Priyanka Mohan About Dhanush : கேப்டன் மில்லர் படத்தின் இசை வெளியீட்டு விழா 3/1/2024 மாலை சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் நடிகை பிரியங்கா மோகன் தனுசுடன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கிய டிடி. நடிகை பிரியங்கா மோகனிடம் சில கேள்விகளை கேட்டிருந்தார். அப்போது கேப்டன் மில்லர் படத்தில் தனுசுடன் நடித்ததை பற்றி பிரியங்கா மோகன் மனம் திறந்தார்.

தமிழில் டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனோடு நாயகியாக அறிமுகமானார் பிரியங்கா மோகன். தொடர்ந்து டான் படத்திலும் சிவகார்த்திகேயனோடு ஜோடியாக நடித்திருந்தார். அதே போல் எதற்கும் துணிந்தவன் படத்தில் சூர்யாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இதனை அடுத்து கேப்டன் மில்லர் படத்தில் தனுசுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார் பிரியங்கா மோகன். இதுவரை டூயட் பாடி வந்த பிரியங்கா மோகன். கேப்டன் மில்லர் படத்தில் ஆக்ஷனில் தெறிக்கவிட்டிருக்காராம்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்திக்கும் மில்லர் படத்தில் கதாநாகியாக பிரிங்கா மோகன் நடித்துள்ளார். முக்கியமாக இந்த படத்தில் துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் பக்கா ஆக்ஷன் நாயகியாக நடித்துள்ளார். இந்த நிலையில், கேப்டன் மில்லர் படத்தில் நடித்தது பற்றி நடிகை பிரியங்கா மோகன் மனம் திறந்துள்ளார். அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Read More : அனிமல் பட கதாநாயகி ராஷ்மிகா மந்தனாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..?
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
கேப்டன் மில்லர் என் மனசுக்கு மிகவும் நெருக்கமான படம். துப்பாக்கி எல்லாம் எனக்கு பிடிக்கவே தெரியாது. அதுக்காக நிறைய பயிற்சி கொடுத்தாங்க.இந்த படத்தில் வரும் கோவில் செட் பற்றி சொல்லி ஆக வேண்டும். அது செட் என்று நம்பவே முடியாத அளவுக்கு இருந்தது. இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ரொம்ப சீரியஸானவர் என்று நினைக்கிறாங்க. ஆனா அவர் ரொம்ப ஜாலியான ஆளு. Finally, ‘Killer Killer, Captain Miller’ நான் உங்களோட பெரிய ரசிகை சார். இது எனக்கென்று கிடைத்த பெரிய வாய்ப்பு என்று பேசியிருந்தார்.
அதை தொடர்ந்து பிரியங்கா மோகனிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அந்த கேள்விகளுக்கு அவர் செம க்யூட்டாக பதில் கூறினார். ‘Poet or singer’ தனுஷ் சாரோட பாடல் வரிகள் பிடிக்குமா இல்லை பாடுறது பிடிக்குமா என்று கேட்க பட்ட கேள்விக்கு தனுஷ் சார் பாடுவது பிடிக்கும். அவர் பாடினால் இளையராஜா சார் பாடுவது மாதிரி இருக்கும். அதுபோல புதுப்பேட்டை மாதிரியான ஆக்ஷன் படமா கேப்டன் மில்லரின் நடிச்சாச்சு. அதனால இனிமேல் காதல் கொண்டேன் மாதிரியான படத்தில் தனுஷ்வுடன் நடிக்க வேண்டும் என்று கூறினார்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

முக்கியமா,தனுஷ் எப்படி இருந்த அழகு என்று கேட்டதற்கு அவர் தாடி லுக் தான் எனக்கு பிடிக்கும் என்று பிரியங்கா மோகன் கூறியுள்ளார். மேலும் ஒரே நேரத்தில் தனுஷ், செல்வராகவன் சார் டைரக்ஷன்ல நடிக்க வாய்ப்பு வந்தா எது முதல் சாய்ஸ்ன்னு கேட்ட கேள்விக்கு, அதற்கு செல்வராகவன் சார் படத்துல தனுஷ் ஜோடியா நடிப்பேன். என்று க்யூட்டாக பதில் கூறி தனுஷை கூல் செய்தார் பிரியங்கா மோகன்.
Read More : உலகின் மிக பெரிய 10 பணக்கார குடும்பங்கள் ..
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇