Friday, July 11, 2025
Homeசைவம்Peas-Potato Kurma Recipe In Tamil Best : வீட்டுல பட்டாணியும் உருளைக்கிழங்கும் இருக்கா? அதுல...

Peas-Potato Kurma Recipe In Tamil Best : வீட்டுல பட்டாணியும் உருளைக்கிழங்கும் இருக்கா? அதுல குருமா செய்யுங்க… அருமையா இருக்கும். – 8

Date:

- Advertisement -

Peas-Potato Kurma Recipe In Tamil | பட்டாணி, உருளை கிழங்கு குருமா: இன்று இரவு உங்களுடைய வீட்டில் சப்பாத்தி அல்லது பூரி செய்ய போகிறீர்களா? அதற்கு ஒரு அருமையான சைடு டிஷ் செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? ஆனால் உங்கள் வீட்டில் பச்சை பட்டாணியும், உருளைக்கிழங்கு இருக்கிறதா?

Peas-Potato Kurma Recipe In Tamil
Peas-Potato Kurma Recipe In Tamil

அப்படியானால் அந்த இரண்டையும் வைத்து அருமையான சுவையில் குருமாவை செய்யுங்கள். இந்த பட்டாணி, உருளை கிழங்கு குருமா சப்பாத்தி, பூரி மட்டுமின்றி, இடியாப்பம்,அப்பம் இவைகளுடனும் சேர்த்து சாப்பிடவும் மிகவும் அற்புதமாகவும்,சுவையாக இருக்கும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

முக்கியமாக இந்த குருமாவை குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும்மாறு இருக்கும். உங்களுக்கு பட்டாணி, உருளைக்கிழங்கு பயன்படுத்தி எப்படி குருமாவை செய்வது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

கிழே உருளைக்கிழங்கு, பட்டாணி இவற்றை கொண்டு குருமா செய்வது பற்றி எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதை படித்து பார்த்து செய்து சுவைத்து எங்களுக்கு உங்களுடைய எண்ண கருத்தினை எங்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

தேவையான பொருட்கள்: Peas-Potato Kurma Recipe In Tamil

  • 1 டேபிள்ஸ்பூன் -தேங்காய் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் பெருஞ்சிரகம்
  • 1 பட்டை துண்டு
  • 3 கிராம்பு
  • 3 ஏலக்காய்
  • 1 வெங்காயம் (பொடிப்பொடியாக நறுக்கியது )
  • 4 பச்சைமிளகாய் (நீளமாக கீறியது )
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • 1 டீ ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 கப் பச்சை பட்டாணி
  • 2 உருளைக்கிழங்கு (தோலுரித்து துண்டுகளாக )
  • 2 தக்காளி (நறுக்கியது )
  • உப்பு (தேவையான அளவு)

அரைப்பதற்கு…

  • 3/4 கப் -துருவிய தேங்காய்
  • 1 டீ ஸ்பூன் -சோம்பு
  • 2 -முந்திரி பருப்பு

செய்முறை :

முதலில் மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், சோம்பு, முந்திரி பருப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையான பதத்தில் அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு குக்கரை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும் அது சூடானதும், பட்டை சோம்பு, ஏலக்காய் மற்றும் கிராம்பு போட்டு தாளிக்க வேண்டும்.

பின் அதில் நறுக்கிவைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்க வேண்டும். பிறகு பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும். அடுத்து துண்டுகளாக வெட்டியுள்ள உருளை கிழங்கு அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து 2 நிமிடம் நன்றாக கிளறி விட வேண்டும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Read Also : சுவையான திருமண வீட்டு நெய் சாதம் செய்வது எப்படி ?

பின் அதில் உருளைக்கிழங்கு மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி குக்கரை மூடிஅடுப்பில் வைத்து 4 விசில் வரும் வரை கொதிக்க விட்டு இறக்க வேண்டும். விசில் போனதும் குக்கரை திறக்கவும். அதில் ஏற்கவே அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மீண்டும் குக்கரை மூடி அடுப்பில் வைத்து குறைவான தீயில் 5 நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து இறக்க வேண்டும். இப்பொழுது நமக்கு சுவையான பட்டாணி குருமா ரெடி.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Read Also : கேழ்வரவு மாவில் ருசியான களி செஞ்சி பாருங்க!

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories