Friday, July 11, 2025
Homeசட்னிதேங்காய், தக்காளி சேர்க்காமல் மதுரை நீர் சட்னி செய்வது எப்படி? 2 இட்லி கூடுதலாக சாப்பிடுவாங்க..!

தேங்காய், தக்காளி சேர்க்காமல் மதுரை நீர் சட்னி செய்வது எப்படி? 2 இட்லி கூடுதலாக சாப்பிடுவாங்க..!

Date:

- Advertisement -

Madurai Special Neer Satni Recipe : அன்பான நண்பர்களே வணக்கம், பெரும்பாலும் நம் எல்லோருடைய வீட்டிலும் காலை உணவு இட்லி, தோசையாக தான் இருக்கும். அப்படி தினமும் இட்லி தோசை சாப்பிடு எல்லோருக்குமே அலுத்து போயிருக்கும், ஆனால் தினமும் தோசை, இட்லிக்கு ஒரே சட்னியாக இருந்தால் என்ன செய்வது வாழ்க்கையே வெறுத்து போவது போல இருக்கும் அல்லவா..!

Madurai Special Neer Satni Recipe
Madurai Special Neer Satni Recipe

அதற்காக வீட்டில் உள்ள இல்லத்தரசிகள் தினமும் விதவிதமான சட்னி செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் இன்று தேங்காய், தக்காளி சேர்க்காமல் மதுரை நீர் சட்னி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Madurai Special Neer Satni Recipe

நீர் சட்னி செய்ய தேவையான பொருட்கள்:

  • பச்சை மிளகாய் – 6
  • பொட்டுக்கடலை – 1/4 கப்
  • பெரிய வெங்காயம் – 3
  • எண்ணெய் – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு

அடுப்பில் கடாயை வைக்கவும், பின் அதில் எண்ணெய் தேவையான அளவு ஊற்றி கொள்ள வேண்டும். பின் அதில் 6 பச்சை மிளகாய் அல்லது உங்களுக்கு தேவையான அளவு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின் அதில் வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி அதில் போட்டு வதக்க வேண்டும்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பின் அதை அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்க வேண்டும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

மிக்சி ஜாரை எடுத்து கொள்ளவும்:

அடுத்து ஒரு மிக்சி ஜார் எடுத்து கொள்ள வேண்டும். பின் அதில் நாம் வதக்கி வைத்துள்ள பொருட்களை சேர்த்து கொள்ள வேண்டும். பின் அதனுடன் பொட்டுக்கடலை 1/4 கப் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு அரைத்து கொள்ள வேண்டும். ரொம்பவும் மிருதுவாக அரைக்க வேண்டாம். பின் அதில் போதுமான அளவு அதாவது தண்ணீர் 2 டம்ளர் சேர்த்து கொள்ள வேண்டும்.

தாளிக்க வேண்டும்:

பின் கடாயை அடுப்பில் வைக்க வேண்டும். அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும், பின் அதில் கடுகு, காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். அடுத்து சிறிதளவு வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கிய பின் நாம் அரைத்து வைத்திருக்கும் சட்னியை இதில் சேர்த்து கொள்ள வேண்டும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

அவ்வளவு தான் சட்னிதயார்..! நீங்கள் இந்த சட்னியை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்..! இன்னும் இரண்டு இட்லி வேண்டும் என வாங்கி சாப்பிடுவார்கள்.

Garlic Chutney Easy Method : இட்லி, தோசைக்கு இந்த நான்கு பொருட்கள் இருந்தால் போதும் (10) பத்து நிமிடத்தில் அருமையான சட்னி செய்யலாம்…

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories