Friday, July 11, 2025
Homeசைவம்சத்தான சிறுதானிய முருங்கை கீரை அடை..

சத்தான சிறுதானிய முருங்கை கீரை அடை..

Date:

- Advertisement -

தென்னிந்தியாவின் மிகப் பழமையான உணவு வகைகளில் தோசையும் ஒன்று. குறிப்பாக தமிழர்களின் பாரம்பரிய உணவுலிஸ்டில் முக்கிய இடம்பெற்றுள்ளது இட்லியும் தோசையும் தான். அதில் பல வீடுகளில் குழந்தைகளின் விருப்பமாக உள்ளது தோசை தான். இவை மிகவும் பிரபலமான மற்றும் பலரால் விரும்பி சாப்பிடப்படும் காலை உணவு. இதை மிக எளிதாக செய்துவிடலாம். அதுமட்டுமின்றி தோசை உடல் பருமனை கூடுதலாக்கும் பொருட்களையோ அல்லது உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் எந்த ஒரு பொருட்களையோ கொண்டவை அல்ல. மேலும் இவை ஈஸியான மற்றும் எளிதாக செய்து முடிக்க கூடிய ஒரு உணவு வகை.

தோசையில் நிறைய வகை உண்டு அதில் நாம் இன்று இங்கு பார்க்க போவது மிகுந்த சுவையான மற்றும் வித்தியாசமுள்ள சிறுதானிய முருங்கை கீரை அடை தோசை. நாம் அன்றாடம் சாப்பிடக்கூடிய காலை உணவினை சத்தானதாக சாப்பிட்டால், நாம் அன்றைய நாள் முழுவதும் உற்சாகமாக மற்றும் புத்துணர்ச்சியாக இருக்கலாம். அப்படி சத்தான உணவுகளை சமைக்க வேண்டுமென்றால் சிறுதானியங்கள் சேர்த்து காலை உணவை செய்வது தான் சிறந்ததாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் சாப்பிட உகந்தவை இந்த சிறுதானிய உணவுகள்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Murungai Keerai Adai
Murungai Keerai Adai

கேழ்வரகு, கம்பு, தோசை, வரகரிசி, தினை, சோளம் மற்றும் கேப்பை என சிறுதானிய உணவுகள் உடலுக்குச் சக்தியையும், நோயற்ற வாழ்வையும் கொடுக்கக்கூடியவை. எளிதில் செரிமானமாகும் சிறுதானியங்களை பயன்படுத்தி செய்யும் அடை சாப்பிடுவதன் மூலம், உடலில் சத்துக்களை அதிகரிக்கலாம். சிறு தானியங்கள் அளவில் சிறிதாக இருந்தாலும், அரோக்கியத்தில் பெரிய அளவில் பலன்களை கொடுக்கும். அப்படிப்பட்ட சிறுதானியத்தை சேர்த்து சத்தான முருங்கை கீரை அடையை எப்படி ருசியாக செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தக்காளி தொக்கு சாதம் செய்வது எப்படி? ட்ரை பண்ணி பாருங்களேன் ! ஒரு பிடி சாதமும் மிச்சம் இருக்காது!

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Equipment for Murungai Keerai Adai

  • 1 பவுள்
  • 1 தோசை கல்
  • 1 கிரைண்டர்

தேவையான பொருட்கள்

  • 1/4 கப் வரகு
  • 1/4 கப் கம்பு
  • 1/4 கப் தினை
  • 1/4 கப் குதிரைவாலி
  • 1/4 கப் சாமை
  • உப்பு தேவையான அளவு
  • நல்லெண்ணெய் தேவையான அளவு
  • 4 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  • 2 கப் முருங்கை கீரை
  • 4 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி, புதினா
  • 20 வர ‌மிளகாய்
  • 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 1 கப் இட்லி அரிசி
  • 1/4 கப் உளுத்தம் பருப்பு
  • 1/2 கப் துவரம் பருப்பு
  • 1/4 கப் கடலை பருப்பு
  • 1/4 கப் ஜவ்வரிசி

செய்முறை

முதலில் குதிரைவாலி, தினை, வரகு மற்றும் கம்பு, சாமை போன்றவற்றை தண்ணீரில் அலசி விட்டு ஊற வைத்து கொள்ள வேண்டும்.

பின் துவரம் பருப்பு, கடலை பருப்பு, இட்லி அரிசி, உளுந்து, ஜவ்வரிசி மற்றும் வர ‌மிளகாய் இவைகளை தனியாக ஊற வைத்து கொள்ள வேண்டும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

பின் கிரைண்டரில் முதலில் மிளகாய் மற்றும் பருப்பை சேர்த்து நன்றாக அரைத்துக் கொண்டு. பின் சிறுதானியங்களை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் மாவை ஒரு பவுளுக்கு மாற்றி அதனுடன் உப்பு, பெருங்காயம், பொடியாக நறுக்கிய கொத்த மல்லி, புதினா, முருங்கை கீரை மற்றும் தேங்காய் துருவல் போட்டு 1 மணி நேரம் வரை மூடி வைத்து கொள்ளவும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

பின் அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் அதில் ஒரு கரண்டி மாவை அடையாக்கி நல்லெண்ணெய் விட்டு இருபுறமும் சுட்டு எடுத்துக் கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான சிறுதானிய முருங்கை கீரை அடை தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 182kcal | Carbohydrates: 6g | Protein: 12.8g |Saturated Fat: 1.5g | Potassium: 309mg | Fiber: 8g | Vitamin A: 90IU | Vitamin C: 171mg | Calcium: 46mg | Sodium: 53mg | Fat: 4.3g | Iron: 7.5mg

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

கிவி பழம் சாப்பிடுவதால் உடலுக்கு இத்தனை தீமைகளா..?

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories