உங்கள் குழந்தைகள் மாலை வேளையில் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்புமாறு ரெசிபியை தினமும் செய்து தருவீர்களா? இன்று ரெசிபியை மில்க் ஷேக் செய்து தர விரும்புகிறீர்களா? தற்போது கொய்யாப்பழம் சீசன் என்பதால், இப்பழத்தை கடைகளில் அதிகம் காண நேரிடும்.
அந்த கொய்யாபழத்தைபயன்படுத்தி மாலை வேளையில் உங்கள் குழந்தைகளுக்கு மில்க் ஷேக் செய்து தாருங்கள். பழங்கள் விஷயத்தில் இது ஆரோக்கியம் என்று தெரிந்தாலும் இதை பலரும் விரும்பி சாப்பிடுவது கிடையாது. இருந்தாலும் பழத்தையும் வெறுப்பதில்லை. இந்த பழத்தை சாப்பிட பெரிதளவில் ஆர்வம் காட்டுவது இல்லை. ஆனால் இதை ஜூஸ் அல்லது மில்க் ஷேக் செய்து கொடுத்தால் அதை அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

மில்க் ஷேக் எல்லோருக்கும் மிகவும் பிடித்த ஒரு பானம். பால் விரும்பி குடிக்காத குழந்தைகளும் அந்த பாலினை மில்க் ஷேக் பண்ணி செய்து கொடுக்கும் மில்க்கை நன்கு விரும்பி சாப்பிடுவர். பொதுவாகவே மில்க் ஷேக் என்பவை உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை கொடுக்கக்கூடியது. அதுவும் குழந்தைகளுக்கு இவற்றை செய்து தந்தால் நல்லது.
கொய்யாப்பழம் எல்லா சீசன்களிலும் கிடைக்கும் ஒரு ஆரோக்கியம் நிறைந்த பானம். அதனால் தான் மருத்துவர்கள் நம்மை அடிக்கடி கொய்யாப்பழம் சாப்பிட பரிந்துரை செய்கிறார்கள். அதே நேரம் எடை இழப்பு மற்றும் எடை அதிகரிப்பு இரண்டுக்கும் இந்த பழம் நல்லது. மில்க் ஷேக்கில் பனானா மில்க்க்ஷேக், சாக்லேட் மில்க்ஷேக், ஸ்ட்ராபெர்ரி மில்க்க்ஷேக், வெண்ணிலா மில்க்க்ஷேக் என்று பல விதங்களில் செய்யலாம்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
அந்த வகையில் இன்று நாம் கொய்யாப்பழத்தை கொண்டு சூப்பரான மில்க் ஷேக் ரெசிபியை காண்போம். மாலையில் குழந்தைகளுக்கு எப்போதும் டீ, காபி, பால் தருவதற்கு பதிலாக, கொஞ்சம் வித்தியாசமாக இந்த மில்க் ஷேக் செய்து கொடுங்கள்.
Read Also : காபி மிகவும் புடிக்குதுன்னா அவசியம் ஒரு முறை இது மாதிரி காபி மில்க் ஷேக் செய்து பாருங்க!
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Equipment
- 1 பவுள்
- 1 கண்ணாடி டம்ளர்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 2 கொய்யாப்பழம்
- 1/2 கப் ரோஜா இதழ்கள்
- 1/4 கப் சர்க்கரை ▢3 கப் பால்
- 1/2 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
- 2 டேபிள் ஸ்பூன் நறுக்கிய முந்திரி, பாதாம்
- ஐஸ் கட்டிகள் சிறிதளவு
செய்முறை | Rose Milkshake in Guava
முதலில் கொய்யாப்பழத்தை தண்ணீரில் நன்கு கழுவி விட்டு, தோல் சீவி, விதைகளை எடுத்து விட்டு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து பால் ஊற்றி அதனுடன் ஏலக்காய் போட்டு நன்கு சுண்ட காய்ச்சி வடிகட்டி கொள்ளவும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய கொய்யாப்பழம், ரோஜா இதழ்கள் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பின் காய்ச்சி ஆற வைத்த பால், வெண்ணிலா எஸன்ஸ் ஊற்றி மீண்டும் நன்கு அரைக்கவும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
பின் இதனை ஒரு கண்ணாடி டம்ளருக்கு மாற்றி அதில் ஐஸ் கட்டிகள் போட்டு அதன் மேல் நறுக்கிய முந்திரி, பாதாம் சேர்த்து கொள்ளவும்.
டம்ளரின் மேல் கொஞ்சம் பொடியாக நறுக்கிய கொய்யா பழ துண்டுகள், ரோஜா இதழ்களையும் வைத்து அலங்கரித்து பிறகு பரிமாறவும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
அவ்வளவுதான் மிகவும் சுவையான, சத்துள்ள, கொய்யாப்பழ ரோஸ் மில்க் ஷேக் தயார்.
Nutrition Serving: Rose Milkshake in Guava
300g | Calories: 112kcal | Carbohydrates: 3.6g | Protein: 4.5g | Sodium: 6mg | Potassium: 17mg | Calcium: 18.3mg | Fiber: 8.9g | Vitamin A: 31IU | Vitamin C: 28mg | Iron: 2.26mg | Fat: 1.6g
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Read Also : தோஷம் விலக்கும் செடிகள்… ஆனா இந்த செடிய மட்டும் வீட்டின் முன்பகுதியில் வைக்கக்கூடாது..!!