Nidur farmer : பாண்டூர், நீடூர் கிராமத்தில் குறுங்காடுகளை உண்டாக்கி அது இப்போது மழைக்காடுகள் என்று சொல்லும் அளவிற்கு இயற்கையை பாதுகாப்பதோடும் வெளிநாட்டு பழவகை மரங்களை வளர்த்து அசத்திவரும் விவசாயி. புவி வெப்பமயமாதலை தடுக்க என் வாழ்நாள் முழுவதும் மரங்களை வளர்ப்பேன் என்று சொல்லும் விவசாயி சலாஹுதீன்.
Nidur farmer அசத்திவரும் விவசாயி
மயிலாதுறை மாவட்டம் நீடூர் மஜித்காலனியை சேர்ந்த சலாஹுதீன் வயது 52 பேங்காங்கில் தொழிலதிபராக இருக்கிறார். அவர் இயற்கை மற்றும் விவசாயம் மீது மிகவும் பற்று உள்ளவர். அவர் கடந்த 10வருடங்களுக்கு முன்பு பாண்டூர் மற்றும் நீடூர் கிராமங்களில் படிப்படியாக நிலங்களை வாங்கி அதில் நெல்லை விவசாயம் செய்ய விரும்பாமல் ஒருங்கிணைந்த பண்ணை மற்றும் மரம் பழவகைகள் வளர்ப்பதற்கு ஆர்வம் கொண்டதால் வெளிநாடுகளில் உள்ள பல பழவகை மரங்களை நம் மண்ணில் வளரவைத்து அதில் எந்தவகையான மரங்கள்,பழங்கள் உற்பத்தி செய்யலாம் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

அதனால் அவர் 65 ஏக்கர் நிலங்களை வாங்கி அதில் பண்ணை குட்டை அமைப்பது போல் ஆங்காங்கே கால்வாய் போலவும் தண்ணீர் நிற்கும் வகையில் மேடு,பள்ளம் அமைத்து மேடான பகுதிகளில் மரங்களும், பள்ளமான பகுதிகளில் தண்ணீர் தேக்கி மீன்களை வளர்த்தும் மா , தேக்கு, பலா,தென்னை, வாழை, பனை, பாக்குமரம், பம்பிளிமாஸ், பாதம்மரம், முந்திரிமரம் இப்படியான மரங்கள் மட்டுமில்லாமல் வெளிநாட்டு மரங்களான ஜம்புருட்டான், மங்குஸ்தான், ரம்புருட்டான்,டயாமவுன்ட், மகாகனி, பெரிஸ், சந்தனமரம், செம்மரம், கொடுக்காப்புளி, அத்தி, ஆப்பிள், யானைப்பிடுக்கு, சாத்துக்குடி, கொக்கோசாக்லெட் மரம், ஆரஞ், ரெட்ரோஸ் உட்பட அழிந்துவரும் பல்வேறு வகையான மரக்கன்றுகளும் 500 க்கும் மேற்பட்ட மரம், பழவகை மரங்களை செடியாக வாங்கி அதில் இயற்கை உரங்களை போட்டு சாகுபடி செய்கிறார்.
மேலும் இயற்கை மூலிகையான கருநொச்சி, பெரியாநங்கை, யானை நெருஞ்சி, சிரியா நங்கை, மலைவேம்பு, பிரண்டை, திப்பிலி, மிளகு வாசனை கொண்ட செடிகளும், மருத்துவ குணம்வாய்ந்த அரிய வகை கிழங்கு வகைகளான சிறுகிழங்கு, முடக்கு கிழங்கு, காவாலி கிழங்கு, செவ்வாரி கட்டக்கிழங்கு, ஆட்டுக்கால் கிழங்கு போன்ற கிழங்கு வகைகளும் மேலும் அதிக ஆக்சிஜன் கொடுக்கக்கூடிய
வெளிநாட்டு மரக்கன்றுகலும் மற்றும் உள்நாட்டு மரக்கன்றுகளும் சேர்த்து மொத்தமாக ஒன்றரை லட்சம் மரக்கன்றுகளை வளர்த்து கொண்டுள்ளார். பாண்டூர், புத்தகரம், பொன்னூர், நீடூர் போன்ற பனைமரங்களை மீட்டெடுத்து அதனையும் பாதுகாத்து வருகிறார்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Read Also : பொது மக்கள் அடிப்படை வசதிகள் வேண்டி திடீர் சாலை மறியல்
பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பனை மரங்களை அழிக்க வேணடாம் அது பூமிக்கு நல்ல மழையினை பொழிய செய்யும் தண்ணீரை தன்னுடைய வேர்களால் தாங்கி பிடித்து கொள்ளும் மிகவும் அற்புதமான மரம், ஆகவே அந்த பனைமரங்களை பாதுகாக்கவும் என்று பொது மக்களிடம் விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகிறார்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதை பற்றி சலாஹுதீன் நம்மிடம் கூறும்போது பாண்டூர் மற்றும் நீடூர் கிராமத்தில் 65 ஏக்கர் கொண்ட நிலப்பரப்பில் மாங்கனி,தேக்கு, மலைவேம்பு,சந்தனம், ரோஸ் வுட்டு இதுமாதிரியான பயிர்களை பயிசல் செய்தேன். மற்ற இடங்களில் மழை பெய்வதை விட இந்த பகுதியில் மழை கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும். வெய்யில் காலங்களில் இங்கு வெப்பம் குறைவாகவே இருக்கும். இந்த பகுதியில் எப்போதும் குளிர்ச்சியான நிலையிலேயே இருக்கும். இந்த பகுதியானது பசுமையாகவும் இருக்கும்.
மக்களுக்கு அதிக ஆக்சிஜன் கிடைக்கவேண்டும் என்பதற்காக அதிக மரங்களை வளர்த்து வருகிறேன். நான் அதிக செலவுகள் செய்துதான் பயிரிட்டு வருகிறேன்.இது 30 ஆண்டுகளுக்கு பிறகுதான் பலன் கிடைக்கும் என்று சொல்கிறார். தோட்டத்திற்கு வந்து போனாலே செலவு செய்ததை பற்றி கவலை ஏற்படாமல் மகிழ்ச்சியாக இருக்கும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

அதிக மரங்களை வளர்ப்பதால் மழை பொழிகிறது. மரங்கள் வளர்ப்பதை பற்றியும் அதை வளர்ப்பதால் ஏற்படக்கூடிய நன்மைகளை பற்றியும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட செய்கிறோம். காடுகளை சுற்றி ஆங்காங்கே விளம்பர பலகை வைத்து மரங்களை வளர்ப்போம், மழை நீரை பெறுவோம், மண்வளத்தை காப்போம். மரங்களை வளர்ப்பதால் சுத்தமான காற்று கிடைக்கும் என்ற பல்வேறு வாசகங்களை எழுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
தற்போது 1 லட்சத்து 50 ஆயிரம் மரக்கன்றுகள் வைக்கப்பட்டிருக்கிறது. மாங்கனி, தேக்கு பழவகை மரங்களை வைத்துளேன். கேன்சர் நோய்க்கு பயன்படும் யானையத்தி,கொடுக்காபுளி, முள்ளுசீதா போன்ற மூலிகை மரங்கள் மற்றும் பழவகை செடிகளை வைத்து வளர்த்து வருகிறோம். ஆஸ்துமா நோய்களுக்கு பயன்படும் யானை பிடிங்கி மரத்தை வளர்த்துவருகிறேன். பொது மக்கள் அதிக அளவில் மரங்களை வளர்க்க வேண்டும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Read Also : உங்கள் உணவில் முருங்கை சேர்க்க 5 வகையான வழிகள்.!
இயற்கையை போற்றி பாதுகாத்தால் ஆக்சிஜன் தட்டுப்பாடுகள் இல்லாமலும், பூமி வெப்பமாவதை தடுப்பதற்கும் மரங்களை வளர்க்க வேண்டும். அதை பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு இந்த மழை காடுகளை வளர்த்து வருகிறேன் என்றார்.மற்றும் இவரது காடுகளுக்கு காலை பொழுதில் பல்வேறு வகையான வெளிநாட்டு பறவைகள்மற்றும் உள்நாட்டு பறவைகள் வந்து செல்வதால் பறவைகளின் எச்சமானது இயற்கை உரங்களாக மரங்களுக்கு பயன்படுகிறது என்று சலாஹுதீன் தெரிவித்தார்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇