Thursday, July 10, 2025
Homeஸ்நாக்ஸ்கேரளா ஸ்பெஷல் சுவையான நேந்திரம் பழம் பஜ்ஜி இப்படி செய்து பாருங்க! இதன் சுவையே தனி!!

கேரளா ஸ்பெஷல் சுவையான நேந்திரம் பழம் பஜ்ஜி இப்படி செய்து பாருங்க! இதன் சுவையே தனி!!

Date:

- Advertisement -

மழைக்காலத்தில் அல்லது டீக்கடைகளில் நமக்கு பிடித்தமானது வடை அதுவும் சூடான சுவையான வடை என்றால் யாருக்குத்தான் பிடிக்காமல் போகும் அதிலும் பஜ்ஜி என்றால் சொல்லவா வேண்டும் பஜ்ஜியை அதிலும் யாரேனும் சாப்பிட்டால் நாம் வாழைக்காய் பஜ்ஜி சாப்பிடுவோம்.

கத்திரிக்காய் உருளைக்கிழங்கு இது போன்ற பல்வேறு வகைகளை சாப்பிட்டு இருப்போம் கேரளா ஸ்டைலில் செய்யும் நேந்திரம் பழம் பஜ்ஜி ஒருமுறை சாப்பிட்டு பாருங்க சுவையோ சுவையாக பஜ்ஜி இருக்கும்,குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நேந்திரம் பழம் பஜ்ஜி விரும்பி சாப்பிடுவார்கள்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Nenthiram Palam Bajji Receipe in Tamil
Nenthiram Palam Bajji Receipe in Tamil

அட்டகாசமான அருமையான சுவையில் இருக்கும் இதை செய்வதும் சுலபம் சாப்பிடுவதற்கும் சலிக்கவே சலிக்காது எத்தனை முறை செய்து கொடுத்தாலும் அசராமல் உண்பார்கள்.அதனால் இன்று இந்த நேந்திரம் பழம் பஜ்ஜி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என எல்லாவற்றையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் பார்க்கலாம் வாருங்கள்.

Read Also : கிவி பழம் சாப்பிடுவதால் உடலுக்கு இத்தனை தீமைகளா..?

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய கண் கரண்டி

தேவையான பொருட்கள்

  • 3 நேந்திரம் வாழைப்பழம்
  • 2 cup கடலை மாவு
  • 1 tbsp அரிசி மாவு
  • ½ tbsp மிளகாய் தூள்
  • ¼ tsp சோடாஉப்பு
  • எண்ணெய் பொரிப்பதற்கு
  • தண்ணீர்
  • தேவையான அளவு உப்பு

செய்முறை | Nenthiram Palam Bajji Receipe in Tamil

நேந்திரம் பழம் பஜ்ஜி செய்வதற்கு முதலில் வாழைக்காயை தோல் சீவி நீளமாக சீவி கொள்ள வேண்டும்.ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய் தூள், சோடா உப்பு மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

அவற்றில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சுட வைக்க வேண்டும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

பின்னர் சீவி வைத்துள்ள வாழைக்காயை ஒவ்வொன்றாக எடுத்து கலவையில் பிரட்டி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். பின் வாழைக்காய் பஜ்ஜி ஒரு புறம் வெந்தவுடன் மறுபுறம் திருப்பி விட வேண்டும்.

பின் பஜ்ஜி வெந்தவுடன் எண்ணெயை வடிகட்டி ஒருபாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது சூடான வாழைக்காய் பஜ்ஜி ரெடி.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Read Also : சுவையான தக்காளி குருமாவை செய்வது எப்படி?

Nutrition | Nenthiram Palam Bajji Receipe in Tamil

Serving: 400gm | Calories: 623kcal | Carbohydrates: 32g | Protein: 32g | Calcium: 12mg | Sodium: 322mg | Potassium: 1209mg | Cholesterol: 12mg |Sugar: 4.9g

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories