போகோ நிறுவனம் தனது புதிய மாடலான போக்கோ எக்ஸ்6 5ஜி (POCO X6 5G) ஸ்மார்ட் ஃபோனை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கு. எனவே வரும் வாரங்களில் இந்த புதிய போக்கோ போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.
பி ஐ எஸ் சான்றிதழ் தளத்துல 23122PCD1I என்ற மாடல் நம்பரை பெற்று இருக்கிறது இந்த poco x6 5G போன். மேலும் சீனால வெளியான ரெட் மி நோட் 13 ப்ரோ ஸ்மார்ட்போன் தான் இந்தியாவுல POCO X6 5G என பெயரிட்டு இந்தியாவுல அறிமுகம் செய்யப்பட இருக்கு.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதன் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமாகும் இந்த POCO X6 5G மீது அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருக்கு. மேலும் POCO X6 5G ஸ்மார்ட் போன் ஆன்லைன்ல வெளியாக இருக்குது. இதில் என்னென்ன அம்சங்கள் இருக்குதுன்னு விரிவா பார்க்கலாம்.
POCO X6 5G – Details
Qualcomm Snapdragon 7s Gen 2 சிப்செட் வசதியுடன் போக்கோ எக்ஸ்6 5ஜி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் ஃபோனில் கேம் ஆப்ஸ்கள் மற்றும் வீடியோ எடிட்டிங் தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் Adreno 710 GPU என்ற கிராபிக்ஸ் கார்டு வசதியும் இருக்கிறதுனால பர்பாமன்ஸ் நல்லாவே இருக்கும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Android 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் போக்கோ எக்ஸ்6 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டு வரும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட்டுகளும் பாதுகாப்பு அப்டேட்களும் கிடைக்குமாம். மேலும் இந்த ஸ்மார்ட் ஃபோனோட எடை மிகவும் குறைவு என அந்நிறுவனம் தெரிவிச்சி இருக்கு.
போக்கோ எக்ஸ்6 5ஜி இரண்டு வேரியண்ட்களில் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி உடன் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. இது மட்டும் இன்றி கூடுதலாக மெமரி கார்டு இணைப்பு வசதியும் உள்ளதாம். அதாவது நீங்கள் மெமரி கார்டு பயன்படுத்த மைக்ரோ எஸ்டி கார்டு போர்டு அதில் அமைந்துள்ளதாம்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

போக்கோ எக்ஸ்6 5ஜி யில் ட்ரிபிள் கேமரா அமைப்பை உள்ளது. இதில் எல் இ டி உடன் கேமரா 200 mp மற்றும் அல்ட்ரா வைட் லென்ஸ் 8 mp மற்றும் மைக்ரோ கேமரா 2 mp கொண்டுள்ளது. செல்பி மற்றும் வீடியோ கால் செய்வதற்காக முன்பக்க கேமரா 16 mp திறன் கொண்டது. இதனால் துள்ளியமாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நீங்கள் எடுத்து மகிழ முடியும்.
போக்கோ எக்ஸ்6 5ஜி பேட்டரியின் திறன் 5100 எம்ஏஎச் கொண்டுள்ளது இதனால் நீண்ட நேர பேக்கப் கிடைக்குமாம். மேலும் 67W fast charging திறனையும் கொண்டுள்ளது. இது மட்டும் இன்றி இன்- டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் வசதியும் உள்ளது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
யுஎஸ்பி டைப் சி போர்டு, இபிஎஸ், 5ஜி, 4ஜி வோல்ட்இ என பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் வெளியாக இருக்கிறது போக்கோ எக்ஸ்6 5ஜி.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇