Friday, July 11, 2025
Homeஆன்மீகம்New Year 2024 ஆம் ஆண்டில் உங்கள் ராசிப்படி எந்தமாதம் அதிஷ்டமானதாக இருக்கப்போகிறது தெரியுமா?

New Year 2024 ஆம் ஆண்டில் உங்கள் ராசிப்படி எந்தமாதம் அதிஷ்டமானதாக இருக்கப்போகிறது தெரியுமா?

Date:

- Advertisement -

New Year 2024: 2023 ஆம் வருடத்தின் இறுதியினை நாம் நெருங்கி கொண்டிருக்கிறோம். இன்னும் சில நாட்களில் 2023 ஆம் வருடத்திற்கு குட் – பை சொல்லிவிட்டு, 2024 புதிய வருடத்திற்குள் நுழைய போகிறோம். புத்தாண்டு வரப்போவதால், பலரது, மனதிலும் பலவிதமான கேள்விகள் வரும். ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள். தங்களின் எதிர்காலத்தை தெரிந்து கொள்ள அதிகம் விரும்புவார்கள்.

ஜோதிட சாஸ்திரங்களின்படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசிகள் இடம் மாறும். அப்படி மாறுவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். அதுவும் 2024 ஆம் வருடத்தில் ஒவ்வொரு மாதங்களிலும் நிகழும் கிரக மாற்றங்களால் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு மாதமும் அதிர்ஷ்டமானதாக இருக்கும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

அதாவது அந்த அதிர்ஷ்டமான மாதத்தில் எல்லாவேலைகளும் வெற்றிகரமாக முடியும். நல்ல பொருளாதார நன்மைகள் உண்டாகும். முன்னேற்றத்திற்குதானே வாய்ப்புகள் வரும். மொத்தத்தில் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கும். இப்போது 2024 ஆம் வருடத்தில் ஒவ்வொரு ராசியினருக்கும் எந்த மாதம் அதிர்ஷ்டமாக இருக்கும் என்பதை பார்ப்போம்.

New Year 2024
New Year 2024

New Year 2024 எந்தமாதம் அதிஷ்டமானதாக இருக்கப்போகிறது தெரியுமா?

மேஷம்

மேஷம் ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் வருடம் முதல் மாதம் ஜனவரி மிகவும் நன்றாக இருக்கும்.இந்த மாதம் மகிழ்ச்சியாகவும், அதிர்ஷ்டமாகவும் இருக்கும்.மேலும் இந்த மாதத்தில் பல வாய்ப்புகள் முன்னேற்றத்திற்காக அமையும். ஆசைகள் அனைத்தும் இந்த மாதத்தில் நிறைவேறும்.முக்கியமாக ஒரு பெரிய மாற்றங்களை இந்த மாதத்தில் காண்பீர்கள்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

ரிஷபம்

2024 ஆம் ஆண்டில் ரிஷப ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதம் அதிர்ஷ்டமானதாக இருக்கும்.வணிகம் செய்து வந்தால் இந்த மாதத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். இது தவிர ஒரு சிலர் புதிய வேலையை தொடங்கி நல்ல ஆதாயம் பெறக்கூடும். இந்த மாதத்தில் திருமணம் ஆகாதவர்கள் தங்கள் வாழ்க்கை துணையை அமைப்பதற்கு வாய்ப்புகள் உண்டாகும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் 2024 ஆம் வருடத்தில் செப்டம்பர் மாதம் மிகவும் அற்புதமானது.இந்த ராசியினர்கள் இந்த மாதத்தில் பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். சிலருக்கு புதிய வேலையினை தொடங்குவதற்கு வாய்ப்புகள் உண்டாகும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

New Year 2024 ஆம் ஆண்டில் உங்கள் ராசிப்படி எந்தமாதம் அதிஷ்டமானதாக இருக்கப்போகிறது தெரியுமா?

கடகம்

கடக ராசியினருக்கு 2024 ஆம் ஆண்டில் அதிர்ஷ்டமான மாதம் ஜூலை மாதமாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் இந்த மாதத்தில் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புகள் ஏற்படும். பொருளாதாரம் மிக சிறப்பாக இருக்கும்.மற்றும் இந்த மாதத்தில் சூழ்நிலைகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக அமையும். முக்கியமாக இந்த மாதத்தில் நீங்கள் கண்ட கனவுகள் அனைத்தும் நனவாகும்.

சிம்மம்

2024 ஆம் ஆண்டில் சிம்ம ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் மிகவும் சிறப்பான மாதமாக இருக்கும். இந்த மாதத்தில் நீங்கள் நீண்ட நாட்கள் உழைத்த கடின உழைப்பிற்கான முழு பலன்களும் கிடைக்கும்.உங்களின் தேவைகள், விருப்பங்கள், ஆசைகள் அனைத்தும் இந்த மாதத்தில் நிறைவேறும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் அதிர்ஷ்டமானதாக அமையும். இந்த மாதத்தில் தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள்.உறவுகளில் இருந்த விரிசல்கள் தீரும். திருமணமானவர்களுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சியுள்ளதாக இருக்கும்.முக்கியமாக இந்த மாதத்தில் சில நல்ல செய்திகள் வரும்.

துலாம்

2024 ஆம் ஆண்டில் துலாம் ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் நன்றாக இருக்கும். இம்மாதத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவுகள் கிடைக்கும். அதோடு மனை,வீடு வாங்க வாய்ப்புகள் உண்டாகும்.சிலருக்கு வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். 2024 ஆம் வருடத்தில் புதிய வேலையை தொடங்க நினைத்திருந்தால், அதை அக்டோபர் மாதத்தில் ஆரம்பித்தால் நல்ல பலனை அடையலாம்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Kanda Sashti Kavasam in Tamil | கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்
New Year 2024 ஆம் ஆண்டில் உங்கள் ராசிப்படி எந்தமாதம் அதிஷ்டமானதாக இருக்கப்போகிறது தெரியுமா?

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கார்களுக்கு 2024 ஆம் வருடம் நவம்பர் மாதம் அதிர்ஷ்டமானதாக அமையக்கூடும். வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புகள் இந்த மாதத்தில் கிடைக்கும். திருமணவாழ்க்கை மகிழ்ச்சியை தரும். மற்ற மாதங்களை விட பண வரவு இந்த மாதத்தில் சிறப்பாக இருக்கும். வழக்கத்தை விட நிதி நிலை நன்றாக இருக்கும்.

தனுசு

2024 ஆம் ஆண்டு தனுசு ராசிக்காரர்களுக்கு மே மாதம் அதிர்ஷ்டமாக இருக்கும். பணிபுரிபவர்கள் இந்த மாதத்தில் பதவி உயர்வு பெறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. மனதில் பல புதிய எண்ணங்கள் ஏற்படும் மற்றும் இவை அனைத்தும் உங்கள் வாழ்க்கையை அடுத்த நிலைக்கு முன்னேற உதவியாக இருக்கும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு 2024ஆம் வருடம் ஜூன் மாதம் மிகவும் அற்புதமாக இருக்கும். இந்த மாதத்தில் நீங்கள் முன்னேறுவதற்கு வழிகள் திறக்கப்படும். அதோடு இந்த மாதத்தில் பண வரவு நன்றாக இருக்கும்.முக்கியமாக இம்மாதத்தில் பணத்தை நிறைய சேமித்து வைக்கலாம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் வருடம் மார்ச் மாதம் அற்புதமான மாதமாக இருக்கும்.இந்த மாதத்தில் வெற்றிகரமாக உங்கள் அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். பல நாள் ஆசை நிறைவேறும் பாசமுள்ளவருடன் நேரத்தை செலவிடும் வாய்ப்புகள் கிடைக்கும்.மொத்தத்தில் இந்த மாதம் தொழில் ரீதியாக நன்றாக இருக்கும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

மீனம்

மீனம் ராசிக்காரர்களே, இந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அதிர்ஷ்டம் கொண்டதாக இருக்கும். இந்த மாதத்தில் நிறைய பணத்தை சம்பாதிப்பீர்கள். சாதனைகள் பலவற்றை சாதிப்பீர்கள், எதிர்பாராத பணம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. பணி செய்பவர்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றை பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. மொத்தத்தில், பிப்ரவரி மாதத்தில் மீன ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்படும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories