Maha Kudamukku Festival : அருள்மிகு அழகு அய்யனார் ஆலய மகா குடமுழுக்கு விழா. குத்தாலம் அருகே கோனேரிராஜபுரம் ஊராட்சி வைகல் கிராமத்தில் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துள்ளனர்.

Maha Kudamukku Festival
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கோனேரிராஜபுரம் ஊராட்சி வைகல் கிராமத்தில் அருள்மிகு அழகு அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருப்பணிகள் முழுவதும் செய்து முடிக்கப்பட்டு குடமுழுக்கு விழாவானது கடந்த 14ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை, தேவதா அனுக்ஞை தீபாராதனையுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான குடமுழுக்கு விழாவானது 15/02/2024 காலை நடைபெற்றது.முன்னதாக இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் முடிந்து பூர்ணாகுதி நடைபெற்றது. அதன் பிறகு மகாதிபராதனை காண்பிக்கப்பட்டது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதையும் படிங்க : கமல்ஹாசன் நடித்ததில் சிறந்த ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படங்கள்!
பின்னர் பூஜிக்கப்பட்ட கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு ஆலயத்தை சுற்றி வந்து விமான கலசத்தை அடைந்தது.அதனைத் தொடர்ந்து வேத மந்திரங்கள் ஓத விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா குடமுழுக்கு விழாவானது நடத்தி வைக்கப்பட்டது.இதே போன்று மூலவர் குடமுழுக்கு விழா நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை வைகல் கிராம வாசிகள், நிர்வாக குழுவினர்கள், நாட்டாண்மைகள், குலதெய்வக்காரர்கள் அனைவரும் சிறப்பாக செய்திருந்தனர்.
இதையும் படிங்க : நாகப்பட்டினத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழா
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇