Thursday, July 10, 2025
Homeஆன்மீகம்பஞ்சகவ்ய ரகசியங்கள்

பஞ்சகவ்ய ரகசியங்கள்

Date:

- Advertisement -

பாலில் எடுக்கப்படும் தயிர் முதலிய ஒவ்வொன்றும் வெவ்வேறு சுவையுடையது, குணமுடையது இவற்றின் கலவை சிறந்த சத்துணவு, கோசலமும்(கோமியம்) , கோமலமும்(பசுஞ்சாணம்) மருத்துவக் குணம் கொண்டவை.

பஞ்சகவ்யம் – பஞ்ச என்றால் 5 மற்றும் கவ்யம் என்றால் பசுவிடம் இருந்து என பொருள்படும். பசுவிடம் இருந்து பெறப்படும் ஐந்து மூலப்பொருட்கள்:

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

  1. சாணம்
  2. கோமியம்
  3. பால்
  4. நெய்
  5. தயிர்

இவை ஐந்தையும் சரியான விகித அளவில் கலந்து தயாரிக்கக்கூடியது பஞ்சகவ்யம். இது இந்து சமய கடவுள் வழிபாட்டின் போது முக்கிய பூசை பொருளாகவும், வேளாண்மை பயிர் பாதுகாப்பு மற்றும் ஆயுர் வேத வைத்தியத்திலும் பயன்படுகிறது. பயிர்களுக்கு கேடு விளைவிக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை கூடுதலாக்கும். பஞ்சகவ்யம் தயாரிக்கும் முறையைப் கற்றுக்கொடுப்பதும், விற்பனை செய்வதும் மெல்ல மெல்ல புகழடைந்து வருகிறது.

Panchakavya Secrets
Panchakavya Secrets

இதையும் படிங்க : Lemon Satham Easy | சுவையாக எலுமிச்சை சாதம் செய்வது எப்படி ?

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

பஞ்ச கவ்யத்தால் அபிஷேகம் செய்யும் போது ஏற்படுகின்ற பயன்கள் வருமாறு.

  • பசும்பால் : ஆரோக்கியம், ஆயுள் விருத்தி,
  • பசுந்தயிர்: பாரம்பரிய விருத்தி
  • பசும்நெய்: மோட்சம்
  • கோசலம் : தீட்டு நீக்கம்
  • கோமலம்: கிருமி ஒழிப்பு.

சிலைகளுக்கு பல திறம்பட அருமையான பொருள்களால் அபிஷேகம் செய்த பிறகு அந்த சிலைகளின் இயற்கையான நுண்ணிய சக்தி சற்று கூடுதலாகின்றது என்பது அறிவியல் அடிப்படையில் நிருபிக்கப்பட்டு உள்ளது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

பஞ்சகவ்யதால் அபிஷேகம் செய்த பிறகு அச்சிலைகளின் அற்புத அதிசய தெய்வீக சக்தி கூடுதலாகின்றது என்பதும் உண்மையாகும் .

பஞ்சகவ்வியப் பெருமை : Panchakavya Secrets

பசுவும்.பசு தரும் பஞ்சகவ்வியமும் தெய்வத் தன்மை உடையவை, என்றென்றும் புனிதமானவை. ஆகவே இந்து சமயத்தில் இவை முக்கியமான நிலையான இடத்தை பெற்று விளங்குகின்றன.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

பஞ்சகவ்வியம் இந்துக்களின் பூஜைகள் மற்றும் பல்வேறு சடங்குகளில் இதற்கென்றுதனி இடம் உண்டு. இந்த பஞ்ச கவ்வியத்தில் பல்வேறு தேவர்கள் குடிகொண்டு இருக்கின்றனர். பசுவின் பால், தயிர், நெய். கோமயம், சாணம் என்னும் இந்த ஐந்தும் சேர்ந்ததே பஞ்ச கவ்வியம் எனப்படும். இது இயற்கை வேளாண்மையில் மிகவும் முக்கியத்துவம் உள்ள நிலஊட்டப் பொருள்(உரம்) ஆகும்.

Panchakavya Secrets

அபிஷேகத்திற்கான பஞ்ச கவ்வியம் செய்ய சில அளவு வரைமுறைகள் இருக்கிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

  • பசும்பால் 1 அளவு
  • பசுந்தயிர் 2 அளவு
  • பசும்நெய் அளவு
  • கோசலம் 1 அளவு
  • கோமயம் 1 அளவு
  • தர்ப்பை கலந்த நீர் 3 அளவு

பசும் பால் தான் ஏற்றது.எருமைப்பால் முதலியவற்றை உபயோகப்படுத்தக்கூடாது .பசுக்களில் பல்வேறு கலர்களைக் கொண்ட பசுக்கள் இருக்கின்றன. பசுக்களின் நிறத்திற்கும் அவை தரும் பாலின் தன்மைக்கும் இடையில் தொடர்பு இருக்கிறது.பொன் நிறம் உள்ள பசுவிடமிருந்து பாலும், நீல நிறம் உள்ள பசுவிடமிருந்து தயிரும், கருநிறம் உள்ள பசுவிடமிறந்து நெயும் ,செந்நிறம் உள்ள பசுவிடமிருந்து கோசலமும் தனித்தனியே எடுத்து பஞ்சக்கவியம் தயார் செய்ய வேண்டும். சிவனுக்கு செய்யும் அபிஷேகப் பொருட்களில் பஞ்ச கவ்வியமே சிறந்தது .

இதையும் படிங்க : குமட்டல் வரும் போது என்ன சாப்பிட வேண்டும்?

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இவ்வாறு சிறந்த பஞ்சகவ்வியம் தமிழில் “ஆனைந்த “என்று கூறுவர்.

பசும் பாலில் சந்திரனும்
பசுவின் தயிரில் வாயு பகவானும்
கோமயத்தில் வருண பகவானும்
பசும் சாணத்தில் அக்னிதேவனும்
நெய்யில் சூரிய பகவானும் வாசம் செய்து கொண்டுள்ளார்கள்

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories