Nataraja Swamy : தமிழ்நாட்டில் எங்குமே இல்லாத பெண்கள் மட்டும் பங்குப்பெற்று இறைவனை பல்லக்கில் சுமக்கும் வினோத நிகழ்வு, ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கடலங்குடி சிவாலயத்தில் நடராஜர் சுவாமியை பல்லக்கில் பெண்கள் மட்டும் தூக்கி செல்லும் விழா நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கடலங்குடியில் புகழ் பெற்ற அருள்மிகு ஸ்ரீ கச்ச பரமேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜர் சிலைக்கு பஞ்ச திரவியம் கொண்டு சிறப்பு அபிழேகமும் ஆராதனையும் நடைபெற்றது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Watch video : கேப்டனின் சினிமா வாழ்க்கையும்.. அரசியல் வாழ்க்கையும்… விஜயராஜ் விஜயகாந்த் ஆக மாறியது ..

Nataraja Swamy | சிவாலயத்தில் நடராஜர் சுவாமியை பெண்கள் மட்டும்…!!
மேலும் இந்த கோவிலில் பெண்கள் உதவியால் கும்பாபிழேகம் நடைபெற்றதால் இந்த கோயிலில் தனி முக்கியத்துவம் பெண்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நடராஜர் சிலைக்கு மாலைகள் அணிவித்து தீப ஆராதனை காட்டப்பட்டது. பின்பு வழிபாட்டிற்கு வந்த பெண்கள் நடராஜர் பெருமானை பல்லக்கில் தூக்கிக்கொண்டு ஆலயத்தில் உள்ள பிரகாரங்களில் ஊர்வலமாக சுற்றி வந்தனர்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
மேலும், இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு நடராஜர் சுவாமியை தரிசனம் செய்தனர். இங்குள்ள சாமி சிலையை பெண்கள் மட்டும் பல்லக்கில் தூக்கிக்கொண்டு வருவது இந்தக்கோயிலில் மட்டும் நடக்கும் அபூர்வ நிகழ்வு என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
Read Also : ஸ்ரீ ருக்மணி சத்யபாமா ஸ்ரீ செங்கமல நாயகி ஸ்ரீ ராஜகோபால பெருமாள் ஆலய வைகுண்ட ஏகாதசி விழா
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇