நடிகை ரெஜினா கசாண்ட்ரா தமிழ், கன்னடம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். படங்களில் பிஸியாக நடித்து கொண்டிருக்கும் இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக சோஷியல் மீடியாவில் தகவல் பரவி வருகிறது. 9 வயது முதல் தொகுப்பாளினியாக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்த ரெஜினா கசாண்ட்ரா. பாலாஜி மோகன் இயக்கத்தில் தயாரான காதலில் சொதப்புவது எப்படி, என்ற குறும்படத்தில் நடித்து எல்லோருடைய கவனத்தை ஈர்த்தார்.

அதன் பிறகு பிரசன்னா, லைலா நடித்த கண்டநாள் முதல் திரைப்படத்தில் லைலாவின் சகோதரியாக நடித்திருந்தார். அழகிய அசுரா, பஞ்சாமிர்தம் ஆகிய திரைப்படத்தில் நடித்த இவர், சிவகார்த்திகேயனுக்கு இணையாக கேடி பில்லா கில்லாடி ரங்கா இந்த படத்திற்கு பின் இவர் எல்லோருக்கும் தெரியும் முகமாக மாறினார்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதையும் படிங்க : Priyamani Biography, Wiki, Age, Family, Movies, TV Shows, Photos
தற்போது தமிழ், தெலுங்கு, கன்னட திரைப்படங்களில் பிஸியாக நடித்து கொண்டுள்ள இவர், மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்து கொண்டிருக்கும் விடாமுயற்சி படத்தில் கமிட்டாகி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்து கொண்டிருக்கிற நிலையில், ரெஜினா தனது அஜர்பைஜானில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, விடாமுயற்சி படத்தில் நடிதுக்கொண்டுள்ளதை உறுதிப்படுத்தினார்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
கதாநாயகி, வில்லி என எந்த கேரக்டர் கொடுத்தாலும் மிரட்டும் ரெஜினா, வித்தியாசமான கதைகளில் நடிப்பதையே பெரிதும் விரும்பும் நடிகையாக உள்ளார். தற்போது, ரெஜினா கசாண்ட்ராவின் கைவசம், சூர்ப்பனகை , பிளாஷ்பேக், பார்டர், செக்ஸன் 108 உள்ளிட்ட படங்கள் ரிலீசிற்கு தயாராக இருக்கிறது.

Regina Cassandra Wedding Soon
விரைவில் ரெஜினா கசாண்ட்ராக்கு திருமணம் ஆக உள்ளது என செய்தி பரவி வருகிறது. அதன்படி ரெஜினா பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சொல்லப்படுகிறது. எனினும், இது குறித்து ரெஜினா தரப்பில் இருந்து, எந்த ஒரு அதிகாரபூர்வ செய்தியும் இதுவரை வெளிவரவில்லை. ஆனால் இந்த திருமண செய்தி உறுதியாகி உள்ளது என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதையும் படிங்க : குணா பட கதாநாயகி ரோஷினி யாரு தெரியுமா?.. ஜோதிகாவின் சொந்த அக்காவா?.. உண்மை தெரியுமா?
நடிகர் சந்தீப், ரெஜினாவின் பிறந்த நாளில் இருவரும் நெருக்கமாக உள்ள போட்டோவை பகிர்ந்து, “ஹாப்பி பர்த்டே பாப்பா… லவ் யூ நீ எப்போதும் அனைத்திலும் சிறந்து விளங்க விரும்புகிறேன் என்று வாழ்த்து தெரிவித்திருந்தார். இதையடுத்து இருவரும் டேட்டிங் செய்து கொண்டு உள்ளதாகவும் இருவரும் காதலிப்பதாகவும் தகவல் பரவியது. இது குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள ரெஜினா, சந்தீப் எனது நண்பர் என்று சொன்ன வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇