Thursday, July 10, 2025
Homeபொழுதுபோக்குசின்னத்திரைMahanadhi Serial : புயல் அடிக்கும் நேரத்தில் ஷூட்டிங் தேவைதானா ? விமர்சனங்களுக்கு உள்ளான விஜய்...

Mahanadhi Serial : புயல் அடிக்கும் நேரத்தில் ஷூட்டிங் தேவைதானா ? விமர்சனங்களுக்கு உள்ளான விஜய் டிவி சீரியல். Trpயை காப்பாற்ற இப்படியா?

Date:

- Advertisement -

Mahanadhi Serial : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் மகாநதி சீரியலும் உள்ளது. இந்த சீரியலில் நான்கு சகோதரிகளை மைய கதையாக கொண்டு கதை நகர்கிறது. இந்த தொடரில் சந்தானம் என்கிற சரவணன் தன் குடும்பத்தை விட்டு துபாயில் வேலை செய்து வருகிறார். சரவணனுடைய குடும்பத்தினர் கொடைக்கானலில் வசித்து வருகிறார்கள். இந்த சீரியலில் ஹீரோ நிவின் காவிரியை பார்த்தவுடன் காதல் வசப்படுகிறான். அவர்கள் இருவரும் காதலிப்பது ஒரு பக்கமாக இருக்கின்றது.

Mahanadhi Serial
Mahanadhi Serial

மற்றொரு பக்கம் பசுபதியை காவேரி குடும்பத்திற்கு துரோகங்கள் செய்து விடுகிறார் .இதை அனைத்தையும் காவேரி தெரிந்து கொள்கிறாள். இதை பற்றி தெரிந்து கொண்ட பசுபதி தன் மகள் ராகினியை நிவினுக்கு திருமணம் செய்வதற்கு முயற்சி செய்து வருகிறார். ஆனால் காவேரியும் நிவினும் பசுபதியின் உண்மையான முகத்தை மக்களுக்கு அம்பலப்படுத்துகிறார்கள் பின் தன்னுடைய அப்பா சம்பாதித்த பணத்தை வாங்கி கொண்டு காவேரி குடும்பம் ஊரை விட்டு வெளியேறுகிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

மகாநதி தொடர் :

பின் சந்தானத்தின் கடைசி மகள் நர்மதாவிற்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலையால் அவர்கள் சென்னையில் ஒரு வாடகை வீட்டில் தங்கி இருக்கிறார்கள் .அந்த வீட்டின் உரிமையாளர் பெயர் விஜய், அவரும் அவரும் பசுபதி இடம் சண்டை போட்டு காவேரி குடும்பத்தினருக்கு ஆறுதலாக உள்ளார். குமரனின் அக்கௌண்டில் உள்ள பணம் யாரும் எதிர்பாராத விதமாக தொலைந்து போகிறது. இதனால் நர்மதா சிகிச்சைக்கு பணம் இல்லாமல் இருக்க வேறு வழி இன்றி காவேரி, விஜய்யிடம் ஒரு வருட கான்ட்ராக்ட் திருமணத்திற்கு ஒப்புக்கொள்கிறாள்.

Mahanadhi Serial
Mahanadhi Serial

சீரியல் ட்ராக் :

நர்மதாவின் அறுவை சிகிச்சை நல்லபடியாக நடக்க வேண்டும் என்று காவேரி விஜய்யை திருமணம் செய்து கொண்டு அவரது வீட்டிற்கு செல்கிறாள். இதனை பார்த்த விஜய் வீட்டார் அனைவரும் அதிர்ந்து போகிறார்கள். காவேரிக்கு திருமணம் நடந்தது தெரிந்த நிவின் மனம் உடைந்து போகிறான். காவேரியின் இந்த கல்யாணம் நீடிக்குமா? விஜய் -காவேரி இருவருக்கும் காதல் மலருமா? உண்மையை நவீன் தெரிந்து கொள்வாரா? என்ற அதிரடியான பல திருப்பங்களுடன் கதை சென்று கொண்டிருக்கிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Mahanadhi Serial தொடரில் நடிகை மாற்றம்

மேலும், மகாநதி தொடரில் கங்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த பிரதீபா விலகி அவருக்கு பதிலாக தற்போது இவருடைய கதாபாத்திரத்தில் பாக்கியலட்சுமி தொடர் நடிகை திவ்யா கணேஷ் நடிக்கிறார். இந்த நிலையில் சில நாட்களாக மிக்ஜாம் புயல் சென்னையை புரட்டி போட்டு கொண்டுள்ளது. இதனால் பல மக்கள் பாதிக்க பட்டு பெரும் சேதத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நேரத்தில் ஷூட்டிங் என்று நடிகை திவ்யா கணேஷ் பகிர்ந்து இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலருமே Trpயை தக்க வைக்க இப்படியா செய்வது என கிண்டல் செய்து வருகிறார்கள்.

மிக் ஜாம் புயல் :

தமிழகத்தை சில தினங்களாகவே மிக் ஜாம் புயல் புரட்டி போட்டு கொண்டிருக்கிறது. இந்த புயல் வங்க கடலில் உருவாகி இருக்கிறது. இந்த புயலின் காரணமாக சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் மிக அதிகமான மழை பெய்து இருக்கிறது .கனமழையின் காரணமாக சென்னையில் உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துகொண்டது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். போக்குவரத்து வசதிகளும் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. நேற்று காற்றின் வேகம் குறைந்து மழை பெய்யும் அளவும் குறைந்துள்ளதால் மீட்பு பணிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Read Also : நடிகர் தளபதி விஜய் வந்து இறங்கியது Car இல்ல BMW தேர் !

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories