Parents Resolutions: இன்னும் சில நாட்களில் 2023 ஆம் ஆண்டு முடிய போகுது. நம்ம எல்லாரும் 2024ல காலடி எடுத்து வைக்கப் போறோம். இந்த நிலையில உங்களோட குழந்தைகளோட வாழ்க்கை முறையை மேம்படுத்த உதவும் 2024 ஆம் ஆண்டு கான (resolutions) தீர்மானங்களைப் பற்றித் தான் பார்க்கப் போறோம். அதாவது பெற்றோர்கள் கடைப்பிடிக்க வேண்டிய 10 தீர்மானங்களைப் பற்றித் தான் பார்க்கப் போறோம்.
வாரத்துக்கு ஒருமுறை குடும்ப இரவு உணவைத் திட்டமிடுங்கள். வாரத்தின் ஒரு நாலாவது குடும்பத்தோடு ஒன்றாக இரவு உணவைச் சாப்பிடுவதற்கு முன்னுரிமை கொடுங்க. உங்க குடும்ப உறுப்பினரிடம் எந்த நாள் எந்த நேரத்துல சாப்பிடலாம் என்று கலந்துரையாடி நாளையும் நேரத்தையும் தேர்வு செய்து அதன் பின் அதை வாரம் வாரம் கடைப்பிடிக்க வேண்டும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

உங்க குடும்பத்துல உள்ள அனைவரிடமும் குடும்ப இரவு உணவிற்கு என்ன வகையான உணவு சாப்பிட விரும்புறீங்க அப்படின்னு கேளுங்க. அதன் பிறகு ஒருமுறை அவர்களிடம் சாப்பிட விரும்பும் உணவை உறுதி செய்து கொள்ளுங்க.
ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக மாற்றுக
ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்வதற்கு குடும்ப இரவு உணவை ஒரு நல்ல வேடிக்கையான வழியா கூடப் பயன்படுத்தலாம். மேலும் கதை சொல்லுங்க அல்லது விளையாடுங்க அல்லது ஒருவரையொருவர் பற்றிப் பேசச் சொல்லித் தெரிந்து கொள்ளுங்கள்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
குடும்பத்தில் உள்ள அனைவரையும் உணவு சமைக்கும்போது உதவ சொல்லுங்க. காய்கறி வெட்டுதல் போன்ற ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் அவர்கள் உதவக்கூடிய பணிகளைச் செய்யச் சொல்லுங்க.
சிறிது நேரம் செலவிட்டு தெரிந்து கொள்ளுங்கள்
இந்தக் குடும்ப இரவு உணவுல ஒருவருக்கொருவர் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றிப் பேசுவதற்கு சரியான நேரம் ஆகும். எனவே கேள்விகளைக் கேட்க நேரத்தை ஒதுக்குங்க.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தாதீர்கள்
கவனத்தை சிதற அடிக்கும் மொபைல் போன், லேப்டாப் போன்ற தொழில்நுட்பம் சார்ந்த சாதனத்தை ஆஃப் செய்து வைங்க, அப்படி ஆஃப் செய்வதால் இரவு குடும்ப உணவிற்கு நல்ல சூழல் கிடைக்கும். மேலும் எந்த ஒரு தொந்தரவு இருக்காது. இதன் மூலம் அனைவருக்கும் நிம்மதியான குடும்ப விருந்தாக அமையும்.
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு குழந்தையுடனும் நேரத்தைச் செலவிடுங்க

உங்க குழந்தைகள் ஃப்ரீயா இருக்கும்போது வாரத்தில் ஒரு நாள் அவர்களோடு நேரத்தைச் செலவிடுங்கள். மாலை நேரத்துல அவர்கள் கூட ஒரு வாக்கிங் கூடச் செல்லலாம். வாக்கிங் செல்லும்போது அவர்களுடன் நன்கு பேசி அவர்களைப் புரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு குழந்தைகளும் உங்களுக்காக ஒதுக்கப்பட்ட நாள் மற்றும் எந்த நேரத்தை ஒதுக்கி இருக்காங்க என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதைத் தினமும் அவர்களிடம் கேட்டுத் தெரிஞ்சுக்கோங்க. இதை நீங்கத் தினமும் கவனிக்கக்கூடிய இடத்துல எழுதிக் கூட வச்சுக்கலாம். உங்களுக்காக உங்க குழந்தைகள் ஒதுக்கப்பட்ட நேரம் வரும்போது உங்க குழந்தையுடன் நீங்க முழுமையா நேரத்தைச் செலவிடுங்கள். மேலும் மொபைல் போன்களை ஆஃப் செய்துவிட்டு உங்க குழந்தைக்கு என்ன பிடிக்கும், என்ன செய்ய விரும்புறாங்க என்பதை கேட்டுத் தெரிஞ்சுக்கோங்க.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
உங்க குழந்தைகளிடம் என்ன செய்யலாம் என்கின்ற தேர்ந்தெடுக்கக்கூடிய சுதந்திரத்தை கொடுங்க. அதன் பிறகு அவர்களுடன் ஒன்றாகச் சேர்ந்து நேரத்தைச் செலவிடுங்கள். உங்கள் குழந்தை 10 அல்லது 15 வயதிற்கு மேலே உள்ளவராக இருந்தால் நீங்கள் ஒன்றாகச் செய்யக்கூடிய சில செயல்பாடுகளைப் பரிந்துரைத்துக் கூடச் செய்யலாம்.
அந்தச் செயல்பாடு உங்க குழந்தைகளுக்கு முதலில் புடிச்சிருக்கா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அது ஒரு விளையாட்டாகக் கூட இருக்கலாம் அல்லது சமையல் செய்வதாகக் கூட இருக்கலாம். அல்லது பைக் ஓட்டுவதாகக் கூட இருக்கலாம், சைக்கிள் ஓட்டுவதாகக் கூட இருக்கலாம்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
கடைசியாக ஒருவரை ஒருவர் சில நல்ல பாசிடிவ் ஆன கருத்தோடு அந்தச் செயலை முடிக்கலாம். நீங்க ஒன்றாக இருந்த நேரத்தை எவ்வளவு நன்றாக இருந்தது என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். அதுமட்டுமின்றி அவர்களைப் பற்றிப் பெருமைப்படும் விதமா அவர்களிடம் சொல்லுங்க.
தவறு செய்யட்டும் அதனிலிருந்து கற்றுக் கொள்வார்கள்

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைத் தவறு செய்த அனுமதிக்கணும் அதன் பிறகுதான் அந்தத் தவறுகளிலிருந்து கற்றுக் கொள் வாங்க. தவறுகளைச் செய்வதும் அவற்றிலிருந்து கற்றுக் கொள்வதும் குழந்தைகள் வளர்ந்தது சுதந்திரமா மாறுவதற்கு ஒரு முக்கிய அங்கமாகும். குழந்தைகள் தவறு செய்தால் அது அவர்கள் செய்யக்கூடிய சொந்த செயல்களால் அந்தச் செயலின் விளைவுகளாலும் அவர்கள் நன்கு புரிந்து கொள்ள கூடிய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கு மேலும் அந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க மற்றும் முடிவெடுக்கவும் உதவுது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆதரவு அளிப்பதற்கும் வழிகாட்டுதலை வழங்குவதற்கும் பக்கபலமாக இருக்கணும், ஆனா கடைசியில குழந்தைகள் தங்கள் தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ள அனுமதிப்பது முக்கியம் – மேலும் அவர்களின் தவறின் வரம்புகளை மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பெரிய மற்றும் சிறிய செயல்களுக்கு அவர்களைப் பாராட்டுங்க

உங்க குழந்தைகளோட பெரிய மற்றும் சிறிய சாதனைகளை அங்கீகரித்து பாராட்டுவது ரொம்பவே அவசியம். அவர்களுடைய முயற்சிகள் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொண்டு அதில் அதிக முயற்சி மற்றும் வெற்றியை ஊக்குவிக்க வேண்டும். நீங்கள் அவர்களால் பெருமை படுகிறீர்கள் என்பதையும் நீங்கள் அவர்களை நம்புகிறீர்கள் என்பதையும் அவர்களிடம் தெரியப்படுத்துங்கள். உங்கள் குழந்தைகளிடம் புன்னகை செய்து அவர்களை அரவணைத்து உங்களின் பாராட்டுகளை அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். அவர்களின் வெற்றியை கொண்டாடுங்க எவ்வளவு சிறிய சாதனையாக இருந்தாலும் நீங்க அவர்களை பற்றி பெருமை படிக்கிறீர்கள் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
உங்க குழந்தைகளின் ஆர்வத்தை ஊக்குவியுங்கள்
உங்கள் குழந்தைகள் விரும்பும் அல்லது ஆர்வம் இருக்கக்கூடிய வகுப்பில் சேர அவர்களை ஊக்குவியுங்கள். இது அவர்களின் திறன்களை வளர்த்துக் கொள்ளவும், அவர்களின் திறன்களில் நம்பிக்கையைப் பெறவும் உதவும்.
உங்கள் குழந்தைகள் வெவ்வேறு செயல்பாடுகளில் முயற்சி செய்து அவர்கள் விருப்பத்தை பார்க்கட்டும். மேலும் புதிய ஆர்வங்களை ஆராய்வதற்கும் அதில் ஆர்வமாக இருப்பதை கண்டறிவதற்கும் இது சிறந்த வழியாக இருக்கும்
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
உங்கள் குழந்தைகளிடம் அவர்களின் ஆர்வங்களை பற்றி பேசுங்கள் மேலும் அதில் ஆழமாக சிந்திக்கவும் அதனைப் பற்றி ஆராய உதவும் கேள்விகளை கேளுங்கள்
அவர்கள் விரும்பக் கூடியதை செய்ய விடுங்கள் அவர்களின் செயல்திறன் மற்றும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதன் மூலம் அவர்களின் ஆர்வங்களுக்கு உங்களுடைய ஆர்வத்தையும் ஆதரவையும் காட்டுங்கள்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
உங்கள் குழந்தைகளை ஊக்குவிக்கும் வழிகாட்டல்கள் அல்லது முன்மாதிரிகளை கண்டறிந்து அவர்களுக்கு உதவுங்கள்
உங்கள் குழந்தைகளின் வெற்றிகளை கொண்டாடி அவர்களின் ஆர்வத்தை தொடர அவர்களுக்கு தொடர்ந்து ஊக்குவித்து வாருங்கள்
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
குழந்தைகள் தவறுகளை செய்து அதிலிருந்து கற்றுக் கொள்ள அனுமதியுங்கள் கற்றல் செயல்பாட்டில் தவறுகள் என்பதே ஒரு முக்கிய பகுதியாக கூட இருக்கலாம்
ரிஸ்க் எடுக்கவும், புதிய விஷயங்களை முயற்சி செய்யவும் ஊக்குவியுங்கள். இது அவர்களின் திறன்களை வளர்த்துக் கொள்ளவும் புதிய வாய்ப்பினை ஆராயவும் இது உதவும்
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
மரியாதை மற்றும் கருணையின் முக்கியத்துவம்
இவ்வுலகில் அனைவரிடமும் மரியாதையும் கருணையும் எல்லா மக்களுக்கும் காட்டப்பட வேண்டிய குணங்களில் ஒன்று என்பதை உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள். மேலும் மற்றவர்களை எவ்வாறு மரியாதையுடன் கருணை உடனும் நடந்து கொள்வது என்பதற்கான உதாரணங்களையும் அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள் மேலும் மதியின் முக்கியம் என்பதையும் விளக்கி கூறுங்கள். அதுமட்டுமின்றி நீங்களும் உங்கள் வீட்டில் மரியாதை மற்றும் கருணையை வெளிப்படுத்துங்கள் இது உங்களைப் பார்த்து உங்கள் குழந்தைகள் கற்றுக் கொள்வார்கள். மற்றவர்களை மரியாதையுடன் கருணையுடன் நடத்தாவிட்டால் அதனால் ஏற்படும் விளைவுகளை கட்டாயம் சொல்லிக் கொடுங்கள் ஏனெனில் உங்கள் குழந்தைகள் இத்தகைய செயல்பாடுகளில் செயல்படுத்துவதற்கு முன் சிந்திக்க வைக்கும். குழந்தைகளிடம் மற்றவருக்கு உதவும் எண்ணங்களிலும் நாம் விதைக்க வேண்டும்.
மொபைலில் செலவிடும் நேரம் கண்காணிப்பு
தற்போது உள்ள குழந்தைகள் அனைவரும் மொபைலில் பல மணி நேரம் செலவிட்டு வருகின்றனர் இதை கண்காணிப்பது மிக மிக முக்கியமானது. குழந்தைகளின் ஆன்லைன் செயல்பாடுகளை கண்காணிக்க FamilyTime, Qustodio மற்றும் My Mobile Watchdog போன்ற செயலியை பயன்படுத்தலாம். மேலும் குழந்தைகளிடம் மொபைலில் செலவிடும் நேரத்தை தவிர்க்க வேண்டும் என்பதையும் அடிக்கடி கூறி வாருங்கள்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
- அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருங்கள்.
- தினமும் நடைப்பயிற்சி, வாக்கிங், நீச்சல் செய்வது, விளையாட்டு விளையாடுவது போன்ற செயல்பாடுகளை உங்கள் குழந்தைகளுடன் செய்து வாருங்கள்.
- தினமும் இரவு தூங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பு போன் மற்றும் லேப்டாப்களை ஹாஃப் செய்து வைக்கவும் அதற்கு பதிலாக புத்தகங்கள் மற்றும் விளையாடுவது போன்ற செயலில் ஈடுபடுத்த வேண்டும் உங்கள் குழந்தைகளுக்கு அதிக சர்க்கரை உள்ள பானங்கள் தருவதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக பால் தண்ணீர் மற்றும் இயற்கை பழச்சாறுகளை கொடுக்கலாம்
- உங்கள் குழந்தைகளுக்கு தூக்கத்தின் நன்மைகளையும் சரியான நேரத்தில் தூங்குவதையும் சொல்லித்தர வேண்டும்
- உங்கள் குழந்தைகளுடன் ஒன்றாக சேர்ந்து சமைத்து ஆரோக்கியமான உணவின் நன்மைகளையும் கூறலாம்
- வாரத்தில் இரண்டு நாட்கள் பூங்காவிற்கு செல்வது பைக் சவாரி செய்வது கேம் விளையாடுவது போன்ற குடும்பமாக சென்று செலவிடுவதை திட்டமிட்டு வைத்துக் கொள்ளுங்கள்
- ஆரோக்கியமான வாழ்க்கையைமுறையை நீங்களே கடைப்பிடிப்பதன் மூலம் உங்கள் குழந்தைகளுக்கு ஒரு நல்ல முன்மாதிரியாக இருக்கலாம்
Parents Resolutions: குழந்தைகளுடன் நேர்மையான தொடர்பு

உங்கள் குழந்தை இளமையாக இருக்கும்போது கேள்விகளை கேட்கவும் அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தவும் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களிடம் பேசுங்கள்
குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள் அவர்களின் எண்ணங்களையும் உணர்வுகளையும் கேட்டறிந்து அவர்களிடம் கேள்வி கேளுங்கள் பதில்களையும் கேளுங்கள்
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
குழந்தைகளிடம் எல்லைகளை அமைத்து விடுங்கள் எதிர்பார்ப்புகள் மற்றும் விளைவுகள் குறித்து தெளிவாக இருங்கள்
உங்கள் குழந்தைகளிடம் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருங்கள் அவர்கள் உங்களிடம் ஏதேனும் கேள்வி கேட்கலாம் அல்லது கவலையுடன் வரலாம் என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள் அதற்கு நீங்கள் நேர்மையாக பதில் அளிப்பேன் என்றும் சொல்லுங்கள்
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
குழந்தைகள் முன் எதிர்மறையான வார்த்தைகளை பயன்படுத்துவதோ அல்லது தவறுகளுக்கு அவர்களை குறை கூறு வேண்டாம். அவர்களை ஊக்குவிக்கும் வார்த்தைகளை படுத்துங்கள்
உங்கள் குழந்தை எப்படி உணர்கிறார்கள் என்பதையும் நீங்கள் அவர்களை புரிந்து கொள்வீர்கள் என்பதையும் அவர்களுக்கு ஆதரவாக நீங்கள் இருக்கிறீர்கள் என்பதையும் உங்கள் குழந்தைகளுக்கு தெரியப்படுத்துங்கள்
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
உங்கள் குழந்தையின் தனி உரிமைக்கு மதிப்பளியுங்கள் அவர்களின் அனுமதியின்றி மற்றவர்களிடம் அவர்கள் தகவல்களை பகிரவே பகிராதீர்கள்
உறங்கும் நேரத்தை வழக்கமாக கடைப்பிடிக்கவும்

- தினமும் தூங்குவதற்கு ஒரு நேரத்தை தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன்படி தினமும் குழந்தைகளை தூங்க செய்ய வேண்டும்
- இரவு தூங்குவதற்கு முன்பு குளிப்பது பல் துலக்குவது புத்தகம் படிப்பது யோகா செய்வது தியானம் செய்வது இனிமையான இசைகளை கேட்பது இதில் ஏதாவது ஒன்று செய்வதை தினமும் கட்டாயப்படுத்த வேண்டும்
- தினமும் தூங்குவதற்கு முன்பு மொபைல் அல்லது டிவி அல்லது லேப்டாப் பார்ப்பதை ஒரு மணி நேரத்துக்கு முன்பே தவிர்க்க வேண்டும் இது உங்கள் இரவு தூக்கத்தை பாதிக்க வைக்கம்
- கபின் உங்கள் உடலில் 6 மணி நேரம் வரை இருக்கும் எனவே பிற்பகுதியில் காபி அல்லது என எனர்ஜி பானங்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும்
- தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள் உடற்பயிற்சி சோர்வடைய செய்ய உதவும் இதனால் எளிதாக தூங்கலாம்.
- மதிய நேரத்தில் தூங்குவதை இல்லையேல் இரவில் தூங்குவது கடினமாக இருக்கும்
- நீங்கள் தூங்கும் இடத்தை இருட்டாக்கி சுத்தம் செய்து வைத்துக்கொள்ளுங்கள்
- தூங்குவதற்கு முன் சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள் இல்லையேல் சரியாக தூங்க முடியாது
- தூங்குவதற்கு முன்பு வெந்நீரில் குளியுங்கள் ஏதாவது எழுதுங்கள் அல்லது இதமான இசைகளை கேளுங்கள்
Parents Resolutions: முடிவு 2024 ஆம் ஆண்டுக்கான பெற்றோருக்குரிய தீர்மானங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நாங்க நம்புறோம். இந்த தகவல் நீங்க சிறந்த பெற்றோராக மாற உங்கள் குழந்தைகளுடனான உறவை மேம்படுத்த உதவும். மேலும் உங்கள் குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிட்டு மகிழ்ச்சியா இருங்க உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
எங்களை Youtube சேனலில் சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
குழந்தை பராமரிப்பு சம்பந்தமான தகவல்களை படிக்க இங்கே கிளிக் செய்யவும்
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇