Mansoor Urukkam at Captain’s Tribute : தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் 19/01/2024 லில் கேப்டன் விஜயகாந்துக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் மன்சூர் அலிகான் பேசியது நெஞ்சை உருக்குவதாக அமைந்தது. அவரின் பேசியதிலிருந்து சில பகுதிகள்…

Mansoor Urukkam at Captain’s Tribute
கேப்டன் விஜயகாந்தினுடைய ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். நாலஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே நாங்க செத்துப் போயிட்டோம். எப்போ அண்ணன் கேப்டன் உடல்நிலை எல்லாம் மோசமாகி, அது என்ன ட்ரீட்மெண்ட் ஏதுன்னு எங்களுக்கு சொல்லவில்லை.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
அந்த மனவருத்தமிருக்கு. அதை இங்க பேசுவதுல பயனில்லை. என்னால தாங்க முடியல. பார்க்க முடியல. அந்த மாமனிதருக்கு ஏன் இப்படி ஒரு சோதனை வந்துச்சுன்னு தெரியல. அவர் நடிகர் சங்கத் தலைவராக இருந்த போது செயற்குழு உறுப்பினரா இருந்தேன். கேப்டன் எப்பவும் சிரிச்சிக்கிட்டு இருப்பாங்க.
Read Also : அவர்தான் சூப்பர்ஸ்டார்!. விஜயகாந்த் நிகழ்ச்சியில் பற்ற வைத்தார் கருணாஸ்!.. என்ன நடக்குமோ !..
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
கடன் எதுவும் வாங்காமால், அவர் பாதையில மொய்விருந்து வச்சி எந்த செலவும் பண்ணாமால், அதுல வர்ற வருமானத்தை வச்சி நடிகர் சங்க கட்டடத்தை வலுப்படுத்தலாம். கேப்டன் இருக்கும்போது நடிகர் சங்கம் ராணுவ பலத்தோடு இருந்தது. அதே போல இனியும் நாம கொண்டு வரணும். மொய்விருந்தில் சைவம், அசைவம் என்று தனித்தனியாக வைக்க வேண்டும் என்று மன்சூர் அலிகான் ஆலோசனை கூறினார். மன்சூர் அலிகான் பேசியதை கேட்ட விஜயகாந்த் மகன்கள் இரண்டு பேரும் கைதட்டி ரசித்தனர்.
வழக்கமாக நடிகர் மன்சூர் அலிகான் பேசினாலே அதில் ஏதாவது வில்லங்கம் வந்து சேரும். ஆனால் கேப்டன் விஜயகாந்துடைய நெருங்கிய நண்பராக இருந்ததாலோ, என்னவோ அவரது நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசிய போது தெள்ளத்தெளிவாகப் பேசி பார்வையாளர்களை அசத்தினார். அப்போது மன்சூர் அலிகான் பேசிய கருத்துகளைக் கேட்டு நடிகர் சங்க செயலாளர் விஷால், அவரது பேசியதை கேட்டு ரசித்தார். மன்சூர் பேசி முடிக்கும்போது இதை விஷாலும், கார்த்தியும் செய்து முடிப்பார்கள் என நம்புகிறேன் என்றார்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
