Orithal Thamarai Powder Uses : இந்த உலகத்தில் எவ்வளவோ மூலிகை செடிகள் உள்ளது. ஒவ்வொரு மூலிகை செடிகளும் ஒவ்வொரு வகையான ஆரோக்கியப்பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கிறது. அந்த வகையில் இந்த பதிவின் மூலம் ஆண்களுக்கு பல பலன்களை தரக்கூடிய ஓரிதழ் தாமரை மூலிகை செடியின் பயன்களை பற்றி அறிந்துகொள்வோம்.இந்த மருத்துவ செடியானது ஆரோக்யத்திக்கான ஏராளமான சிறந்த தீர்வினை கொடுக்கிறது.
இந்த மூலிகை செடியானது நீரோட்டம் இருக்கிற இடங்களிலும், தோட்டங்களிலும், வயல்வெளிகளிலும் வளரக்கூடியது.இந்த செடியின் இலை, பூ , காய், வேர்,தண்டு அனைத்துமே மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. குறிப்பாக ஆண்மை இழந்ததை மீட்டெடுக்கும் தன்மை கொண்டது. இது இந்தியாவின் வயாகரா என்ற பெயரினை கொண்டிருக்கிறது.இது ஆண்களுக்கு எவ்வாறு பயன்படுகிறது என்று பார்ப்போம்
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

ஓரிதழ் தாமரை மூலிகை செடியின் பயன்கள் : Orithal Thamarai Powder Uses
அதிகாலையில் ஓரிதழ் தாமரை செடியின் இலையை பறித்து நன்றாக சுத்தம் செய்து வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு, பால் குடித்தால் நல்ல பலன் உண்டாகும். இதே போன்று ஓரிதழ் தாமரைசமூலத்தையும் அதாவது இந்த மூலிகை செடியின் பூ முதல் வேர் வரை சாப்பிடலாம்.
உடலை வலுவாக்க:
ஏதேனும் ஒரு நோயினால் பாதிப்பு அடைந்தவர்கள் உடல் நலத்தை தேற்ற நினைத்தால் இந்த ஓரிதழ் தாமரை செடியை பயன்படுத்தி கஷாயம் வைத்து குடித்தால் உடல் வலிமை அதிகரிக்கும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
விஷக்காய்ச்சல் நலமாக :
திடீரென விஷக்காய்ச்சல் ஏற்பட்டால் அதை குணப்படுத்த ஓரிதழ் தாமரையை செடியினை கஷாயம் வைத்து சாப்பிட்டால் விஷக்காய்ச்சல் குணமாகும். அதே போல் ஆஸ்துமா நோயால் அவதி படுபவர்கள் இந்த கஷாயத்தை குடித்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
உடல் பருமன் குறைய :
பொதுவாக உடல் எடை கூடுதலாக இருப்பவர்கள் உடல் பருமனை குறைக்க வேண்டும் என்று பலவிதமான டிப்ஸினை செய்திருப்பார்கள்.ஆனாலும் அவர்களுக்கு எந்த பலனும் இருந்திருக்காது. இனி அவர்கள் கவலை பட தேவையில்லை. ஆமாம் உடல் பருமனை குறைக்க வைத்தியம் பார்ப்பவர்கள் இந்த ஓரிதழ் தாமரை சம்மூலத்தை கஷாயம் வைத்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இளமையாக இருப்பதற்கு:
சமூக சூழல், உணவு முறை,பொருளாதாரம் போன்ற காரணமாக இளம் வயதிலேயே சில இளைஞர்கள் முதியவர்கள் போல காணப்படுவார்கள். அப்படிவுள்ளவர்கள் இந்த ஓரிதழ் தாமரை செடியுடன், கீழாநெல்லி உருண்டையை சேர்த்து சாப்பிட்டு வந்தால் இளமையாக தோன்றலாம்.
ஓரிதழ் தாமரையின் பயன்கள்:
ஓரிதழ் தாமரை சமூலத்துடன் கோரோஜனை, பச்சைக்கற்பூரம் சம அளவில் எடுத்து அரைத்து அதோடு பசு நெய் சேர்த்து உடலில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பூசி வந்தால் நல்ல நிவாரணம் உண்டாகும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
குழந்தையின்மை, தாம்பத்யத்தில் ஈடுபாட இயலாமை, ஆண்மை குறைபாடு போன்ற பிரச்சனைகளுக்கு ஓரிதழ் தாமரை சூரணம் சாப்பிட்டுவந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
Read Also : உங்கள் கணவரின் பிறந்தநாளை கொண்டாட Best 8 Surprise டிப்ஸ்!
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
சிறுநீர் பாதை புண்கள் குணமடைய:
கீழா நெல்லி இலை, ஓரிதழ் தாமரை இலை யானை நெருஞ்சில் இலை இந்த மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து எருமை தயிரில் 10 – 15 நாட்கள் சாப்பிட்டு வர நீர் தாரையில் இருக்கும் புண்கள், வெள்ளைப்படுதல் போன்ற நோய்கள் குணமாகும். இருந்தாலும் இந்த வைத்தியம் செய்யும் போது சூடு இல்லாத உணவும், காரம் இல்லாமலும் சாப்பிட வேண்டும்.
ஆண்மை தன்மை அதிகரிக்க:
பூ, இலை, தண்டு,காய், வேர் என ஓரிதழ் தாமரையினுடைய முழு செடியையும் அரைத்து சுண்டைக்காய் அளவு எடுத்து பசும் பாலில் கலந்து வெறும் வயிற்றில் காலையில் மூன்று தினங்கள் குடித்து வந்தால் ஆண்களுக்கு ஏற்படக்கூடிய வெள்ளை ஒழுக்கு, அடிவயிற்றில் வலி இவைகள் குணமாகும். சமூலத்தை 21 தினங்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு 50 மில்லி ஆட்டுப்பால் குடித்து வந்தால் இழந்த ஆண்மை சக்தி திரும்ப கிடைக்கும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
உடலில் இருக்கும் கழிவுகள் வெளியேற:
ஓரிதழ் தாமரை, விஷ்ணுகிரந்தி, தொழுகண்ணி, மணத்தக்காளி கீரை, கீழா நெல்லி, மகா வில்வம் ஆகிய மூலிகைகளை சம அளவு எடுத்து நிழலில் காயா வைத்து தனித்தனியாக பொடி செய்து அதை ஒன்றாக கலந்து வைத்து கொள்ளவேண்டும். பிறகு இதை வெறும் வயிற்றில் காலை, மாலை 5 கிராம் பொடியை 15 மில்லி தேனோடு கலந்து குடிக்கவேண்டும்.அல்லது 5 கிராம் பொடியை 100 மில்லி பாலில் கலந்து அதனுடன் பனை கற்கண்டு சேர்த்து குடிக்க வேண்டும்.
இவ்வாறு செய்வதால் உடலில் இருக்கும் கெட்ட கழிவுகளை அகற்றி சகல உறுப்புகளையும் வயிறு,கணையம், கல்லீரல், இனப்பெருக்க உறுப்புகள், சிறுநீரகம் இவற்றை நன்றாக இயங்க செய்யும்.உடல் உறுப்புகளில் உள்ள கெட்ட கழிவுகளை வெளியேற்றினாலே அதனுடைய செயல்பாடுகள் இயல்பு நிலைக்கு வந்துவிடும்.உடல் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Watch video : உலக புகழ் பெற்ற நாகூர் தர்காவின் 467 ஆம் வருடம் கந்தூரி விழா