Rajinikanth : 2024 ஆம் வருடம் பொங்கலுக்கு ரஜினி சிறப்பு வேடத்தில் நடித்த லால் சலாம் படம் வெளியவுள்ளது. இதனை தொடர்ந்து டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் “வேட்டையன்” படத்தில் நடிக்கிறார்.
நடிகர் ரஜினி நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் தான் தியேட்டருக்கு படம் பார்க்க சென்று தலை தெறிக்க ஓடிய சம்பவத்தை பற்றி பகிர்ந்து கொண்டதை பற்றி நாம் காணலாம்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
1975 ஆம் வருடம் அபூர்வ ராகங்கள் தமிழ் சினிமாவின் மூலம் ரஜினி அறிமுகமானார். கிட்டத்தட்ட 48 வருடங்களாக திரைப்படங்களில் நடிக்கும் அவர் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக புகழ் பெற்று வருகிறார். அவருக்கு 73 வயதானாலும் பாக்ஸ் ஆபீஸ் ரூலர் தான் என்பதை நிரூபித்து கொண்டுதான் இருக்கிறார். இந்தாண்டு கடைசியாக ரஜினி நடிப்பில் ஆகஸ்ட் மாதம் ஜெயிலர் படம் வெளியானது. இந்த படம் 600 கோடிக்கும் மேல் வசூலில் சாதனை செய்தது.
Rajinikanth மறக்க முடியாத சம்பவம்
2024 ஆம் ஆண்டு அவர் சிறப்பு வேடத்தில் நடித்த லால் சலாம் படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. டி. ஜே . ஞானவேல் இயக்கத்தில் ரஜினி “வேட்டையன்” படத்தில் நடிக்கிறார். அதை தொடர்ந்து 171 வது படமான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த நிலையில் ரஜினி பேசிய பழைய வீடியோக்கள், கலந்து கொண்ட நேர்காணல்கள் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவது வழக்கம்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

அப்படி ஒரு நேர்காணலில் தியேட்டரில் படம் பார்த்து கொண்டிருக்கும் போது தலை தெறிக்க ஓடிய சம்பவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த நேர்காணலில் நீங்கள் மறுவேடங்களில் வெளியே செல்கிறீர்களாமே, அதில் உங்களுக்கு மறக்க முடியாமல் எந்த சம்பவம் இருக்கிறது என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரஜினி அளித்த பதில். பெங்களூருவில் 3 தியேட்டர்கள் கொண்ட காம்ப்ளக்ஸ் ஒன்றில் படம் பார்க்க ஒருமுறை சென்றிருந்தேன். நான் மாறுவேடத்தில் சென்று படம் பார்த்து விட்டு அந்த தியேட்டரை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தேன்.
தியேட்டருக்கு வந்த ரசிகர்களால் அந்த பகுதியில் பயங்கரமான ட்ராஃபிக் ஜாம் இருக்குது. அந்த கூட்டத்தின் நடுவே மாறுவேடம் போட்டு கொண்டு நானும் சென்றுகொண்டிருக்கிறேன். அப்போது என் பின்னாலிருந்து யாரோ ஒருவர் தலைவா என்று கத்திக்கொண்டிருந்தார். உடலெல்லாம் எனக்கு வெடவெடுத்து விட்டது. என்னுடைய காரையும் எங்கேயோ பார்க் பண்ணி இருக்கேன் நான் மாறுவேடம் போட்டிருந்தாலும் நம்மை அடையாளம் கண்டுவிட்டானோ என்ற குழப்பத்தில் அவனை திரும்பி பார்க்கலாமா வேண்டாமா என்ற கேள்வி எனக்குள் எழுகிறது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
அந்த நேரத்தில் அங்கு வந்த ஆட்டோவில் சட்டென ஏறி அந்த இடத்திலிருந்து கிளம்பிவிட்டேன். ஆனால் தலைவா என்ற குரல் எனக்கு மறுபடியும் கேட்கவில்லை. பிறகுதான் அவர் யாரோ ஒருவரை அழைத்துள்ளார் என தெரியவந்தது. அந்த சம்பவந்தான் என்னால் மறக்க முடியாதது என்று ரஜினி தெரிவித்திருப்பார்.
SUBSCRIBE V TAMIL NEWS OFFICIAL YOUTUBE CHANNEL – CLICK HERE
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> வி தமிழ் செய்தி
சமையல் குறிப்பு சம்மந்தமான அனைத்து பதிவுகளையும் இங்கு காணலாம் –> ஆனந்தி சமையல்
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇