக்கும். இதற்கு அதிகச்செலவாகும். பொதுவாக, திருமணம் போன்ற விழாக்களில் எத்தனை பேர் வருவார்கள் என்பதை கணித்து அவர்களுக்கு தகுந்த விருந்துகளை ஏற்பாடு செய்வது என்பது மிகப்பெரிய விஷயம். ஒரு சில நேரங்களில் விருந்தினர்கள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தான் வருவார்கள். இதனால், பல்வேறு பிரச்சனைகள் கடைசி நேரத்தில் குழப்பம் மற்றும் பற்றாக்குறை உண்டாகும். இதனை தவிர்க்கவே, திருமண அழைப்பிதழ்களில் RSVP என குறிப்பிடப்படுகிறது.
RSVP Meaning in Tamil Wedding
RSVP என்று பத்திரிக்கையில் அச்சிடப்பட்டிருந்தால் விழாவிற்கு வருகிறேன் அல்லது வரவில்லை என்ற பதிலை அவர்களுக்கு சொல்லி விட வேண்டும். இவ்வாறு செய்வதால் விழாவினை நிகழ்த்துபவர்கள் வரக்கூடிய உறவினர்களின் எண்ணிக்கையை பொறுத்து விழாவிற்கான வேலைகளை செய்வார்கள்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
எனவே, இனிமேல் நீங்கள் ஏதேனும் அழைப்பிதழ்களில் RSVP குறிப்பிடப்பட்டிருப்பதை பார்த்தால் அவர்களுக்கு வருகிறோம் அல்லது வரவில்லை என்ற பதிலை சொல்ல வேண்டும். RSVP என்பதன் பொருள் “தயவு செய்து பதில் அளியுங்கள்” என்று விளக்கமாகும்.
இதையும் படிங்க : ருசியாக நெய் சிக்கன் வறுவல் செய்வது எப்படி?
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇