Nimisha Sajayan : நிமிஷா சஜயன் இந்த வருடம் தமிழ் சினிமாவில் அற்புதமான நடிப்பை நடித்து அடுத்தடுத்த 2 படங்களில் அசத்தி ரசிகர்களின் பெரும் பாராட்டுகளை அள்ளி உள்ளார். இவர் ஒரு 90 ஸ் கிட் என்றும் 26 வயது ஆகிறது என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். அந்த அளவிற்கு நடிப்பில் அப்படியொரு முதிர்ச்சியை சாதாரணமாக வெளிப்படுத்தி அனைவருடைய வாயையும் பிளக்க வைத்துள்ளார்.

இந்த வருடம் சித்தார்த் நடிப்பில் அத்தி பூ பூத்தது போல ஒரு நல்ல படமாக வெளியான சித்தா திரைப்படத்தில் துப்புரவு தொழிலாளியாக நிமிஷா சஜயன் நடித்திருப்பார். அந்த படத்தில் அவர் பேசும் ஒற்றை வசனம், அங்கே இருந்து இங்கே நடந்து வருவதற்குள் எத்தனை ஆண்கள் என் மார பார்த்தாங்க தெரியுமா என்று பேசுவது ஆண் சமூகத்திற்கு எதிராக சுழற்றப்பட்ட சட்டையடியாக விழுந்தது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
தமிழ் சினிமாவில் எத்தனையோ கருப்பு நிற கட்டழகிகள் சரிதா முதல் ஐஸ்வர்யா ராஜேஷ் வரை நடிப்பு திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் லேடஸ்ட் இணைப்பாக நிமிஷா சஜயன் தனக்கு கிடைக்கிற வாய்ப்புகள் அனைத்தையும் சரியாக பயன்படுத்தி செம சிக்ஸர் அடித்து வருகிறார். ஹீரோயின் என்றால் செகப்பா இருக்கனும், ஸ்லிம்மாக இருக்கனும் என்கிற ஸ்டீரியோ டைப்புகளை எல்லாம் உடைத்து, இந்த வருடம் தமிழ் சினிமாவில் 2 படங்களில் நடித்து தனது முத்திரையை பதித்துள்ளார்.

மலையாள நடிகை : Nimisha Sajayan
மும்பையில் வசித்து வந்த மலையாள பிறந்தவர் தான் இந்த நிமிஷா சஜயன். இவருடைய அப்பா, அம்மா இருவரும் மலையாளிகள் தான். ஆனால் இவர் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தது மும்பையில்தான் .
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இவருக்கு இருந்த சினிமா ஆர்வம் 2017 ல் மலையாளத்தில் வெளியான கேர் ஆஃப் சாய்ரா பானு என்ற மஞ்சு வாரியார். அமலா அக்கினேனி போன்ற முன்னணி நடிகைகளுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பினை பெற்றுத்தந்தது.
தி கிரேட் இந்தியன் கிச்சன் :
ஜோ பேபி இயக்கத்தில் 2021 ஆம் வருடம் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தில் இவரது எதார்த்த நடிப்பை கண்டு பலரும் ஆடிப்போய்விட்டனர். மலையாளத்தில் சமீபத்தில் வெற்றி கண்ட நயாட்டு, பகத் ஃபாசில் நாயகன் ஸ்டைலில் நடித்த மாலிக்,துறாமுகம், ஒரு தெக்கன் தள்ளு கேஸ் போன்ற பல படங்களில் அசத்தி நடித்து வந்த இவரை அலேக்காக இந்த வருடம் கோலிவுட்டுக்கு கார்த்திக் சுப்புராஜ் மற்றும் அருண்குமார் அழைத்து வந்து விட்டனர்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
சித்தா :
சித்தார்த் தயாரித்து நடித்த சித்தா படத்தில் நிமிஷா சஜயன் துப்புரவு தொழிலாளியாகவும் சிறு வயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்ணாகவும் நடித்திருப்பார். ஹீரோயினுக்கு உள்ள அனைத்து இலக்கணங்களையும் தவிடு பொடியாக உடைத்து சாதாரண பெண்களும் நிஜத்தில் ஹீரோயின்கள் தான் என்பதற்கு உதாரணமாக மாறி இருக்கிறார்.
Read Also : எந்த ராசிக்காரர்கள் வெள்ளி மோதிரம் போடலாம்? ஜோதிடம் சொல்லும் உண்மை.!
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் :
சித்தா படத்தை தொடர்ந்து இந்த வருடம் தீபாவளிக்கு வெளியான ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக மெரட்டி இருப்பார். இவர் மலைவாழ் பெண்ணாகவும், புள்ளத்தாச்சி பெண்ணாகவும் நடித்து கடைசியில் கணவனுடன் சேர்ந்து சாவினை எதிர் நோக்கி அந்த தப்பை அடிக்கிற காட்சிகளில் எல்லாரையும் கண் கலங்க வைத்திருப்பார்.

நல்ல படங்களை இயக்கும் இயக்குநர்கள் இவரை நடிக்க பயன்படுத்தலாம். இந்த வருடம் நிமிஷா சஜயன் நடிப்பில் நிமிர்ந்து நிற்கிறார்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Watch Video : திமுக அரசுக்கு தமிழ்நாடு பிராமணர் சங்கம் மாநில பொதுக்குழு கூட்டத்தில் கண்டனம்